Thursday, October 16, 2014

நோபல் பரிசு அதர்ம அரசியலின் ஆதாரச் சின்னமா !?

         (ஆல்ஃபிரட் நோபல்  1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார்.
அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.)

                           அமைதி மற்றும் சமாதானத்துக்கான பரிசு நோபல் என்பது உலகறிந்தது .ஆனால் அதன் தோற்ற அடிப்படை ஏறத்தாழ சற்று சர்ச்சை ஆனது .அதாவது சாத்தான் ஓதும் வேதம் போன்ற அரசியலே .ஒரு வகையில் ஒரு முதலாளித்துவ செல்வந்தன் தனது மரணத்தின் பின் காலம் காலமாக தன்னை நினைவு கூற ஏற்படுத்திய ஒரு திட்டமே இந்த நோபல் பரிசு ஆகும் .

             1901 களில் தொடங்கிய பெருமை பிடித்த பூர்சுவா கலாசாரம் என்று கூட இதனை நாம் குறிப்பிடலாம். இன்று முதலாளித்துவ அதர்ம உலகு தனது எதிரியின் நியாயங்களை காயடிக்க பயன்படுத்தும் ஒரு கருவியாகவும் மாறியுள்ளது .இந்த உண்மை மலாலா என்ற சிறுமிக்கு இன்று நோபல் பரிசு வழங்கப்பட்டதில் இருந்து தெளிவாகியுள்ளது .

                  இதற்கு முன் நெல்சன் மண்டேலா போன்றோருக்கு வழங்கப்பட்ட போது வெளித்தெரியாத ஒரு கோணத்தில் இந்த முதலாளித்துவ பாசாங்கு அரசியல் மறைந்து இருந்தது . அவரது இளமைக்காலத்தையும் சுமூக வாழ்வையும் ஏகாதிபத்திய பிசாசுகள் நிறவாதத்தின் மூலம் பறித்து விட்டு அதை மறைக்கும் முதல் தந்திரமாக அவரை தென்னாபிரிக்காவின் அதிபர் ஆக்கியது . பின்னர் நோபல் பரிசு என அவரது வரலாற்றுப் போக்கின் வடிவத்தை ஒரு நாடக பாணியில் மக்கள் முன் அறிமுகப்படுத்தியது .

                              அதே போல சோமாலியா ,ஆப்கானிஸ்தான் ,ஈராக் ,சிரியா,பாலஸ்தீன்  போன்ற முஸ்லீம் பெருநிலங்கள் உட்பட உலகின் பல பாகங்களிலும் முதலாளித்துவ ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் நிர்மூலம் செய்யப்பட்ட பாடசாலைகள் ,கலாசாலைகள் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் கல்வி என்ற சூழலே சூனியமாகி இருக்கையில் பெண்கள் கல்வி என்ற இன்னொரு டைட்டிலில் மலாலாவுக்கு வழங்கப்பட்டது சிறுபிள்ளை தனமான ஒரு  உத்தி ஆகும் .இன்னும் இது முதலாளித்துவ  நாசகாரத்தை மறைக்கும்  இருட்டடிப்பு அரசியலே !

                        இன்று முதலாளித்துவத்தின் தெளிவான எதிர்பார்ப்பு இஸ்லாத்தை கொச்சை படுத்துவதன் ஊடாக முஸ்லீம் உம்மத்தை தனது ஆதிக்க கால்களின் கீழ் போட்டு மிதிப்பதே ஆகும் .அதன் காரணம் தனக்கு சவாலான மாற்று சித்தாந்தமாக இஸ்லாத்தை கணித்துள்ளதே   . 

                                                                                   அதற்கான  பிரச்சார அரசியலுக்கு மலாலா தெளிவாகவே பயன்படுதப்பட்டாள் என்பதே உண்மை .அதற்கான அவாட் ஆகவே இந்த நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது .அதாவது எரியும் நெருப்புக்காக மலாலா எண்ணை ஆக்கப்பட்டாள். அதற்கு திரி கொடுத்தது ஒரு உணர்வு மிக்க ஒரு தோட்டா !

          எது எப்படியோ அசின் விராதின் பெயரும் இப்போது எதிர்கால நோபல் பரிசுக்காக பதியப்பட்டு இருக்கலாம் .இஸ்ரேலிய பிரதமர்களுக்கே அது கொடுக்கப்படுமாக இருந்தால் இவருக்கு கொடுப்பதில் தப்பில்லையே ! 

No comments:

Post a Comment