Thursday, June 6, 2013


   இன்று உலகை ஆள்வது  முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .


   இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள் ,சமூகஉறவுகள் , சர்வதேசஉறவுகள், கல்வி , தொழில் ,நட்பு ,இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

   ஆனால் இந்த முதலாளித்துவம்  காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை  ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச  வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை, போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு  அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

 தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டதுதான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு  எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம்  ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரைஏமாற்றப்படுவோம். 



குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்பார்கள் குனியக் குனிய குட்டுபவன் மடையன் என்பார்கள் ; இங்கு இப்போது யாரும் எம்மை குட்டுவதில்லை ; மாறாக நாமே எமது தலைக்கு குட்டிக்கொள்கின்றோம்.அதன் கட்டளைகளை  முதலாளித்துவம் இடுகின்றது ! அவ்வளவுதான் .

No comments:

Post a Comment