Wednesday, October 22, 2014

முதலாளித்துவ ஏகாதிபத்திய ஏமாற்று ஒரு புரிதல் .......

 
  பட்டாங்கதியை பல அங்குலங்கள் நெஞ்சினுள் பாய்த்து விட்டு ஒரு இரண்டு அங்குலம் பின்னால் இழுத்து எதோ விடயத்தை சரிப்படுத்தியதாக (முதலாளித்துவ அமெரிக்க) அரசு எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .              - மார்டின் லூதர் கிங் -
               வெள்ளையர்கள் அல்லாதோரை மிருகத்தை விட கேவலமாக நடாத்தி விட்டு அதற்கு எதிரான இரத்தம் சிந்தும் போராட்டம் வலுவான போது சமரச அரசியலின் தூண்டில் அமெரிக்காவில் முதலாளித்துவ வாதிகளால் போடப்பட்டது .அதன் இரையாக கறுப்பின மக்களுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டது .அந்த எமாற்றின் உண்மையை உணர்ந்த ஒரு கறுப்பின போராட்ட தலைவனின் வார்த்தைகளே மேலே தந்தவை .

           இன்றுவரை இந்த வெள்ளை முதலாளித்துவம் கறுப்பின மக்களை தமது தேவைகளுக்காக சேவை செய்யும் ஒரு படைப்பாகவே பொதுவாக பார்க்கிறது . இது இந்துத்துவாவின் வர்ணப் பாகுபாட்டை போன்ற ஒரு கீழ்தர அரசியலே . ஆனால் அவர்களது மீடியாக்களில் ,குறிப்பாக ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டப்படும் கறுப்பின ஹிரோயிசம் என்பது நிஜத்தை போலவே  கட்டமைக்கப்பட்ட ஒரு காட்சி அமைப்பே ஆகும் .

          பரக் ஒபாமா போன்ற ஒரு வெட்கங்கெட்ட கறுப்பின மகனின் தலைமையில் இன்று அமெரிக்க தேசம் இருந்தாலும் அது ஒரு தெளிவான நாடகத்தின் அசத்தலான பாத்திரம் என்பது பலருக்கு புரியாது .இவைகள் எல்லாம் சந்தர்ப்ப இலாபங்களுக்காக திட்டமிடப்பட்ட தெளிவான நிர்ணயங்களே ஆகும் .(கறுப்பின உரிமை விடயத்தில் ஒபாமாவுக்கு உள்ள உறவு ,எகிப்தின் சீசிக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள உறவு போன்றதே ஆகும் .)

          கோயபல்சு என்பவன் குறிப்பிடுவது போல "இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது அது இருப்பதாக ஆகிவிடும் "என்ற பொய் தத்துவத்தின் அத்திவாரத்தில் வளர்க்கப்படுவதே முதலாளித்துவ 
ஜனநாயகம் !ஹிட்லரின் வலது கையான இந்த கோயபல்சு என்பவனின் சர்வாதிகாரம் நோக்கிய சடைவு ஜாலத்தை தொடருகிறது முதலாளித்துவ சர்வாதிகாரம்.

           உலகை ஆள்வது இரகசிய அமைப்பு ,இலுமினாட்டி,சாத்தானை வழிபடும் ஒரு குழுமம் என பல பெயர்கள் உலாவந்தாலும் ,இன்றைய அரசியல் ,பொருளாதார ,இராணுவ அஜண்டாவை யார் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப் பட்டாலும் அதன் விடையின் முடிவிடம் சில முதலாளிகளை சுற்றியே வேலிபோடும் என்பது பகிரங்க இரகசியம் .

         அந்த அடிப்படையில் சிந்தித்தால் முதலாளித்துவ கொள்கையின் காவலர்களாகவே இந்த இலுமினாட்டிகளை கூட கருத முடிகிறது .அப்படிப் பார்த்தால் குறித்த இந்த முதலாளிகளை தவிர எல்லோரும் பக்குவமாக ஏமாற்றப்படுகிறோம் .யாவும் போலி எல்லாம் ஏமாற்று என்ற விதிக்குள் சுழல்வதா மனித சமூகத்தின் முடிவு !? உண்மையான சுதந்திரத்துக்கான நியாமான சித்தாந்தம் என்று ஒன்று இல்லையா !? என ஒருவனுக்கு கேள்வி பிறக்கவில்லை என்றால் ......அவன் ஒபாமாவை போல சீசியை போல ஒரு வெட்கங் கெட்ட.........என்பதை தவிர சொல்வதற்கு வார்த்தையில்லை .

No comments:

Post a Comment