Saturday, January 4, 2014

இதோ விஷமிகளின் இன்னொரு வடிவம் முஸ்லீம் உம்மாவே ஜாக்கிரதை !

         விலாசம் தேட முயலும் விஷமப் பிரச்சாரகர்களின் மத்தியில் இருந்து இன்னொரு அறிமுகம் இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் கடந்த 27/12/2013 வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது . சிந்தனை வீழ்ச்சிக்கும் குப்ரிய ஆதிக்க கொடும் பிடிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் உம்மத்திற்கு இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ் என்ற விடயம் விளக்கம் என்ற பெயரில் குழப்பப் பட்டுள்ளது .கம்பஹா மாவட்டத்தின் கம்மல் துறை தக்கியா பள்ளிவாசல் ஜும்மாஹ் பயானில் இந்த பித்னா வெளிக்கிளம்பியது .


        குறித்த பேச்சாளர் அகில இலங்கை ஜம்மியதுள் உலமாவின் கம்பஹா மாவட்ட செயலாளர் ! பயானின் ஆரம்ப நிகழ்வுகள் சரியாகவும் ,கவர்ச்சிகரமாகவும் நகர்த்தப்பட்டு ஏறத்தாழ நடுப்பகுதியில் இருந்தே தனது வைரஸ் குப்பைகளை கொட்டத் தொடங்குகிறார் . பேசும் பாணியும் தரும் ஆதாரங்களும் தனக்குத் தானே முரண்படும் நிலையில் முஸ்லீம்களின் இன்னொரு சாராரை மட்டம் தட்டும் தொனியில் பேச்சு தொடர்ந்தது .இறுதியில் இஸ்லாமிய அகீதாவையே கண்டம் துண்டமாக்கும் திசை நோக்கி பயணித்தது .

       சஹாபாக்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி என்ற போக்கில் தொடங்கி , இமாம் இப்னு தைமியா (ரஹ் ) அவர்களை வழி கேடராக்கி ,நவீன தஜ்ஜால்கள் இவரை அடியொற்றியே தமது ஆதாரங்களை எடுக்கிறார்கள் என முதல் குற்றச் சாட்டை இவர் வாய் மொழிகிறார் . அடுத்த கட்டமாக சவூதி அரேபிய அரசால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட மொழி பெயர்ப்பு தர்ஜுமதுல் குர் ஆன் ஒரு வழிகேட்டு வடிவம் என்றும் ,அந்த மொழிபெயர்ப்பை செய்தவர்கள் வழிகேடர்கள் எனவும் விமர்சிக்க தலைப்படுகிறார் .சரி இதையெல்லாம் ஒரு பக்கச் சார்பு விமர்சனக் கண்ணோட்டம் என புரிந்து கொண்டாலும் ,அல்லாஹ் அர்ஷ்ஷில் இருக்கிறான் என யாராவது கூறினால் அவன் காபிராகிவிட்டான் என வாதத்தையும் ,லாஜிக்கையும் பயன்படுத்தி இவர் பேசியபோதே அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் காபிர் என்ற வியூகத்தில் சிக்க வைத்து விடுகிறார் .

            வழிகேடர்கள் ,குழப்பவாதிகள் , காபீர்கள் ,முர்ததுகள் என்ற பட்டங்களை வழங்குவதே இஸ்லாமிய தவ்வாவும் காலத்தின் தேவையுமாகும் ;என முஸ்லீம் உம்மத்தை குதர்க்கமாக குறிவைத்த முஸ்லீம்களின் ஒரு பகுதியினரின் விளைவாக ,அதற்கு பதிலடியாகவே இந்த 'நெகடிவ் ரோல் மெடல் ' பிரச்சார பிம்பமாக தலைதூக்கியுள்ளது .இங்கு முஸ்லீம்கள் பாடுதான் பரிதாபகரமானது . நம்பி நிற்கும் வழிகாட்டிகள் தம்மை வழி கேடர்களாக்கி கழுத்தறுக்கும் விளக்கத்தை சொல்லிப்போகும் நிலையிலும் பலிக்கடாவாக வாழ்ந்து போகும் அவல நிலைதான் முஸ்லீம் உம்மாவுக்கு எஞ்சியுள்ளதா !?

          இந்த ஜும்மா பயானை நிகழ்த்திய ஜம்மியதுள் உலமாவின் கம்பஹா மாவட்ட செயலாளர் சவூதி அரேபியா வெளியிட்ட குர் ஆன் மொழி பெயர்ப்பை செய்தவர்கள் ,ச்ரிகண்டவர்கள் குழப்பவாதிகள் ,வழி கேடர்கள் எனக் குறிப்பிட்டார்  . அப்படிப் பார்த்தால் அந்த 'லிஸ்டில்' இவர் அங்கம் வகிக்கும் ஜம்மியதுள் உலமாவின் அகில இலங்கை பொதுச் செயலாளரும் உள்ளடங்கி விடுகிறார்! அப்படியானால் ஜம்மியதுள் உலமா தொடர்பில் இவரது நிலைப்பாடு என்ன ? இவர் தொடர்பில் ஜம்மியதுள் உலமாவின் கருத்து என்ன ?

         அல் குர் ஆனை அரபு மொழியில் உணர்ந்து புரிவதில் உள்ள சுவையும் தெளிவும் வேற்று மொழி பெயர்ப்புகளில் இல்லை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை . ஆனால் அரபி மொழியை விட்டு முஸ்லீம் உம்மத் அந்நியமான நிலையில் ,ஒரு தவிர்க்க முடியாத முடிவே தர்ஜுமதுள் குர் ஆன் ஆகும் .இங்கு கேள்வி என்னவென்றால் சவூதி வெளியிட்ட மொழிபெயர்ப்பை பிழை காணும் இவர் மாற்றீடாக எந்த மொழி பெயர்ப்பை தருகிறார் ? இவர் மொழி  பெயர்க்கும் விதம் மட்டுமே சரியானதா ? அல்லது அப்படி ஒரு மொழி பெயர்ப்பு தேவையில்லையா !?

           இன்னும் அல்லாஹ் 'அர்ஷ்' இலும் இல்லை ! வானத்திலும் இல்லை ! அந்தரத்திலும் இல்லை ! என இவர் கூறுகிறார் . அல்லாஹ் ,அர்ஷ் அவனது உள்ளமை தொடர்பில் வஹியை அடிப்படையாக கொண்ட இமாம் இப்னு தைமியாவின் (ரஹ் ) ஆதார முடிவுகளுக்கு ஆப்படிப்பதாக நினைத்து தனது ஈமானுக்கும் ஜும்மாவை செவிமடுக்கும் பாமரர்களின் ஈமானுக்கும் மத்தியில்  வெடிகுண்டை அல்லவா வைத்து விடுகிறார் !? "சரி அப்படியானால் அல்லாஹ் எங்கிருக்கிறான் என சொல்லுங்க !? " என கேள்வி கேட்ட துணிவுள்ள பாமர முஸ்லிமின் நியாயமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியவில்லை !ஏன் பதில் இல்லையா !? பதில் சொன்னால் 'அஷ் அரி ' எனும் (அல்லாஹ்வை பற்றி மனித அறிவின் வியூகத்தில் விளக்கம் சொன்ன ) மத்ஹபை இந்த நூற்றாண்டில் உயிர்ப்பிக்க வந்தவன் என்பது தெரிந்து விடும் எனும் பயமா !?  அல்லது அல்லாஹ் தொடர்பான விடயத்தில் இவரே அந்தரத்தில் உள்ளாரா !?

                                    (இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் முடிவு பெறும் )


                                    
  

1 comment:

  1. இன்று எமது முஸ்லிம் உம்மத்தின் அதிஉன்னத பிரச்சினை எது என்பதுபற்றிய எண்ணக்கரு எது என்பதனை மக்களுக்கு உணர்த்த வேண்டிய உலமாக்கள் இயக்க முறண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான்தோன்றித்தனமாக இஸ்லாம் பற்றிய கருத்துக்களை வெளிவிடும் நிலைக்கு வந்து இறுதியில் இஸ்லாத்தைவிட்டு தூரம் போகுமளவுக்கு நடந்துகொள்கிறார்கள். அல்லாஹ்தான இந்த உலமாக்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    இன்று முஸ்லிம் உம்மத்தின் முன்னால் உள்ள வாழ்வா சாவா பிரச்சினைகள் எத்தனையோ உண்டு. அவைபற்றி எத்தகைய கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் இன்றைய உலமாக்கள் கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உதாரணமாக...
    தேசியவாதம் மதஒதுக்கல் சிந்தனை ஜனநாயகம் போன்ற குப்ரிய சிந்தனைகள்...!

    ReplyDelete