
நம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில் நல்ல பேயை தேர்வது உலமாக்களால் காலத்தின் கடமையாக வேறு சொல்லப்படுகிறது .என்ன செய்வது பிணம் தின்னும் சாத்திரத்தில் தானே இரையாகும் ஏமாந்த ஜென்மங்களை ஜனநாயக தேசிய சிறுபான்மையில் தவிர வேறு எங்கும் காண இன்று முடியாது .
அது சரி விட்டுக்கொடுப்பு என்ற சரணடைவின் கீழ் இந்த முஸ்லீம் உம்மத் பலதை இழந்த காரணத்தை உணர முடிகிறதா !? அல்லது அஹ்லாக் என்பதே சமத்துவ வாழ்வுக்கான விட்டுக்கொடுப்பு என்ற இஸ்லாத்தை விற்று வாழ்வுப் பிச்சை வேண்டும் ஹிக்மத்தை இனியும் தொடர உத்தேசமா !?எந்தப் பேயும் பிணமே தின்னும் என்பதாக இருந்தால் அதில் ஒன்றை வெஜிடேரியன் என்று நம்புவது புத்திசாலித் தனமாகுமா !?
முஸ்லீம் ,இஸ்லாம் தொடர்பில் எந்த தாகூதின் இயல்பும் எப்போதும் ஒன்று தான் .எமது வாக்குகளால் ஆளை மாற்றலாம் அடிப்படைகளை மாற்ற முடியாது. வடிவங்கள் மாறிய அழிப்பும் அவமானங்களும் தொடரத்தான் போகிறது .மாறாவிட்டாலும் அது குரோதத்தின் நியாயமாகி தொடரத்தான் போகிறது .எப்படியோ பேய்க்கு பலியாகி பிணங்களாக முஸ்லீம் உம்மத் தயார் தான் .
No comments:
Post a Comment