Thursday, August 29, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைத்துள்ள உண்மைகள் !

              சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .     " அரசியல் அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் " என்ற வார்த்தைகளின் வடிவமான  இந்த தேசத்தின் உண்மை பலருக்கு புரியும் போது, தங்கள் நெற்றிகளுக்கு முன்னாலும்  ஒரு  துப்பாக்கி தோட்டாவை துப்பத் தயாராக இருந்தது மட்டுமே கடைசிப் பார்வையாக இருந்தது .

                 "நூறு பேச்சு மேடைகளும் , ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற இவர்களின் இரண்டாம் கடவுள் 'லெனின் கிராட் ' சொன்னதை கச்சிதமாக செய்தது அதன் உளவுப் பிரிவான கே .ஜி .பி . யும் ,அதன் இராணுவமும் . 

                      நாஸ்திக வாத அகீதாவை கொண்ட இந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசோடு முஸ்லீம்கள் பலப்பரீட்சை செய்த முதல் களமே ஆப்கானிஸ்தான்  .இந்த செங்கரடிகளின் இராணுவ மேலாதிக்க வாதத்தின் அழிவுக் கதவுகளை ஆப்கான் உத்தியோக பூர்வமாக திறந்தது 1970 களின் இறுதிப் பகுதியிலேதான் ஆகும் .

                 1990 கள் வரை தொடர்ந்த இந்த பலப்பரீட்சை மூட்டை முடிச்சுகளோடு ஆப்கானை விட்டு சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் அதன் இராணுவ வலிமை பற்றிய 'இமேஜ்' ஜுஜூபி வடிவத்தை அடைந்தது .இந்தப் போரில் இன்னொரு பார்வையாக புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்   வியட்நாமின்  படு தோல்விக்கு சோவியத் யூனியனை பழிவாங்க அமெரிக்காவுக்கு நல்ல சந்தர்ப்பமாகவும் ஆகியதாகும் .

              சோவியத் ஆப்கானில் அடைந்த இராணுவத் தோல்வி மற்றும் அதன் ஆட்சித் தலைவராக இருந்த மிக்கைல் கொர்பச்சோ வழங்கிய சீர்திருத்தக் கொள்கைகள் என்பன கொம்யூனிச அகீதாவை அங்கு கோமா நிலைக்கு ஆக்கி முதலாளித்துவத்திடம் சரண்டராகும் நிலைக்கு ஆக்கியது .இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தொடர்ந்த  பனிப்போர் எனும் ஆதிக்கச் சண்டைக்கு முற்றுப் புள்ளியும் வைத்தது  . இந்த தோல்வி அரசியலின் முடிவுரைப் பந்தி ஆப்கான் களத்தில் இருந்துதான் எழுதப் பட்டது என்பது 'ஓபன் சீக்கிரட்' .

         தெற்காசியாவில் இருந்த  அதிகம் அறியப்படாத ஒரு முஸ்லீம் பெருநிலத்தை உலக முஸ்லீம் உம்மாவின் இதயங்களில் பசுமையாக விதைத்ததும் இந்த தியாகப் போராட்டம்தான் என்றால் அதுவும் மறுக்க முடியாதது .அதேபோல கம்யூனிச பிசாசை விரட்ட அமெரிக்கா எனும் பூதம் ஏன் பின்னால் நிற்கின்றது !? என்பதை உணராமல் முஸ்லீம் உம்மா போராடிய தவறும் மறுக்க முடியாதது தான் ஆகும் .

               'புரபிட் அன்ட் பெனிபிட்   பேசில்'  துரோகத்தனமான 'டபுள் கேம்' கொடுப்பது U .S பொலிசியின் பிரதான எண்ணக்கரு என்பது புரியாமல் ,அந்த முதலாளித்துவம் விரித்த சதிவலையில் நாஸ்திக செங்கரடிகள் எதிர்ப்பு என்ற ஒருபக்க பார்வையை மட்டுமே முஸ்லீம் உம்மத் பதித்தது .

                  'அல்லாஹு அக்பர்' என கையில் இருந்த 'கிளஸ் நிகோ  ரைபிளின் ரிகரை ' தட்டுவது பற்றி இருந்த ஆர்வம் ,தனது தலையில் இருந்த சிந்தனை 'ரிகரை தட்டுவதில் இந்த உம்மாவுக்கு அன்று இருக்கவில்லை .நாஸ்திக அகீதாவுக்கு எதிரான கடுமையான பார்வை நாசகரமான 'செக்கியூலரிச முதலாளித்துவக் கடவுளின் ஆதிக்கம் பற்றி மற்றும் குள்ளநரித்தனம் பற்றி ஆராய விடவில்லை . அது எப்படியான திட்டமிடல் !? நடந்தது என்ன !? இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .     

1 comment:

 1. எந்த நெஞ்சும் பொறுக்காத நினைவுகள்
  எந்த நெஞ்சும் மறக்கக் கூடாத நினைவுகள்

  வரலாறுகள் படிப்பினை - சில
  வரலாறுகள் பாடம் கற்றுத் தரும்.

  வரலாற்றுப் படிப்பினையில்
  பாடம் கற்றுக் கொல்லாத
  சமூகமொன்று வாழ்ந்துள்ளது என்று
  எதிர்கால சமூகம்
  என்னையும் சேர்த்து
  விமர்சிக்குமோ என்ற
  வெட்கமற்ற பயம்
  கோழைத்தனமாய் என்னுள்ளத்தில்
  உலா வருகின்றது
  உங்கள் இரண்டாவது பதிவு
  ஆறுதலாக அமையும் என
  எண்ணுகிறேன்...................

  ReplyDelete