Sunday, November 24, 2013

சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

  இலங்கையில் முஸ்லிம்களது நலன் காக்கப்படுவதற்கு இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் “முதலாளித்துவ, மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜனநாயக பாராளுமன்றத்திற்கு” அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் மூலம் தமது உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்றும் , முஸ்லிம்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் நாடுகிறார்கள்.


  ஆனால், இஸ்லாம் இவற்றிற்கு எல்லாம் மேலாக உண்ணதமான ஆத்மீகப்பணியாக அரசியலை நோக்குகிறது. இஸ்லாமிய அரசியல் என்பது இஸ்லாமிய அகீதாவில் இருந்து கட்டியெழுப்படவேண்டிய ஒன்று. மனித வாழ்வில் எழும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை “ஒரு முஸ்லிம் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விடம் இருந்து பெற்று தமது அரசியல், பொருளியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும்”. அதுவே இஸ்லாமிய அரசியல் பணியுமாகும். 



  இந்த அடிப்படையில், சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் முஸ்லிம்களது அரசியல் பணியென்பது நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய அரசியல்பணி என்பதனை உணரவேண்டும்.
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் சிறுபான்மையாக இருந்தபோது அவர்கள் மக்காவில் இருந்த ஜாஹிலிய சமூக அமைப்பையும் அரசில் தலைவர்களையும் எதிர்கொண்டு இஸ்லாத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் மனங்களில் மேலோங்கச் செய்தார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை மக்காவினுள் பெற முற்படவில்லை. 


   அதேபோன்றுதான் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள “நவீன ஜாஹிலிய சிந்தனைகளையும், வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடாக இஸ்லாத்தை முன்வைக்கும் அரசியல் பணியை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதனை உணரவேண்டும். அத்தகைய அரசியல் பணியை செய்வதன் மூலமாக இலங்கை மக்கள் மனங்களில் இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படமுடியும். 

   இதற்கு பாராளுமன்றத்தினுள் சென்றுதான் தஃவா செய்ய வேண்டும் என்ற தேவை கிடையாது. இவ்வரசியல் பணியை மேற்கொள்ளும் குழு நிச்சயம் நபி (ஸல்) அவர்களது முன்மாதிரியினை பின்பற்றி பண்படுத்தப்பட்டு இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையிலான அரசியல் தஃவா முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் அரசியல் தலைமைகளாக இருக்கவேண்டும். 

 நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் அதிகாரம் கிடைத்த பின்பு இஸ்லாமிய அரசை அங்கு நிறுவியதுடன் இஸ்லாத்தை முழுமையான உள்நாட்டினுள் அமுல்படுத்தி வெளிநாட்டுகளுக்கும் தாவா மற்றும் ஜிஹாத் மூலம் எடுத்துச் சென்றார்கள். அது முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நலன்களை காப்பாற்றியது. 

  இவ்வாறே, “நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேசங்களை இணைத்து நபி வழியில் உருவாகும் போது” சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களது நலன்கள் நிச்சயம் காக்கப்படும் அவர்களது கண்ணியம் பேணப்பட்டும், குர்ஆன் சுன்னாவின்படி சகல துறைகளிலும் வாழுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாளைய இஸ்லாமிய தலைமை சிறுபான்மையாக முஸ்லிமகள் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தித்தரும். அத்தகைய அரசியல் முன்னெடுப்புக்களை அதன் வெளிநாட்டு கொள்கையூடாக ஏற்படுத்தித்தரும். மேலும் சிறுபான்மை முஸ்லிம்களது நலன்களை பாதுகாக்கும். அவர்கள் முழுமையான குர்ஆன் சுன்னாவின்படி தமது வாழ்வொழுங்கை ஒழுங்குபடுத்தி வாழ்வதற்கு வழிசமைக்கும் என்பதனை உணர்ந்து இஸ்லாமிய அரசியல் பற்றிய தெளிவைப் பெற ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப்பட்டுள்ளான் என்பதனை உணரவேண்டும்.

No comments:

Post a Comment