Friday, June 14, 2013

'விலாங்கு மீன்' அரசியலும் நடப்பு நிகழ்வுகளும் சொல்வதென்ன ?


                           இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் படிமுறை மாற்றம் ஒரு   சாத்தியமான ,சரியான வழிமுறையாக சிந்திக்கப் பட்டும் அமுல் நடத்தப் பட்டும் வரும் இன்றைய காலப் பகுதியில் முஸ்லீம் சமூக சிந்தனா தரம் ஜாஹிலீய விருப்புகளால் ஆளப்  பட்ட போராட்ட ஒழுங்கில் தான் இன்னும் இருக்கின்றன என்பதை நடப்பு விவகாரங்கள் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன .



          தலைகீழ் மாற்றம் தொடர்பான நம்பிக்கையீனம் முஸ்லீம் புத்தி ஜீவிகள் மத்தியில் சிறுகச் சிறுக மாற்றம் என்ற கருத்தியலை வழிமுறையாக பின்பற்றத் தூண்டியது . இஸ்லாத்திற்கான அதிகாரம் ,சுதந்திர அமுலாக்கம் நோக்கிய இலட்சிய நகர்வில்  ஜாஹிலீய இடைக்கால மேலாதிக்கம் ஒரு அங்கீகரிக்கப் பட்ட இஸ்லாமிய தீர்வாக காலத்தை முன்னிறுத்தி சில ஆலிம்களால் முன் மொழியப் பட்டது .


          இந்த 'மொடர்ன் இஸ்லாமிசம்' குப்ரிய அகீதா கொண்ட நடப்பு ஆதிக்க அரசியலை தழுவுவது ,அது சொல்லும் வாழ்வியலை ஒரு 'ஹிக்மத்துக்காக' ஏற்றுக் கொள்வது என்று தொடங்கி , மெது ,மெதுவாக இஸ்லாமிய தீர்வுகளை நிகழ்கால குப்ரிய யாப்புகளின் உட் புகுத்தி அமுல் படுத்துவது எனும் திட்டமிட்ட நோக்கோடு அந்த இஸ்லாமிய அரசியலை நோக்கிய முஸ்லீம் அரசியல் முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் அமுலானது அந்த வகையில் துருக்கி அந்த தொடக்க விடம் என்று தயங்காமல் கூறலாம்  .

          ஆனால் 'ஹக்குக்காக ' சரிகானப்படும் இந்த' பாத்தில்  முஸ்லீம் புத்தி ஜீவிகள் தொடங்கி பாமரர் வரை ஒரு கவர்ச்சி கரமான   'சிஸ்டம்' ஆக நடைமுறை ஆகியது . இந்த ஆபத்தான அரங்கேற்றம் நஜ்முதீன் அர்பகான் 'முஸ்தபா கமால் அதாதுர்க்கின்' சிலைக்கு முன்னால் நின்று ஒரு 'ஹிக்மத்' பாணியில் 'பையத்' செய்து துருக்கியின் அதிகாரத்தை கைப்பற்றிய பின் ஒரு வெற்றிகரமான நாகரீகமாக தொடங்கி வைக்கப் பட்டது . இன்று அர்தூர்கான் வரை ஆல விருட்சமாக  வளர்ந்து விட்ட நிலையில் ,அதன் விதைப் பருவத்தில் இருந்தே சந்தித்த அதே சிக்கல்கள் 
இன்று பூதாகரமாக மறுபக்கம் வளர்ந்து விட்டது என்பதுதான் நடப்பு உண்மையாகும் . 

         'குப்ரை' இடைக்காலத்தில் சரிகாணுவது எனும் போது அதன் வாழ்வியலை சரியானதாக  அங்கீகரிக்க வேண்டும் எனும் 'ஹிக்மத் ' கோணத்தில் இருந்தே மக்கள் கவரப் பட்டார்கள் ! மதச் சார்பின்மை தொடங்கி திட்டவட்டமான இஸ்லாமிய வாழ்வியலின் 'ஹராமான 'விடயங்கள் கண்டும் காணாமல் விடப்பட வேண்டும், அல்லது இஸ்லாத்தால் சரிகாணப்பட வேண்டும் இத்தகு 'சமரச ஒப்பந்தம் ' எழுதப் படாமல் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நடந்தது என்பதுதான் உண்மை . எப்போதெல்லாம் இந்த ஒப்பந்தம் அரசால் மீறப்படுமோ அப்போதே எதிர்க் கட்சி முதல் , 'புட்போல் டீம் ' வரை போராட்டத்தில் இறங்குவார்கள் ,பரஸ்பர முரண்பாட்டு மோதல்கள் கொடூரமான வன்முறை வடிவமெடுக்கும் . இன்று நடப்பது அதுதான் .

             இந்த 'விலாங்கு மீன் ' அரசியல் மேற்குலகால் மிகுந்த வரவேற்பை பெற்றது .காரணம் இந்த நவீன இஸ்லாமிஸ்டுகளுக்கு 'ஹிக்மத்தாக ' தெரிந்த இந்த விடயம் நேற்று வரை முரண்பாட்டு அரசியல் பேசிய இஸ்லாமிய வாதிகளை தமது 'அகீதாவின் ' பிடியில் சிக்க வைக்கும்  ஒரு தெளிவான தூண்டிலாக தெரிந்ததே ஆகும் . ஒரு நோயுற்ற நாடாக காட்டி நின்ற காலம் போய் ,அபிவிருத்தியின் உதாரணமாக மேற்கின் மீடியாக்கள் துருக்கியை பேசின ! அதுவும் ஒரு 'புரபிட் அண்ட் பெனிபிட் பேசில்தான் '! என்பதை இன்ஷா அல்லாஹ் மறுமுறை சொல்கிறேன் .

        

No comments:

Post a Comment