Tuesday, January 1, 2013

மேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் மீள் உதயம் '.





         "அரேபிய சாம்ராஜ்யத்தில் முஸ்லீம்கள் ஓன்று பட்டு விட்டால் ,அவர்கள் உலகுக்கு ஆபத்தாகவும் சாபமாகவும் மாறலாம் .அல்லது அருட் கொடையாகவும் மாறலாம் .என்றாலும் ,அவர்கள் பிரிந்து காணப் பட்டர்களானால், எந்தவொரு பெறுமானமும் தாக்கமும் அற்றவர்களாகவே இருப்பார் "
                                                         
                                                                     - லோரென்ஸ் பிரேவின் -
                                                         ( ஒரு மேற்கத்தேய சிந்தனையாளர் )

                     '(கிலாபா வடிவில் )இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப் படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன் நாடாக வீழ்ந்து விட்டது '.
                                                -  தி டைம்ஸ் நாளிதழ் (1924 மார்ச் 07) -


                                        மேலே தந்த கருத்துக்களில் முதலாவது  இஸ்லாமிய 'கிலாபத்தின் ' வீழ்ச்சிக்கு சற்று முன்னும், இரண்டாவது செய்தி 'கிலாபத்' வீழ்த்தப்பட்ட சூட்டின் சுகத்தோடும் வெளிவந்தவைகள் .அன்றிலிருந்து இன்று வரை இந்த சாபக்கேட்டு அரசியலில் முஸ்லீம் சமூகம் ஒரு தூய நாகரீகம் படைத்த சமூகம் ;என்ற வரலாற்று உண்மை ஏட்டளவில் இருக்க , பின்தங்கிய தங்கி வாழும் சமூகமாகவே  உதாரணப்படுத்தப் படுகின்றது .

       உலகத்தையே ஆட்டிப் படைக்கக் கூடிய ஏறி சக்தி வளத்தின் சொந்தக்காரர்கள் யார் ? என்ற வினா தொடுக்கப் பட்டால் முஸ்லீம் உலகம் தான் என்ற பெயரளவு பெறுமானம் எஞ்சியிருக்க ' செக்கு மாட்டுத் தத்துவத்தில் ' புண்ணாக்கு மாட்டுக்கு எண்ணை எனக்கு என வளச் சுரண்டலில் மேற்கின் முதலாளித்துவ அதிகாரமே அரபுலகில் மேலோங்கி உள்ளது .

                                     அரபுலகை இந்த முதலாளித்துவம் மட்டுமல்ல காலனித்துவம் ,நவ காலனித்துவ பொம்மையாட்சி என்ற அரசியலில் 'கம்பியுனிசம் ' எனும் இன்னொரு போலிக் கொள்கையும் தமக்குள் மோதலோடு இந்த வளப் பிடுங்களில் பங்குபோட்டு சுரண்டியது .
                                                                        
                                 இந்த பிரித்தாளும் விதிக்குள் முஸ்லீம் உலகை மன்னராட்சி  தேசியவாதம் ,  மதச்சார்பின்மை , ஜனநாயகம் ,இஸ்லாமிய சோஷலிசம் , பசுமைப் புரட்சி ....போன்ற மாயைக்குள் முடக்கி வைத்திருந்தது. 'கம்பியுனிசத்தின்' வீழ்ச்சியின் பின்னர் தனிக்காட்டு ராஜாவாக முதலாளித்துவம் தனது அனுபவிப்புகளை பெருக்க முயன்றது .

                                                    கம்பியுனிச அடிவருடி அதிகாரங்களை அழித்தல் , வளைத்தல் ,தமது விசுவாசிகளாக்குதல் ,என்ற கோட்பாட்டின் கீழ் அமுல் நடத்தப் பட்டதே ' அரேபிய வசந்தம் ' எனும் 'ஜெஸ்மின் புரட்சி' ! இந்த 'அஜெண்டாவில்  ' ஒரு அங்கமே சிரிய விவகாரம் ஆகும் .
  
    ஆனால் இவர்கள் தமது தேவைக்கு தோண்டிய கிணறில் இருந்து அவர்கள் எதிர்பார்க்காத அவர்கள் அஞ்சி நடுங்கிய பூதம் கிளம்பியது அதுதான் இஸ்லாம் !வழமையான' திமோசிரசி ' மெஜிக்கில் ' பிரச்சினையை அமுக்கி விடலாம் என்ற ஆரம்ப எதிர்பார்ப்புகள் C . I .A பாணியில் பெண்டகன் திட்டமிட, இந்த மரங் கொத்திகளுக்கு வாழை மரங்களே அங்கு காத்திருந்தன . 

 இப்போது நிலமை என்னவென்றால் 'பசர் அல் அசாத் ' பரவாயில்லை என்ற மனோ நிலைக்கு மேற்குலகு வந்துள்ளதா ? என்ற சந்தேகம் ஏற்படும் நகர்வுகளே அந்த விவகாரத்தில் தெரிகின்றது . U .N (சினிமாக் கம்பனியின் ) சிறப்புத் தூதுவர் காட்டுமிராண்டி 'பசர் அல் அசாத்தை ' சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி விட்டு வந்துள்ளார் . சில வேலை' பசர் அல் அசாத்துக்கு ' மறைமுக உதவியும் வழங்கப் படலாம் ஏனென்றால் அமெரிக்கா ,ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து சிரிய விவகாரத்தை கவனிப்பது என்ற முடிவிற்கும் வந்துள்ளது .
                                                              
   மேலும் NATO வைப் போட்டு ஒரு 'பொலிடிகல்' மாற்றத்துக்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதா ? இப்படி பல்வேறு சிக்கல்களை மேற்கு இவ்விடயத்தில் எதிர் கொண்டுள்ளது .சிரியக் களம் அமர்க்களமாக நகர்கின்றது .எமது 'துவாக்களால் ' இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக பலமான பிரார்த்தனைகள் இப்போது அவசியமானது . அது இந்த உலகின் சேவைக்காக கிலாபா அரசு நாளைய செய்தியாய் தலைப்புச் செய்தியாகுமா ? மேற்கின் முதலாளித்துவ முதலைகளின் தலையில் இடி விழும் அந்த சுப செய்தியை முஸ்லீம் உலகு ஆவலோடு எதிர்பார்க்கின்றது .                                  

                           
                                        


                                                   

      

1 comment: