Tuesday, September 30, 2014

சவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு !?

(நபியே !தேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு
காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும்
இருக்கின்றது. (சூரா அல் பகரா :வசனம் 189)
   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ,அல்லாஹ்வின் பதிவுப்
புத்தகத்தில் வானங்களையும் ,பூமியையும் படைத்த நாளில்
இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் அதில் (துள்
கஹதாஹ்,துள் ஹஜ் ,முஹர்ரம் ,ரஜப் ) ஆகிய நான்கு
மாதங்கள் புனிதமானவை ஆகும் .
                                 (சூரா அத் தௌபா :வசனம் 36)  
அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாயும் சந்திரனை
பிரகாசிக்கும் ஒளி உள்ளதாகவும் ஆக்கினான்.ஆண்டுகளின்
எண்ணிக்கையையும் ,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து
கொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய )அதற்கு மாறி மாறி வரும்
பல படித்தரங்களை உண்டாக்கினான் ;அல்லாஹ் உண்மை(யாகதக்க காரணம் )கொண்டல்லாது இவற்றைபடைக்கவில்லைஅவன்
இவ்வாறு அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கிறான்
                                   (சூரா அல் யூனுஸ் :வசனம் 5)
 சவூதியில் வெள்ளிக்கிழமை அரபா தினம் இலங்கையில் திங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் ! கடந்த சில வருடங்களை போலவே இம்முறையும் அய்யாமுத் தஸ்ரிகின் குர்பானுக்குரிய ஒரு நாள் 
முழு மதி தினம் (போயா நாள் ) குப்ரிய சட்டப்படி அன்று குர்பான் 
கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம்!!! (பூரண நிலவு என்பது சந்திர 
மாதத்தின் நடுப்பகுதியில் தான் வரமுடியும் என்பது வேறு கதை .)
ஆனால் இதற்கு பெயர் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாம் .

       குப்ரிய சித்தாந்தம் அதன் கீழ் வாழ்வு என்ற சரணடைவு 
அரசியலின் கீழ் பிறை விவகாரம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம் !
ஆனால் அல்லாஹ்வின் கட்டளைப்படிபிறை  மனித சமூகத்தின் 
பொது நாட்காட்டிக்கான அடிப்படை கருவி .அதனால் தான் ஹஜ்ஜை சம்பந்தப்படுத்தி வஹி பிறை விவகாரத்தை விளக்கி நிற்கிறது . 
சூரா அல் பகரா :வசனம் 189 இதனை மிக தெளிவாக எடுத்துக் 
காட்டுகிறது .

         ஹஜ் ,ஹஜ்ஜுப்பெருநாள் என்பன தெளிவாகவே ஹஜ்ஜின் கிரியைகளை அடிப்படியாக கொண்டே பின்பற்றப்படுவது .அப்படி 
இருக்க இன்று தேசிய பிரிகோட்டை அடிப்படையாக கொண்ட பிறை வாதத்தால் அந்த நடத்தை கைவிடப்பட்டுள்ளது .அதிலும் பொதுப் 
பிறை பற்றி பேசுவோர் குழப்பவாதிகளாக இந்த தேசிய பக்த கோடிகளால் பிரச்சாரப்படுதப் படுகிறார்கள் .உண்மையில் இதில் 
யார் உண்மையான குழப்பவாதிகள் என்பதை உணர இந்த ஹஜ் விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு .

          புனிதம் மிக்க மாதங்களில் யுத்தங்களில் ,பழிவாங்குதலில் வலிந்து ஈடுபட முடியாது என்ற காரணத்தினால் அன்றைய 
ஜாஹிலீய அரபிகள் பிறை கணிப்பின் நாட்களை தமது விருப்பு 
வெறுப்புக்கு ஏற்ப மாற்றினர். வஹியின் வருகை இந்த பித்னா கூட்டத்தின் அடாவடித் தனத்துக்கு முற்றுப்புள்ளி இட்டது .மாதம் 
என்பது 30 அல்லது 29 நாள் என்பது தெளிவாக அல்லாஹ்வின் தூதர் 
கற்றுத் தந்தது .

        இங்கு புரிய வேண்டிய அடிப்படை பிறை என்பது வெறும் சம்பிரதாயமாக ,தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்ட ஒரு மத விவகாரமாக மாற்றப்ப்படுமாக இருந்தால் அது மனித 
சமூகத்துக்கான பொது நாட்காட்டி ஆகமுடியாது என்பதே ஆகும் .
அப்படி சம்பிரதாயமாக எடுத்துக்கொண்டால் பொது உடன்பாட்டுக்கான 
பிறை கணிப்பின் அவசியம் இல்லாமல் போய்விடும் !! இப்போது 
இறைவனின் கட்டளை ஏனைய பல விடயங்களை போலவே 
மீறப்பட்டு விடும் .நடந்துள்ளது அதுதான் .

      இந்த சிக்கல்களுக்கு எல்லாம் ஒரே தீர்வு முஸ்லீம் உம்மத்தின் சிந்தனை மாற்றப்பட வேண்டும் .ஒரே பொதுத் தலைமை அரசியலின் 
கீழ் மீண்டும் முஸ்லீம் உம்மத் இணைக்கப்பட வேண்டும் .அதுவரை 
இந்த பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி குர்பான் கொடுக்கும் வரட்டுப் 
பிடிவாதம் விடுபடப் போவதில்லை .

            ஹராமான நாட்களான (அய்யாமுத் தஸ்ரிக்கின் 3 
நாட்களுக்குள் ) நோன்பு பிடிக்கும் படுபாவத்தை சரிகாணும் இந்த 
குப்ரிய சர்க்கார் சார் உலமாக்கள் மறுமையில் என்ன பதில் சொல்வார்கள் !? என்பது ஒருபக்கம் இருக்க ,பழியும் பாவமும் அந்த 
உலமகளுக்கே (என இயேசு கிறிஸ்து தொடர்பில் கிறிஸ்தவர்கள் கூறுவது போல) பாவச் சுமையை சுமத்தி தப்பிக்க பார்க்கும் சகோதரர்கள் ஒன்றை தெளிவாக உணர வேண்டும் .அது இஸ்லாம் 
புரோகித மார்க்கம் இல்லை என்பதே ! இது விடயத்தில் எம்மிடமும் 
மறுமையில் கேள்வி இருக்கிறது .



No comments:

Post a Comment