Friday, November 14, 2014

அமெரிக்க தரப்பு சொல்லும் அம்புலிமாமா கதையின் உண்மை நிலை என்ன !? (ஒரு புரிதலுக்கான பதிவு )

    
    ஈராக் விவகாரத்தில் அண்மைய செய்திகள் ஒரு திட்டமிட்ட அரசியலின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான வடிவத்தை சுட்டுவதாக இருக்கிறது .வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற மேலோட்ட பார்வைகளை தாண்டிய ஒரு இரகசிய சூத்திரத்தின் நிறுவல் எனும் உண்மையாக நாளை அது காட்டி நிற்கலாம் .அது என்ன ?

          கடந்த இரு வாரங்களுக்கு முன் ஐ .நா .சபை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் தனது உறுதியான செயல்திட்டத்தை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது .அதேநேரம் 1500 துருப்பினரை ஈராக் அரசுக்கு சார்பாக ஐ .எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி களமிறக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

              அதோடு கடந்த சில தினங்களுக்கு முன் ஐ .எஸ் அமைப்பின் தலைவர் மற்றும் மூத்த ,இரண்டாம் ,மூன்றாம் நிலை தலைவர்களை குறிவைத்து அமெரிக்க கூட்டணி சார்பாக தாக்குதல் நடத்தும் (பிரித்தானிய ) போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் ,ஐ .எஸ் அமைப்பின் தலைவர் படுகாயம் அடைந்து சிரிய எல்லைக்குள் எடுத்து செல்லப்பட்டதாகவும் அமெரிக்க சார் ஊடகங்கள் அறிக்கை விட்டுள்ளது .

         ஈராக் ,சிரியா என இரு வேறுபட்ட காரணங்களை இந்த அறிக்கைகள் காட்டி நின்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு பொது அரசியலை இதன் உள்ளடக்கம் காட்டி நிற்கின்றது .அது சிரியாவின் விவகாரமாகும் .அப்படியானால் ஈராக் மற்றும் ஐ .எஸ் என்பன அதற்கான பிரேம் வேர்க் என்றால் அது மிகையான கணிப்பு ஆகாது .

     சூழ்நிலைகளை உருவாக்குவது ,உருவாகிய சூழ்நிலைகளை பயன்படுத்துவது நடப்பு அரசியலின் அடிப்படை விதி .சிரியாவின் விவகாரத்தை பொறுத்தவரை பசருள் ஆசாத்துக்கு எதிரான இஸ்லாமிய போராளிகள் ,குறிப்பாக அங்கிருந்த பலம் வாய்ந்த இயக்கங்கள் (அமெரிக்க ,ரஷ்ய ) ஏகாதிபத்திய தலையீட்டுக்கு பலத்த எதிர்ப்பை காட்டி நின்றனர் .இன்னும் தமக்கு இடையில் ஒற்றுமையையும் காட்டி நின்றனர் .இந்த நிலையே நடக்கப்போகும் ஆபத்தை முதலாளித்துவ சித்தாந்த வாதிகளுக்கு எடுத்துக் காட்டியது .

         ஒரு லிபரல் ஜனநாயகத்தோடு கூடிய ஆட்சி மாற்றத்தை சிரியாவில் ஏற்படுத்துவதில் அமெரிக்க ,ரஷ்ய தரப்புக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை .அரேபிய வசந்தத்தின் சிரியாவின் பகுதி புதிய விசுவாசிகளுக்கான நியமனங்களோடு தமது கரத்தில் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்தியங்கள் காய் நகர்த்தின.அங்கு ஏதாவது ஒரு பலம் வாய்ந்த போராளிக்குழு தம்மிடம் தஞ்சமடையும் என்றே நம்பியிருந்தனர் .ஆனால் நடப்பு அப்படி இருக்கவில்லை .

         இதன் காரணமாகவே அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலம் பசருக்கு எதிரான கண்துடைப்பு கண்டனங்களை அவ்வப்போது விட்டுக் கொண்டிருந்தது .இன்னும் எப் .எஸ் .எ. போன்ற லிபரல் வாத இயக்கங்கள் கூட அதன் முக்கிய தலைவர்கள் உட்பட பல போராளிகளை பலம்வாய்ந்த இயக்கங்களிடம் வளமாக காவு கொடுத்த பின்னே ஐ .நா வசமானது !

                அதே நேரம் இந்த இஸ்லாமிய போராளிகள் தெளிவாகவே ஒரு முடிவை அறிவித்து இருந்தனர் .அந்த அறிவிப்பு  பசரின் பிடியில் இருந்து சிரியா விடுவிக்கப்பட்ட பின்னர் .கிலாபா எனும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்க தகுதியானவர்களுக்கு உதவி கொடுப்போம் ;என்பதுவே அது ஆகும் .

         இத்தகு கருத்துப்போக்குகள் எல்லாம் முதலாளித்துவம் வகுத்துள்ள புதிய உலக ஒழுங்குக்கு சவால் விடும் அமைப்பில் இருந்தது .(இன்னும் இஸ்ரேலின் அடிவாயிற்றை கலக்கும்)இத்தகு அரசியலின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள புதிய திட்டமிடல்களை செய்ய வேண்டிய கட்டாயம் அமெரிக்க தரப்புக்கு இருந்தது .சிரிய கள நிலை பின்வருமாறு மாற்றப்படுகிறது .

 1. பழைய டயருக்கு பஞ்சர் போட்டு உருட்டும் அரசியலாக பசர் அல் அசாத் சமரசம் ஆகிறார் .   
 2.சிரிய விவகாரத்தை இருட்டடிப்பு செய்வதன் மூலம் முஸ்லீம் உம்மத்தின் கவனக்குவிப்பை திசை மாற்றுவது .
 3.அடுத்த கட்டமாக சிரியாவின் போராளிகளை கருத்து மாற்றங்களோடு துண்டாடுவது .என தனது வழமையான சூட்சுமங்களை இங்கும் கட்டவிழ்த்தது .

                   அமெரிக்க நிர்ணயங்களுக்கான சில சாதகக் குறிகளை போராளிகளும் வெளிப்படுத்தினார்கள் .இதன் அர்த்தம் அவர்கள் முதலாளிதுவத்துக்கு விலை போனார்கள் என்பதல்ல .அதாவது போராளிகள் என பேசிய உலகத்துக்கு பயங்கர வாதிகளாக பட்டமளிக்கும் விழாவுக்கு அந்த போராளிகள் கைகளாலேயே மேடை கட்ட வைக்கப்பட்டார்கள் என்பதே ஆகும் .

              ஐ .எஸ் தொடர்பான பிரமாண்டத்தையும் ,அச்சத்தையும் மிகையூட்டியே வளர்த்தது ஏகாதிபத்தியத்தின் மீடியாக்களே .நிஜத்தில் சிரியாவின் கள நிலவரம் பசர் அல் அசாத்துக்கு பாதகமாக இருந்த ஒரு முக்கிய கட்டத்தில் வைத்து அபூபக்கர் அல் பக்தாதியின் அமைப்பு ஈராக்கின் அரசை எதிர்க்க தலைப்பட்டது. இந்த அவகாசம் பசர் அல் அசாத்துக்கு தன் படைகளை மீள் கட்டமைக்கவும் ,தற்காப்பு நிலையை மீறி தாக்குதல் யுத்தம் தொடுக்கவும் ஏதுவாக இருந்தது .

              அதே நேரம் சிரியப் போராளிகள் ஒரு மரபு இராணுவ அணியாக தம்மை நிரூபித்து இருந்தார்கள் .எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்குவதற்கான கடப்பாடு அமெரிக்க அணிக்கு இருந்தது .பசரின் இராணுவ பலம் அதற்கு போதாது என்பதும் அமெரிக்க தரப்பு உணர்ந்த ஒரு விடயமாகும் .எனவே ஒரு இராணுவ பொறிமுறை ஊடான முற்றுகையை கொடுப்பது கட்டாயமாக இருந்தது .அதற்கு ஈராக் பயன்பட்டது.

         போராளிகளை  பயங்கரவாதிகளாக மாற்றும் காட்சிகளை வழமை போலவே ஏகாதிபத்திய மீடியாக்கள் செய்தன .அது உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இஸ்லாமிய பயங்கர வாதமாக விடயத்தை காட்டி நின்றது .இதன் மூலம்  சிரியாவை மையம் கொண்டுள்ள அணைத்து போராளிகளும் ஐ .எஸ் என்ற வட்டத்தினுள் இழுத்து வரப்பட்டனர் .இனி நடக்கப் போவது என்ன !? பொறுத்திருந்து பார்ப்போம் .

           ஆனாலும்   'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அங்கு தொங்கிய உடலை சுமந்து வந்தான் '....என என்றோ படித்த அம்புலி மாமா மாத இதழின் வேதாளம் சொல்லும் கதை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது .


No comments:

Post a Comment