Thursday, February 7, 2013

இது சியோனிச ரேஞ்சில் ஒரு சிதம்பர இரகசியம் .


            கழுகுக்கு  உதவ தலைப்பாகை கட்டும் நாட்டுக்கு  சிங்கப் படை அனுப்ப கழுகு கேட்டால் அதுபற்றி யோசிப்போம் . மாணிக்க தீவின் ஊடகத் துறை பேச்சாளர் அதிரடி பேட்டி !! இந்த விடயம் சற்று குழப்பமாக இருக்கலாம் .ஆனால் தாம்  சியோனிசத்தின் பெட்டிப் பாம்புதான்  என்பதை சொல்லாமல் சொல்லும் ஆதார வாக்குமூலமாகவே இதை கருத வேண்டியுள்ளது .

                                                  நேற்றுப் பெய்த மலையில் இன்று முளைத்த காளான் ஒரு வீரத் தலைமுறையோடு முட்டி மோதி சரித்திரம் படைக்க நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும்;இந்த உதவித் திட்டத்தின் நிகழ்கால  எதிர்கால விளைவுகள்  மிக ஆபத்தாக படுகின்றது . எங்கோ ஓடும் பாம்பை இழுத்து மடியில் விட்டால் போல ஆகாதா ? எனக் கேட்டால் என்னிடம் பதில் இல்லை . 

                                                ஆனால் நடப்பு முடிவுகளின் பின்னால்  காரணங்கள் பல உண்டு இப்போது பொலிடிகல்  ரேஞ்சில் சினைப்பர் குறிவைக்கப் பட்டிருக்கும் சிறுபான்மைக்கு சில வேளை  நிரந்தர சீல் வைக்க 'காயிதா ' பாட்டை தேசிய மயமாக்கும் 'இன்டெர் நஷனல்' காய் நகர்த்தளில் தொடங்குவது என்ற பக்குவமான முடிவாகக் கூட இது இருக்கலாம் . நேற்றைய அனுபவத்தில் இன்னொரு இன ஒடுக்கு முறை சர்வதேச பொலிடிக்ஸ் உடன் இணைந்த லோக்கல் பொலிடிக்ஸ் !!! எங்கள் குஞ்சுகள் கொஞ்சம் நிதானமாக அதே நேரம் தெளிவாக சிந்திப்பது நலம் .


No comments:

Post a Comment