Saturday, March 2, 2013

இந்தத் தொப்பி சரியானால் போட்டுக் கொள்ளுங்கள் . ( கீழே இரண்டு வேறுபட்ட சம்பவங்கள் ஆனால் ஒரே இலக்கை நோக்கி )



              "நாங்கள் சம்பிரதாய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல " இப்படிக் கூறுகிறார் 'கிரம விமலஜோதி தேரர் ' .'பொது பல சேனாவின் ' சமரச வாயிலை இவ்வாறுதான் குறிப்பிட்ட தேரர் முஸ்லீம்களுக்கு இனம் காட்டுகிறார் ! சரி அவர் குறிப்பிடும் சம்பிரதாய வழி என்ன ? என்பதில் முஸ்லீம்களில் பலருக்கு தேடல் தொடங்கியிருக்கும் காரணம் இதுதான் . அந்த இடத்தில் இருந்து' அஹ்லாக்கோடு ' இன்னொரு தேசிய முன்மாதிரியை காட்டி தீனை உயிர்ப்பிப்பது சிலவேளை இலங்கை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்கலாம் என்ற நப்பாசைதான் .

                            அந்த சம்பிரதாய வழி என்ன என்பதை கீழ் வரும் சம்பவம் எடுத்துச் சொல்கின்றது .பொத்துவில் முஸ்லீம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பௌத்த பன்சலையில் இருந்து காலையிலும் மாலையிலும் ஒலி பெருக்கிகள் மூலம் சொல்லப்படும்' பன' நிகழ்ச்சி அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு தடையாக உள்ளது என்ற முஸ்லீம் சமூகத்தின் கோரிக்கைக்கு ஒரு சமரசத் தீர்வை எட்டுமுகமாக அங்குள்ள அஸ்ரப் நினைவு மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

                                ஒரு இராணுவ அதிகாரியான கேர்ணல் கீர்த்தி குணசோமையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் குறித்த விகாரையின் அதிபதிகள் குறிப்பிட்ட கருத்து இதுதான் .அந்த பனையை சகல முஸ்லீம்களும் கேட்டு பயன் பெறவேண்டும் .பன்சலைக்கு வந்து முஸ்லீம்கள் சிலர் பிரித் நீரைப் பெற்று அதை பருகி வருகிறார்கள் ! நீங்களும்( உங்கள் மதத்தோடு உள்ளநிலையில் ) இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தால் நல்ல விளைவுகளை காண முடியும் .எனக் கூறினார்கள் . 

                   "நாங்கள் சம்பிரதாய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல " எனக் கூறிய  'கிரம விமலஜோதி தேரர் ' ரின் வார்த்தைகள் சொல்லும் அர்த்தம் சற்று தெளிவாகவே அப்போது என்னால் உணரப்பட்டது . 

No comments:

Post a Comment