Friday, May 31, 2013

அஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் ?


         
            ' அஹிம்சை' தொடர்பான பார்வைகளில் அதன் வெளிப்பாடுகள் சில நியாயங்களை மறந்த வன்முறைத் தூண்டல்கள் மூலம் சமூக ஆதரவு மற்றும் ,அரசியல் எதிர்பார்ப்புகளை நோக்கியதாகவே காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது . அனேகமாக அஹிம்சை சுய சுத்தப்படுத்தலுடன் கூடிய இலக்கு நோக்கிய தற்காலிக கருவியாகவே அநேகமான அரசியல், இராணுவ இயக்கங்களால் இன்று  பயன்படுத்தப் படுகின்றன . 



                  ஒரு தனிமனிதன் அல்லது குழு தனது இலட்சியத்துக்காக ,கோரிக்கைகளுக்காக முரண் சக்திகளுக்கு முன் ,முரண் கருத்தியலுக்கு முன் கடுமையான எதிர்ப்பையும் தாங்கி  தற்காப்பு அல்லது தாக்குதல் நோக்கமற்று போராடும் வழிமுறையே அஹிம்சை ஆகும் .

              உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் இப்படி பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் ,சுய அழிப்புடன் கூடிய கொடூரமான  தற்கொலைகளும் இன்று கோரிக்கை அரசியல் வழி அஹிம்சா வழிமுறையாக நடைமுறைப் படுத்தப் படுகின்றன . அனுதாபப் பார்வையின் மூலம் தனது கோரிக்கை சார் ஆதரவு வட்டத்தை அதிகரித்தல் எனும் முதற் கோணம் காரணமாக இங்கு பின்னூட்டல்கள் மூலமான வன்முறை அரசியலை தூண்டும் என்ற இன்னொரு கோணம் நுணுக்கமாக அவதானிக்கப் படுவதில்லை .


               அதாவது ஒரு இராணுவ வழி தற்கொலைப் படையாளியின் தாக்குதலின் மூலம் ஏற்படும் சேதத்தை விட, ஒரு குறிப்பிட்ட விடயம் சார் கருத்தியலில் ஆழமான வன்முறை நோக்கு  விதைப்பை இத்தகு (அஹிம்சா ரீதியான) சுய அழிப்பு ஏற்படுத்தலாம் . அந்த வகையில் இத்தகு நடவடிக்கைகள் தண்டனைக்குரிய கருத்தியல் வன்முறைத் தூண்டலாகவே பார்க்கப் பட வேண்டும் . 

No comments:

Post a Comment