Saturday, October 4, 2014

இதோ எம்மை கடக்கும் இன்னொரு தியாக திருநாள் !!!

 (இவ்வாறே கிறிஸ்தவர்களாகிய  )அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்கள் பாதிரிகளையும் ,சந்நியாசிகளையும் ,மர்யமுடைய மகன் மசீகையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர் .இன்னும் 
ஒரே இரட்சகனையே வணங்க வேண்டுமென்று அல்லாது அவர்கள் கட்டளை இடப்படவில்லை ;அன்றியும் வணக்கத்துக்கு தகுதியானவன் 
ஒருவரும் இல்லை ;அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிக 
பரிசுத்தமானவன் . (சூராஹ் அத் தௌபாஹ் :வசனம் 31)

        தௌஹீதின் யதார்த்தத்தையும் ,தியாகத்தின் உச்சத்தையும் நினைவு கூறும் இந்த ஈதுல் அல்ஹா எனும் திருநாளில் சகோதரர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆனாலும் நெஞ்சை அழுத்தும் ஒரு கடின வலி என்னைமட்டுமல்ல இந்த முஸ்லீம் உம்மத்தை தொடர்கிறது .

              அதை கவிதையால் சொல்ல நான் கலீல் ஜிப்ரானும் அல்ல வாட்களால் வெல்ல காலித் இப்னு வலீத் (ரலி ) அவர்களும் அல்ல .மனித அடிமைத்துவத்தில் இருந்து விடுதலை வேண்டிய அந்த காயம் நாட்பட்டது மட்டுமல்ல ஆழமானது .இன்றைய திகதியில் உலகை ஆளும் முதலாளித்துவ சித்தாந்தம் எனும் கொடிய ஆயுதத்தால் தொடர்ந்தும் சிதைக்கப்படுவது .

          இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வியல் ,நாகரீகம் ,கலாசாரம் இப்படி எல்லாவற்றையும் இந்த முதலாளித்துவம் முற்றாகவே சிதைத்து விட்டது .இப்போது முதலாளித்துவம் அசம்பில் பண்ணிய இஸ்லாமிக் பொடி கொண்ட ஒரு பெயரளவு வடிவமே முஸ்லீம் .முதலாளித்துவம் அனுமதித்த சில சடங்கு ,சம்பிரதாயங்களுக்குள் அல்லாஹ்வை பூஜிப்பதே அவனது இஸ்லாமிய வாழ்வு .இப்படிதான் கற்பிக்கப்படுகிறது ,காட்சிப்படுத்தப்படுகிறது .முஸ்லீம் பெரும்பான்மை நிலம் முதல் ,குப்பாரிய பெரும்பான்மை நிலம்வரை இந்த அவலம்தான் தொடர்கிறது .

                          இந்த அவலவாழ்வுக்கு அனுசரணை கூறி அழைத்துச் செல்பவர்கள் இஸ்லாத்தின் பெயர்கூறும் உலமாக்களே ! மீனை பிடித்து நிலத்தில் விட்டால் அது துடித்து இறந்து விடும் .மனிதனை பிடித்து நீரில் போட்டால் நீந்திக் கரையேற வேண்டும் அல்லது மரணித்து பிணமாக வேண்டும் .இங்கு இஸ்லாத்துக்கும் குப்ருக்கும் இடையிலான உறவு போன்றதே இந்த உதாரணம் .

        உலக ஒழுங்கை அனுசரித்தே முஸ்லீம் வாழவேண்டும் என்பதே நவீன உலமாக்களின் நாசூக்கான வார்த்தை ! அதாவது அபூஜஹளுக்கு ஆலவட்டம் பிடித்தாவது அல்லாஹு அக்பர் சொல்லவேண்டுமாம் !அதில் கிடைக்கும் திருப்தியில் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல வேண்டுமாம் !!இப்படி  தஜ்ஜாலோடும் கொம்ப்ரமைஸ் போடுவது பற்றியே இந்த உலமா கலாச்சாரம் சிந்திக்கிறது .

       தரையில் போடப்பட்டு துடிக்கும் மீனுக்கு குப்பார் அவன் விரும்பிய எல்லைகளோடு அவனது சுரண்டலுக்கு ஏதுவாக அமைத்த  மீன்தொட்டிதான் தீர்வாம் ! இது முஸ்லீம் பெரும்பான்மை நிலங்கள் !!! தண்ணீரில் தத்தளிக்கும் மனிதனுக்கு ஒரு ஒட்சிசன் சிலிண்டர் தீர்வாம் !! அது பிக்ஹுள் அகல்லியாத்எனும் விசேட பக்கேஜ் மூலம் மட்டுமே !! இது குப்ரிய ஆதிக்க நிலங்களில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை உம்மத் திட்கானது  !!தொட்டிக்குள் மீனாக அல்லது தண்ணீரில் ஒட்சிசன் சிலிண்டரோடு வாழ்வு என்பதே இன்று காட்டப்படும் ஒரே தீர்வு .

         தவறான வழிகாட்டலும் ,தவறான தீர்வுகளும் இன்று முஸ்லீம் உம்மத்தின் சுயதன்மையை முற்றாகவே அழித்து விட்ட நிலையில் இப்ராஹிம் (அலை ) அவர்களின் தியாகத்தை ஒரு சம்பிரதாய இதிகாசமாக அனுபவித்து இன்னொரு ஹஜ் பெருநாளை சந்திக்கிறோம் . முஸ்லீம்களாகிய நாம் (உட்பட முழு மனித குலமும்) முதலாளித்துவ ஏகாதிபத்திய அடிமை என்ற வாழ்வியல் அகீதாவை ஏற்றுக் கொண்டவர்களாகவே உலகத்தை பார்க்கிறோம் . 

                    உடன்படவே முடியாத இன்னொரு அகீதாவில் இருந்து இஸ்லாத்தையும் , இஸ்லாமிய வாழ்வியலையும் பற்றி தீர்வு தேடுவது தவறானது மட்டுமல்ல சாத்தியம் அல்லாதது .இந்த தவறை புரிந்தவர்களாக இருந்து கொண்டு குப்ரிய நெருக்கடிகளுக்கு இறை உதவியையும் எதிர்பார்க்கிறோம் . குப்ரியத் இஸ்லாமாக உள்வாங்க படுவதில் குப்பார் திருப்தி காண்கிறான் .அவனது திருப்தியை நாம் வெற்றியாக கருதுகிறோம் ! இதுதான் இஸ்லாமா !? இந்தக் கேள்வியோடு இப்போது ஒவ்வொரு தியாக திருநாட்களும் எம்மை தாண்டி செல்கிறது

No comments:

Post a Comment