சியோனிசக் கழுகின் சர்வதேச நரவேட்டை போதாமல் பலத்த காவலோடு ஒரு சித்திரவதைக் கூடத்தையும் வைத்துள்ளது என்றால் அது குவாண்டனோமோ என்று பால்குடிக் குழந்தை கூட நடுக்கத்தோடு கூறும் . இந்த உண்மைகளை அமெரிக்கரின் வாய் வழியாக கேட்கும் போதாவது உலகம் உணருமா ? இதோ கீழே சில உண்மைகள் .

குவாண்டனமோ சிறை! உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பேய் சிறை என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்கா!குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே.
விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர்."பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.
கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களை ஏவி, அவர்களை கடித்துக் குதற வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.தண்ணீரில் மூழ்கடித்தல், கைதிகளின் அறைகளில் pepper spray அடித்து மூச்சி திணறடிப்பது, மூக்கின் வழியாக திரவத்தை பலமுறை செலுத்தி மயக்கமடைய செய்வது, ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.
கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.
அநீதியையும் அராஜகத்தையும் மட்டுமே செய்யும் அமெரிக்கா வெட்கமே இல்லாமல் மனித உரிமை குறித்து பேசுவது அயோக்கியத்தனம் என்றால் பாதிக்கப்பட்ட சமூகத்தையே பயங்கரவாதிகளாக மக்களை நம்பவைக்கும் ஊடகங்களும் அதைவிட கேவலமான பிறவிகள் தானே?
No comments:
Post a Comment