Thursday, February 13, 2014

காதலர் தினம் ! முஸ்லீம்களே அவதானம் !

          இல்லாததை இருப்பதாக காட்டுவதுதான் மேற்கின் நாகரீகம் ஹோலிவூட்டை போலவே தினமும் 'பிலிம் 'காட்டும் வரிசையில் பெப்ரவரி 14 காதலர் தினம் (வலண்டைன்ஸ் டே ) எனும் வெளியீடாகும் . நிஜமான அதன் கொடிய முகத்தில் ரோமன்ஸ் எனும் மேக்கப்பை இட்டு காட்டும் இடுகாட்டு அரசியலின் இதிகாசமே இது தவிர வேறு ஒன்றுமில்லை . சுய இலாபத்துக்காக பலரிடம் பல் இழித்து பணம் தேடுவாள் விலைமாது ; இந்த அசிங்கமான மடி விரிப்புகள் தேவைக்கு ஆக்கிரமிப்பாக வடிவம் பெறும் . இத்தகு குணம் கொண்ட விபச்சாரம் பிளஸ் சர்வாதிகாரம் கலந்த அசிங்கம்  தந்த ஒரு அசுத்தத்தை மனித சமூகத்தில் தூய்மையின்  பெயரில் படர விட்டுள்ளார்கள். இதன் பூரண அனுசரணை இவர்களின் மீடியாக்களே .


       இயற்கையின் விழுமியங்களை மதிக்காமல் விபச்சாரத்தையும் ,திறந்த பால் உறவையும் , தன்னினச் சேர்க்கையையும் ,கருப்பை சுதந்திரத்தையும் சட்ட வேலிபோட்டு போசித்து வளர்க்கும் கேடித்தன 'பொலிடிக்சில்' இருந்து காதல் எனும் தூய்மையான ,நேர்மையான வார்த்தையும் வருகிறது ! இத்தகு வாந்தியில் இருந்து வசந்தத்தை சுவாசிக்க நினைப்பவர்கள் இன்னும் அதற்காக யாசிக்கட்டும் . பெண்ணை கவர்ச்சிப் பண்டமாக்கி வீதிக்கு இறக்கியது மேற்குலகு .பெண் விடுதலை என்பதை அவள் அங்கங்களை கடைபோட்டு நடைபோடுவதே எனும் தவறான வரைவிலக்கணம் கொடுத்ததன் மூலம் ,மனிதச் சமநிலைக்கு ஆப்படித்து ஒரு தெளிவான சீரழிவை சீர்திருத்தம் போல் காட்டியது ;இந்த 'குண்டர்' அரசியலின் தொண்டர் மீடியாக்கள் வழங்கும் வர்ண ஜாலமே இந்த காதலர் தினம் !!!

      மேற்கின் சித்தாந்தம் இன்று ஒரு நெறி கெட்ட அரசியலாக மனித சமூகத்தை ஆதிக்கப்படுத்தி இருக்கிறது .அதன் அதிகார மேடையை சுய நலத்தின் பெயரில் பிடித்திருக்கும் மேட்டுக்குடிகள் தமது கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் சிறுவர் முதல் முதியோர் வரை கவரும் திட்டங்கள் மூலமும் ஒரு போலித்தனமான நியாய வரம்புக்குள் மனித சமூகத்தை மண்டியிட வைத்துள்ளார்கள். இத்தகு தவறான பார்வைக்குள் முஸ்லீம்களும் வீழ்ந்து பல அடிப்படை தவறுகளை விட்டுள்ளார்கள் . தம்மிடம் ஒரு தெளிவான தூய்மையான சித்தாந்தமான இஸ்லாம் இருக்கின்றது ;எனும் உண்மையை மறந்து மேற்கின் நாகரீகத்தோடு ஒரு சமரச இணைப்புப் பாலத்தையும் இட்டு சிந்திப்பதில் தான் இனி வெற்றி உள்ளது ;என்று இஸ்லாமிய இயக்கங்களே !! சொல்லும் அளவுக்கு நிலமை இன்று மோசமாகியுள்ளது . 

       ஒரு தவறான சிந்தாந்தம் சரியான இலக்கை காட்டமுடியாது . இஸ்லாம் அற்ற எதுவுமே ஜாஹிலீயத் (அறியாமை ) எனும் அடிப்படை உண்மையில் இருந்தே ஒரு முஸ்லிமின் பார்வை அமைய வேண்டும். மேலும் அறிவியல் வடிவத்தோடு நாகரீகத்தை இணைத்துப் பார்க்கும் மிக முக்கியமான தவறும் கைவிடப்பட வேண்டும் . அறிவியல் என்பது பொதுவானது . அது ஆழ்ந்த ஆய்வு, தேடல் மூலம் இறைவன் தந்த இயற்கையில் இருந்து கிடைக்கக் கூடியது . ஆனால் நாகரீகம் என்பது பிரத்தியோகமானது . அது ஒரு சித்தாந்தத்தின் வழி வரக்கூடியது . 

        உதாரணமாக வீடியோ கமரா ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு அது பொதுவானது . ஆனால் அதன் மூலம் ஒரு காட்சியை படம்பிடிப்பதில் இருந்து நாகரீகம் வெளிப்படுகிறது . அதனால் ஒரு பெண்ணை கவர்ச்சி கரமாக படம்பிடிக்க முடியும் .அதே நேரம் ஒரு இயற்கை காட்சியையும் படம்பிடிக்க முடியும் . மேற்கின் நாகரீகம் இந்த இரண்டையுமே சரிகானும் . இந்த இரண்டையும் கலை அம்சமாக காட்டி நிற்கும் . ஆனால் இஸ்லாமிய நாகரீகம் இந்த இரண்டையும் தெளிவாகவே வேறுபடுத்தும் . பெண் தொடர்பான கவர்ச்சிப் படத்தை ஹராம் என்றும் ,இயற்கை காட்சியை பற்றி அது இறைவனின் வல்லமையை வெளிப்படுத்தும் என்ற வகையில் ஹலால் எனவும்  கூறும் . இப்படி ஒரு தவறான சித்தாந்தம் வழி வந்த நாகரீகத்தின் வெளிப்பாடே இன்று உலகை ஆளும் அரசியலாகும் . இதிலிருந்து எடுப்பதற்கு ஒன்றுமில்லை .இந்த காதலர் தினம் உட்பட .

No comments:

Post a Comment