Monday, February 25, 2013

உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் .


         கடந்த 12ம் திகதி 'பராக் ஒபாமா 'அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிய பின் முதல் தடவையாக பேசியபோது பின்வரும் கருத்தை வெளியிட்டார் . இந்தக் கருத்தின் பின்னால் உள்ள அரசியலை சற்று அலச வேண்டிய தேவை உள்ளது .


     "ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான (அமெரிக்க)  போர் ஆண்டு இறுதியில் (2013 டிசம்பரில் ) முற்றிலும் நிறுத்தப்படும்." (அப்படியானால் தாலிபான் இல்லாமல் போய் விடுமா ? அல் காய்தா அழிந்து விடுமா ? இந்த வினாக்களை மையப்படுத்தி சில ஆழமான பார்வை எமக்கு அவசியமானது .


     'புஸ் ' அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போதே ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்டது . 'ஒசாமாவை டார்கெட் ' பண்ணிய யுத்தம் ஒபாமாவின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது அப்பணியில் ஒரு அசத்தல் ஹீரோவாக ('ஒசாமா 'அழிப்பு கிளைமேக்ஸ் காட்சிகளை கடந்த வருடம் U .S சீல் கொமாண்டோக்கள் மூலமாக காட்சிப் படுத்தியதன் பின்னர்) அமெரிக்கர்கள் மத்தியில் வலம் வந்தார் .


   இப்போது தெற்காசிய கள நிலவரத்தில் ஆப்கானை மையப்படுத்திய பொருளாதார ஒப்பந்தங்கள் யாவும் அமெரிக்க மற்றும் அவர்கள் சார்ந்த கூட்டு அமைப்புகளிடம் ஏறத்தாள வந்து விட்டன . ஆப்கானில் தனது இராணுவ சேவைகள் தொடர்பான பகிர்வு பற்றிய அரசியல் நகர்வுகளுக்குள் தகுதியான படை திரட்டளுக்கு தெற்காசிய வளைய நாடுகளை நிர்ணயிப்பது சிறந்த முடிவாக இருக்கும் என அமேரிக்கா எதிர்பார்க்கலாம் .'ப்ளேக் வாட்டர் ' போன்ற கூலிப்படைகளை விட குறைந்த செலவில் தற்போது போர் முடிந்த நிலையில் சம்பளம் ,பராமரிப்பு செலவு என்ற அளவில் அல்லாடிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாட்டு இராணுவங்கள் சில நேரம் அந்த இடத்தை நிரப்ப தகுதியானவை எனும் கடைக்கண் பார்வையும் அமெரிக்காவுக்கு உண்டு .


                                          இத்தகு கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாக இலங்கை தொடர்பில் ஐ .நாவின் பிரசன்னம் சற்று அதிகமாகவே இப்போது உள்ளது . அதாவது 'யானை வருவதற்கான மணியோசை ஆக இன்றைய நிலையை 
கருத முடியும் . இத்தகு நிலையை தவிர்க்க சீனா ,இந்தியா என்பன தமக்கு உதவும் என இலங்கை அரசு கருதினாலும் சூட்சுமமாக ' ஆப்கானுக்கு படை அனுப்புவது குறித்தும் சிந்திப்போம் ' என தம் மீது வைக்க இருக்கும் 'செக்' இலிருந்து தப்பிக்க அமெரிக்க எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும் இலங்கையின் ஆளும் தரப்பு கருத்துக்களை வெளியிடுகின்றது .



    " புகை அடித்தாவது கனிய வைப்போம் என்பது அமெரிக்க முடிவு" ,"தவிர்க்க முடியா விட்டால் நாமாகவே நழுவி உங்கள் கைகளில் விழுவோம்" என்பது இலங்கையின் அண்மைய சூட்சும பதில்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் . இலங்கையில் அமைக்கப் படவுள்ள இந்திய அனல் மின் நிலையம் ,மற்றும் பெருந் தெருக்கள் தொடங்கி , புதிய சுதந்திர வர்த்தக வளைய நிறுவலுக்கான சீன முதலீடுகளை மீறி .அமெரிக்க சூத்திரங்கள் இலங்கையில் நிறுவப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .



No comments:

Post a Comment