Wednesday, October 22, 2014

மாற்றம் என்றும் மாறாது !!!(பிக்ஹுள் அகல்லியாத் பற்றிய ஒரு தெளிவுக்காக. )

     எனது பெயர் மாற்றம் சடவாதத்தை பூஜிக்கும் உலகில் சத்தியத்தை சாத்தியமாக்கும் தீராத தாகத்தோடு வாழும் அபலை  .மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என அடித்துக் கூறிய பலர் டொலர் சித்தாந்தத்தை பஞ்சனை ஆக்கி அசத்திய வாழ்வில் ஆனந்தம் கண்ட போது இந்த மாற்றத்துக்கு எல்லாமே தூக்கி வாரிப் போட்டது .
          'ஜொப் 'கிடைக்கும் வரை இயக்கம் ,விசாகிடைக்கும் வரை இஸ்லாமிய விலாசம் ...........என உடும்பின் பொந்தில் நுழைய ஆயிரம் நியாயங்கள் .இந்த மாற்றத்துக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சிகள் தொடர்ந்தன. பின்னர் ஹுப்புத் துன்யா டைட்டில் பேசி சிலர் இந்த மாற்றம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள் .பின்னர் அவர்களே மாறிய போது ஹுப்புத் துன்யா அவர்கள் பாசையில் சுன்னா ஆகியது! இந்த மாற்றத்துக்கு இது புரியாத புதிர் ! 

             பிர் அவ்னின் கிதாபிட்கு அபூஜஹல் ஹம்து சலவாத்தோடு விளக்கம் சொன்னது போல பிக்ஹுள் அகல்லியாதுக்குள் இந்த மாற்றத்தை சிக்கவைக்க பல முயற்சிகள் .இரு கரங்களும் நாசமாகட்டும் என இறைவன் சபித்த அபூலஹபோடு முஸாபஹா செய்ய வேண்டுமாம் !! முடியாத போது மரத்தின் வேரை பற்றிப் பிடித்தாவது காட்டில் வாழு என்பது வஹியின் கட்டளை !இது என்ன குப்ரின் காலைப் பிடித்து வாழ வேத விளக்கம் !!! இந்த மாற்றத்தால் சகிக்க முடியவில்லை !!!???

1 comment:

  1. Assalamu alaikum dear brother in Islam really beautiful article there is no compromise in Islam

    ReplyDelete