Friday, October 10, 2014

சமரசக் காவடி எடுக்கும் சகோதரர்கள் புரிவார்களா !?

                                    "இறைவன் மீது ஆணையாக ,நான் இந்த இலட்சியப் பணியை கைவிடுவேன் என்ற நம்பிக்கையில் (குறைசித் தலைவர்களாகிய ) அவர்கள் எனது ஒருகையில் சூரியனையும் ,மறுகையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் இப்பணியில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை "                 - முஹம்மது (ஸல் ) -

                                 சமரசம் என்பதன் அர்த்தம் சித்தாந்த ரீதியாக புரியப்படும் போது அது ஒரு சில விட்டுக்கொடுப்புகள் என்ற அர்த்தத்தில் அமையாது
மாறாக சித்தாந்த தோல்வியின் உடன்பாடாக அது அர்த்தப்படும் .சிலதுக்காக பலதை அல்லது பலதுக்காக சிலதை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ கைவிடும் நிலையையே சமரசம் என்பது காட்டி நிற்கும் .

                        அந்தவகையில் வஹியை புறந்தள்ளிய ஒரு அதிகார அந்தஸ்து அமைப்பை முன்னிறுத்தி குறைசிகள் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் )பேரம் பேச முயன்ற போதே மேலே தந்த ஆணித்தரமான பதில் கொடுக்கப்பட்டது .அனைத்தையும் தருகிறோம் அதற்காக இந்த பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதே குறைசிகளின் ஒரே கோரிக்கை .

                                             அதிகாரத்துக்கான வாய்ப்பு தேடி வருகிறது இப்போது அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) அதிகாரப் பெறுமதியற்ற சித்தாந்த இஸ்லாம் மட்டுமே இருந்தது ! சிலவேளை வெளிப்பார்வையில் விடயத்தை மறைத்தவராக ஆரம்பத்தில் ஆட்சியை பிடித்திருக்கலாம் !பின்னர் காலத்தால் தாருன் நதுவாவை சட்டங்களால் கட்டுப்படுத்தியதாக படிமுறையாக இஸ்லாத்தை அமுல்படுத்தி இருக்கலாம் .

                                       பெரும்பான்மை விருப்பு என்ற சூழ்நிலையை உருவாக்கி அபூஜஹகளை ஓரம்கட்டி இருக்கலாம் .ஆனால் இதையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) செய்யவே இல்லையே ! ஹக் ,பாத்தில் என்ற என்றும் இணையமுடியாத இரு கோடுகளை ஆட்சி என்ற அதிகார நிலையால் இணைக்கும் அரசியலை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கற்றுத் தரவே இல்லையே !

          இந்த வழியில் இப்போது சிலர் சுன்னாவை புறக்கணித்த ஒரு அரசியலை பேசி களமிறங்கி உள்ளார்கள் . முஹம்மது (ஸல் )அவர்களின் இறுதி நபித்துவத்தை நேரடியாக மறுத்த யூத ,கிறிஸ்தவர் ,காதியானி ,போன்ற பல அமைப்புகளை பற்றி நாம் அறிந்துள்ளோம் .ஆனால் நவீனம் என்ற காரண  தலீல் மூலம் மறுக்காமல் மறுக்கும் கூட்டத்துக்கு என்ன பெயர் வைப்பதாம் !?  

No comments:

Post a Comment