Thursday, October 2, 2014

முதலாளித்துவ 'பிரைன் கியூமரில்' இலங்கை சிவிலியன்கள் !!

   கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை ஒரு அசாதாரண மாற்றத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது .அது நவகாலனித்துவ அடிமை அரசியலின் வெளிப்படை உண்மைகளாக இன்று அமுலாகின்றது . மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் ஆச்சரியமான முற்றுப்புள்ளியின்  தெளிவான விடையாக கூட அது இருக்கலாம் .

                                         நேற்று அந்த கொடிய நாடகத்தின் பாத்திரங்கள் பிளஸ் பார்வையாளர்கள் என்ற சிறப்புப் பாத்திரத்தை ஏற்றிருந்த அதே சிவிலியன்கள் ,இன்று புதிய நாடகத்தின் பாத்திரங்களாக 'டேக் அப் பிளஸ் மேக்கப் 'செய்யப்படுகிறார்கள் . அது 'பயங்கர எதிர்ப்பு என்ற முகமூடியில் முஸ்லீம் எதிர்ப்பு' என்ற டைட்டில் .

                                                                துறவிக் கொலைஞ்சனான பர்மா விராதின் வருகை எதிர்கால அவல வரிகளுக்கான தெளிவான எதிர்வு கூறலே.ஜனாதிபதி பாதுகாப்பை ஒத்த ஒரு 'ஸ்பெஷல் ஸ்காட் ' அவருக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அரசின் தெளிவான நிலைப்பாடு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .

              இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் ,அல்லது இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை என இராணுவ பேச்சாளர் உத்தியோக பூர்வமாக ஒருபக்கம் அறிக்கை வெளியிட ,மறுபக்கம் பாதுகாப்பு செயலாளர் அது இருப்பதாக சூளுரைக்கிறார். இந்த அமுக்கத்துக்கும் ,அச்சப்படுத்தளுக்கும் இடையில் பௌத்த மதவாதம் சிங்கள சமூகத்தின் உணர்வுகளை ஆக்கிரமித்து கொம்புசீவ பார்க்கிறது .

           ஆனால் நடப்பு நிகழ்வுகள் நிச்சயமான ஒரு திசைமாற்றும் அரசியலே ஆகும் . வாழ்க்கைச் செலவு ,அடிப்படை வசதிகள் தொடர்பில் நகைப்பான விளக்கங்கள் தொடர அபிவிருத்தி என்ற காட்சிப்படுத்தல்கள் மக்கள் முன் வைக்கப்படுகிறது .அதன் கபடத்தனம் புரியப்படாமல் இருக்க இந்த மதவாத திரை மேலதிக உதவியாக இருக்கிறது .

                மூன்றாம் உலக நாடுகள் மீதான ஏகாதிபத்திய தேசங்களின் பிடி இந்த இனவாத ,மதவாத ,கோத்திர வாத அரசியல் மூலமே சாத்தியமாகிறது .அப்படியானால் துட்டகெமுனு .எல்லாளன் கதை என்பது இலங்கையின்  நவகாலனித்துவ அரசியலின் முதலாம் பாகம் .இரண்டாம் பாகம் இப்போது இஸ்லாம் வேசஸ் பௌத்த மதவாதம் !
அதன் விளைவுகள் சிவிலியன் அவலத்தில் முதலாளித்துவ குபேரர்களின் வாழ்வு என்பதே !!!

              ஒரு சனியனை கௌரவப்படுத்தி எமது மூளைகளில் அமர்த்தியுள்ளோம் . அதிலே தீர்விருப்பதாகவும் நம்புகிறோம் ஆனால் அதன் சுயத்தன்மை அடுத்தவனை அழித்தாவது தான் வாழ்வதே அப்படி இருக்க அதன் தீர்வில் நம்பிக்கை வைப்பதில் என்ன பயன் .அதுதான் முதலாளித்துவம் எனும் அரசியல் சித்தாந்தம். இதில் ஆட்சிகள் மாறினாலும் எப்போதும் காட்சிகள் மாறாது . அதன் வழி இலங்கையில்  மாட்டை அறுப்பதில் காட்டப்படும் உயிர் வதை ,மனிதனை அறுப்பதில் தொடர்ந்தும் நியாயமாக காட்டப்படலாம் . என்ன ஒரு சின்ன காட்சி மாற்றம் இப்போது குறிவைக்கப்படுவது முஸ்லீம்களின் கழுத்துகள் அவ்வளவே !!!

No comments:

Post a Comment