Friday, November 9, 2012

ஆடு நனைவதில் விக்கித்து அழும் ஓநாய் !!!


இது சிரியா பற்றி பிரித்தானிய பார்வை .....   சியோனிசத்தின் கௌரவ வேடம் !!!

   சிரிய அதிபர் பஸர் அல் அஸாதை நாட்டைவிட்டு வெளியேற்றுவதன் மூலம் அந்நாட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமானால் அதற்காக ஒத்துழைப்பு வழங்க தான் தயாராகவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள கமரூன் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.சிரியாவில் மாற்றமொன்றைக் கொண்டுவரும்பொருட்டு எந்தவழிகளிலேனும் அஸாதை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், அதற்குத் தேவையான சகல விதமான ஒத்துழைப்புகளையும் நல்க பிரிட்டன் தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 
 
   இதற்கிடையில் சிரிய பாராளுமன்ற சபாநாயகரின் சகோதரர் இன்று டமஸ்கஸில் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முகமட் ஒஸாமா லஹாம் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். கடந்த ஜுலை 18ஆம் திகதி பஸர் அல் அசாதின் மெய்க்காவலர்கள் நால்வர் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

  பி.பி.சி.: சிரிய அதிபர் பஸர் அல் அஸாதுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்பொருட்டு வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் கட்டாரில் தற்போது விசேட கூட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.ஏலவே அமைக்கப்பட்டுள்ள சிரிய தேசிய கவுனசில் உரிய முறையில் செயற்படவில்லை என போராளிக் குழுக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதற்குப் பகரமாகவே இந்தப் புதிய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள விமானத் தளத்தை போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தாக்குதல்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று இந்த முக்கிய கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.நான்கு தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் சிரியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்வகையிலான மிக முக்கிய தீர்மானங்கள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் 2011 முதல் சிரியாவில் அசாத் அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் பல இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
.
 

1 comment:

  1. salam
    like wise burma also same but no one(UN, NATO, UK,US...)no need to wipout the burma presidend .
    WHAT IS THE DOUBLESTANDAD OF KUFFAR ,habit of munaafiq

    ReplyDelete