Sunday, February 24, 2013

ஐ .நாவின் பார்வையில் யுத்தக் குற்றமும் அது கண்டும் காணாத அடாவடிகளின் யுத்த சுத்தமும் !



                           அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த   ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம்  பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும்  ' அடியாளானது !


                  M 16 இற்கு  AK 47 , F 16 இற்கு MIC 29 , 'குரூஸ் ' இற்கு 'ஸ்கட் ' , C .I .A இற்கு K .G .B என கொலைகாரத்தனத்தின் மயானக் கோட்பாட்டில் தேச ,தேசிய ,பிராந்திய கோமாளிகளாய் மனித குலம்  அறியாமல் பனிப்போர் நாடகம்  அரங்கேற்றப்பட்டது . K .G .B  இற்காக 'வந்தே மாதரம் ' இந்தியா சொன்னால் C .I .A இற்காக பாகிஸ்தான் ' ஜிந்தாபாத் சொல்லும் ' ! சர்வதேச பக்கா ரவுடிகளின் பிராந்திய சமநிலை பேணும் பேட்டை ரவுடித் தனத்தில் அந்த நாசக் கரங்களோடு நேசக்கரமாய் நேற்று இணைந்தது வெளியில் தெரியாதது . 

                       தடைகளை மீறி இந்தியா 'நியூ கிளியர் 'ஆயுதம் செய்தபோது ,பாகிஸ்தானின் அணுத்துறையில் மறுமலர்ச்சி கண்டு சில வருடங்களில் 'அட்டாமிக் பாம் ' அங்கும் 'சக்சஸ் புல் ' இந்த விதி மீறலை ஐ .நா கேட்டால் , 'சோவியத் வீட்டோ ' இந்தியாவை காக்க ,'U . S வீட்டோ ' வில் பாகிஸ்தான் பதுங்கும் ! 1990 களில் சோவியத்தின் வீழ்ச்சியில் இந்த 'வீட்டோ  பவர் ' கம்பியூனிச அணிக்கு சற்று' டாட்டா காட்டியது ' ! 'சீனா தாங்கும் என்ற நப்பாசைக்கும் 'வெஸ்டன் பீஜிங்கின் ' விளம்பரப் பலகைகள் அங்கும் முதலாளிகளின் நாச வரவை நேசமாகக் காட்டியது . 

                                      இந்த 'கபிடலிச' ஏகாதிபத்தியத்தில் சந்தை பிடிப்பு நியாயத்தில் 'சமரசம் சாதாரணமாக ' வீட்டோ பவர் ' 'நேட்டோ பவர் 'ஆக அநியாயமாக 500 வருட மசகு எண்ணை கொள் நிலம் ஈராக் அமெரிக்க வசமானது . இந்த 'அப் டு டேட் ' வளக் கொல்லைக்கு பூரண இணை அனுசரணை இந்த ஐ .நா தான் . இந்த ஐ. நா எப்போது 'நேட்டோவில் ' சேர்ந்தது !? என்ற வினாவுக்கு ஈராக் ஒரு தெளிவான சாட்சி . (இப்போதும் 'ஒபெக் ' ஓரமாக இருந்து வேடிக்கை தான் பார்த்தது !? மசகு எண்ணை வளத்தின் கட்டுப்பாட்டுக்காக இந்த 'ஒபெக் 'என்றால் ஏன் இங்கு மௌனம் !? அதன் பதிலை அமெரிக்கன் 'பெப்சி கோலாவே ' சொல்ல வேண்டும் .)


                     'சர்வதேச அமைதிக்கு ஐ .நா.சபை என்று ஒரு அமைப்பு இல்லை என்பதற்கு   இப்படி ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . அது முதலாளித்துவ அணியாயங்களுக்கான அரங்கேற்ற அமைப்பு ! இங்கு மேற்கின் வெள்ளையனுக்காக ஆபிரிக்கனும் ,ஆசியனும் கூட தலைவராவான் .ஆனால் இலாபம் அடையப் போவது என்னவோ முதலாளித்துவ ஏகாதிபத்தியமே . 


No comments:

Post a Comment