Sunday, March 30, 2014

சே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறான் !?


 (இன்று பல முஸ்லீம் இளைஞ்சர்கள் புரிந்தும் புரியாமல் இந்த சே குவரா என்ற கம்பியூனிச புரட்சியாளனின் புகைப்படத்தை தமது 3 வீலர்களில் அலங்காரமாக்கி யுள்ளனர் . புரட்சி என்றவுடன் சே யும் கியூபாவும் பொலிவியாவும் பலரால் உணரப்படுவது போல அல்லாஹ்வின் தூதரும் (ஸல் ) மதீனாவும் முஸ் அப் இப்னு உமைரும் (ரலி ) நினைவுக்கு வருவதில்லை .இந்தக் கவலை ஒருபுறம் இருக்கின்றது .

                  ஆன்மீகப் பெறுமானத்தோடு மட்டும் பார்க்கப்படும் மத வியாக்கியானத்தினுள் முஸ்லீம்களுக்கு இஸ்லாம் பயிற்றபட்டிருப்பதால் முதலாளித்துவம் கொடுத்த அந்த மாய உலகில் எதோ முஸ்லிமாக இஸ்லாத்தை சித்தாந்தப் பெறுமதி அற்று ஜீரணிப்பதில் மட்டுமே உம்மத் கவலை கொள்கின்றது .

                  ஆனால் முதலாளித்துவ மேற்கு தன்னை எதிரியாக பார்த்த ஒரு கம்யூனிச  சித்தாந்தப் போராளியை தனது அரசியலுக்காக எவ்வாறு இன்று பிரயோசனப் படுத்தியுள்ளது !?என்பதை நாம் புரிந்து கொண்டால் மேற்கு எதிர்பார்க்கும் வடிவத்தில் இஸ்லாத்தை வரையத் துடிக்கும் முஸ்லீம்கள் முதலாளித்துவ கபடத்தில் அகப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை  அப்பட்டமாகிறது .    

                அந்த வரிசையில் இலங்கையின் ஜே .வி .பி எனும் கம்யூனிச சித்தாந்திகள் ,முதலாளித்துவ எகாதிபத்தியத்துக்குள் கரைந்த நிலையில் ஒரு முரண்பாட்டு ஜனநாயகத்தை பேசிச் செல்வதன் அரசியல் தோல்வி பல முஸ்லீம்களால் உணரப்படுவதில்லை . இத்தகு தவறுகளை உணர்த்த இந்த கீழ்வரும் பதிவு உதவலாம் . இன்ஷா அல்லாஹ். )      

“சே குவரா” என்ற பேயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்? அழுக்கு துணிகள் உடுத்தி, லேசான தாடியுடன்,கண்களில் புன்னகையுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் நினைவுக்கு வருவன். சேகுவார என்ற இந்த பெயரும், அந்த உருவமும், புரட்சி என்பதற்கான குறியீடு.

சேகுவரா படத்தை டிசர்டில் போட்டுகொண்டால் அது போராளியின் அடையாளம். ”ஆம் நான் ஒரு போராளி” என்று உலகிற்கு உணர்த்த ஒரே வழி சேகுவரா டிசர்ட். நான் மற்றவரிடமிருந்து மாறுபட்டவன் என்று காட்ட பலர் டீசர்டில் சேகுவரவையும், கையில் பொலிவியன் டைரி எனும் புத்த்கத்தையும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

சே பிறப்பால் ஒரு அர்ஜென்டினன், ஆனால் அவன் போராடியது க்யுபா விடுதலைக்காக. நடுவில் காங்கோவில் போரடியுள்ளான். தனக்கு கொடுக்கபட்ட மந்திரி பதவியை துறந்து, பொலியவியவிற்கு சென்று புரட்சி செய்ய முனைந்தவன். அங்கே துரோகிகளால் காட்டிகொடுக்கபட்டு தந்திரமாக சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் இறப்பு பொலியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை!

ஒரு காலத்தில் தான் மூர்கமாக எதிர்த்த அமெரிக்க, இப்பொழுது சேகுவரவை புரட்சியளானாக காட்டுவதை பார்க்கமல் சென்றுவிட்டான். தன்னை கொலைகாரன், காமுகன், காட்டுமிரண்டி என்று உயிருடன் இருக்கும் போது விளித்த பல முதலாளித்துவ நாடுகள் இன்று அவனை புரட்சிகாரனாக சித்தரித்துக்கொண்டிருக்கிறது.

கொஞ்சம் இருங்கள்.

ஏன் சே குவரவை இன்று மொத்த முதலாளித்துவ நாடுகளும் கொண்டாடுகின்றன? அவன் முதலாளித்துவ எதிரி, சே ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவன்,அதை அழிக்க நினைத்த்வன், அதற்காக சாகும் வரை போராடியவன். ஆனால் அவனை இன்று ஏகாதிபத்தியம் கொண்டாடுகிறது அல்லது கொண்டாட அனுமதிக்கிறது. அவன் கம்யூனிஸ்ட்  வேறு.

இதே அமெரிக்கா கம்யுனிஸ்ட்கள் என்று பயந்து சிகப்பு டை கட்டியவர்களை கூட சிறையில் போட்டு சித்திரவதை செய்திருக்கிறது. ஆனால் சேகுவரவை இன்று புரட்சிகாரனாக சித்திரிக்கும் வேலையையும் செய்கிறது? என்ன அதிசியம்

கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் ஐநாவில் இலங்கைக்கு எதிரான காகித தீர்மானத்தை அமெரிக்க கொண்டு வந்தது.அமெரிக்க என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்த கியூபாவை  பார்த்து தமிழனவாதிகள். கம்யுனிஸ்டுகளே இப்படி தான் என்று பேஸ்புக்கில் பொங்கிவிட்டார்கள். கியூபா  கம்யுனிஸா நாடு என்பது உண்மையானல் சே கம்யுனிஸ்ட் தான். சே கம்யுனிஸ்ட் என்பது உண்மையானால், அமேரிக்கவிற்க்கு வேண்டியது இந்த கம்யுனிஸ்ட் தான்.

அரசின் மீது கோபம் வரும்போது, மக்கள் ஒருங்க இணைந்து அந்த அமைப்பை தூக்கி போட தயாரகும் போது. அந்த அமைப்பை காப்பாற்றவும், மக்களின் கோபத்திற்கு வடிகாளாகவும், இருக்க அதிகாரம் மிக்க அரசுகளுக்கு உதவி புரியும் சீர்திருத்தவாதிகள் தான், காந்தி, மன்டேலா, அன்ன ஹசரே என்றால். கோபக்கார இளைஞர்களை காயடிக்க உதவும் போரட்ட வடிவம் தான் சேகுவாரா’விசம்’.

சே குவராவின் போராட்ட வடிவம் எளிமையானது. நான்கைந்து, முடிந்தால் 40, 50 கோபக்கார இளைஞர்கள் ஒன்று திரண்டு கொரில்லா ராணுவம் அமைத்து சில பல சண்டைகள் போட்டு அரசை கைப்பற்றுவார்கள். இதில் மக்கள் பார்வையாளர்கள். இந்த ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவி செய்தால் போதும். அரசை இவர்கள் கைபற்றியவுடன் மக்களுக்கு தேவையான நல்லதுகளை செய்வார்கள். நடுவில் அரசு இவர்களை அழித்துவிட்டால் . டிசர்டில் போட்டோவாகிவிடுவார்கள்.

க்யுபா எனும் சிறு நாட்டில் வெற்றிபெற்ற இந்த முறை அதன் பின் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மற்ற இடங்களில் இந்த முறை வெற்றி பெற்றதாக வெளியில் சொல்லபட்டது, ஆப்ரிக்கவிலோ, சில அரபு நாடுகளிளோ, நாட்டின் வளத்தை ஏகதிபத்தியங்களுக்கு விற்று சில கொரில்லா குழுவினர் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் ஆட்சியை பிடித்தனர்.அது தான் உண்மை.

உண்மையில் சேவின் இந்த முறை அவரை பொலிவியாவில் கொன்று போட்டது. சே துப்பாக்கி தூக்கிய போது பார்வையாளாராக இருந்த மக்கள், சேவின் பிணத்தை பார்பதிலும் பார்வையாளாராக இருந்தார்கள்.

மக்கள் பங்கேற்பில்லாதா இந்த போர் முறை இயல்பில் உலகில் உள்ள பல சாகசவாத இளைஞர்களை ஆக்கிரமித்துவிடுகிறது. உடனடி தீர்வு வேண்டும்.மக்களுக்கு பதில் சொல்லி அவர்களை திரட்டும் பொறுமையில்லை. நாளையே புரட்சி வர வேண்டும். மக்கள் முட்டாள்கள் இந்த மத்தியவர்க எண்ணம் தான் இந்த இடது சாகசவாதிகளின் மூலதனம்.

     இவர்கள் எண்ணம் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது தான் மதிக்கிறோம், சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஆதரிக்கிறோம் ஆனால் இவர்கள் கொடுக்கும் தீர்வு? அது ஆபத்தாயிற்றே.

     இது தான் இப்பொழுது ஏகாதிபத்தியங்களுக்கு வேண்டும். அமைப்பின் அழுகிய ஊழல், கொள்ளை இவற்றை பார்த்து கோபம் வருகிறதா, மக்கள் சக்தி ஒன்றுபடுகிறதா. ஒன்று படும் மக்கள் சக்தியை மழுங்கடிக்க முதல் வழி அவர்களை அமைதியாக பஜனை பாட செய்வது. சமத்துவம், சகோதரத்துவம், அஹிம்சை என அவர்களை அடக்கிவிடுவது. நம் கண் முன் உதரணம் காந்தி, அன்ன ஹசரே.

         அதே இளைஞர்கள் கோபடுகிறார்கள் அப்பொழுது அவர்கள் மனதில் சேகுவார வழியை நிலை நிறுத்துவது. திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிக்கை, புத்தகங்கள் என்று சகலத்திலும டீசர்ட் வரை, சே குவரா வழி ஆரதிக்கபடுகிறது. அது அந்த இளஞர்கள் மூளையில் வேலை செய்யும். சிறு குழு ஒன்று அமையும்.அதன் பின் நாம் சில சாகச செய்திகளை படிக்களாம்,சில குண்டு வெடிப்புகள், சில துப்பாக்கி சூடுகள். சில கொலைகள். தொலைகாட்சி லைவில் பார்க்கலாம் .இறுதியில் குழிவில் அனைவரும் கொல்லபடுவார்கள், மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் ஏன் ஒரு பயம் கூட அரசு மீது மக்கள் மனதில் கவ்விவிடும்.

     இலங்கையில் ஜேவிபி, இந்தியாவில் சாரு தலமையிலான நக்சல்பாரி, தமிழ்நாட்டில் தமிழரசன் தலமையிலான ஒரு தமிழ்தேசிய குழு(பெயர் நினைவில்லை ). ஆபிரிக்கவில், அர்ஜென்டினாவில் இந்தியாவில்  இப்போதைய மாவொயிஸ்ட் குழு, ஏன் ஈழத்தில் மக்களை பார்வையாளராக வைத்து ராணுவத்தின் மூலம் விடுதலை வெல்லலாம் என நினைத்த குழுக்கள் ஏகாதிபத்தியங்களால் அழிதொழிக்கபட்டுவிட்டன. அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மக்கள் பார்வையாளராக செய்திகளை பார்த்து கடந்துவிடுகிறார்கள். குறைந்தபட்சம் அவர்களுக்காகத்தான் இந்த மரணங்கள் என்று கூட தெரிவதில்லை.

   இத்தகு பாதைகளுக்கு பின்னால் உள்ள இராணுவ அரசியல் ஏகாதிபத்திய நியாயங்களுக்காக தேவைப்பட்டுப் போகின்றது .அது ஆக்கிரமிப்பு ,வளச் சுரண்டல் , ஆயுத விற்பனை போன்ற முதலாளித்துவ இலாபங்களை இலகுவாக கையகப்படுத்தும்  பொறிமுறையாகவும் இன்று மாறி நிற்கின்றது .

No comments:

Post a Comment