Wednesday, August 7, 2013

முஸ்லீம் பெரும்பான்மை நிலம் முதல் சிதறிவாழும் நிலம் வரை இதோ இன்னொரு 'ஈத் முபாரக் '!


             மனித அடிமைத்துவத்தில் முஸ்லிமை  மறுபிரவேசம் புரிய வைத்த அந்த 1924 இல் கிலாபத்தின் வீழ்வோடு  பல ரமழான்கள் 'ஜாஹிலீய ' அதிகாரங்களின் கீழ் கடந்து போக, வழமை போலவே புத்தாடை உடுத்தி புதுப் பொழிவோடு அசத்திய  வீதிகளில் தொடர்ந்தும் பயணிக்கும்  இந்த உம்மத்தின் அவல ஊர்வலங்களுக்கு வயது இன்று 90. இந்த அரசியல் அநாதைகளுக்கு இது இன்னொரு பெருநாள் !


              இஸ்லாம் ஒரு (தீன்) மார்க்கம் 'தியரியாய்' (theory ) வாழ்ந்திருக்க ! குப்ரிய (தீன்) 'பிரக்டிகள்'( practical) ஆகி கொடிகட்டி வாழ்வை ஆக்கிரமிக்க , இரட்டை தோணி நியாயத்தில் நாம் கால்வைத்து நிராகரிப்பின் கடலில் மதச்சார்பின்மை (secularism ) துடுப்பு தொடுத்து 
அவமானம் சூழ கடந்து வந்துள்ள இன்னொரு பெருநாள் !    

                  சத்திய வாழ்வை 'ஹப்புத் துன்யாவில் ' புதைத்து விட்டு அந்த உலகாசையில் கோழைத்தனத்தை கோட்டையாக கட்டி மறுமை மறந்த மரண பயத்தோடு அதில் நுழைந்து சாத்தானிய சக்திகளுக்கு 'சரண்டர் பொலிசியில்' சல்யூட் அடித்து பிறையை கூட குப்ர் போட்ட  கணக்கில்  வரவேற்கும் நிலையில் இன்னொரு பெருநாள் !



            தேசிய ஆசையில் சகோதரத்துவம் தொலைத்தோம் !? பிரிவிணைக்கு நியாயங்கள் கூறினோம் 'சியோனிஸ' கூட்டு காட்டேறிகள்  குத்தகை களஞ்சியமாய் முஸ்லீம் நிலங்களை ஆக்கிரமித்து இறுமாப்போடு எம்மை வேட்டையாடி ஏப்பம் விட ! அந்த மயான பூமியில் எஞ்சிய இடிபாடுகளுக்குள் மிஞ்சியதை 'புரியாணியாக்கி ' இரசித்து புசித்து மகிழ 
இதோ இன்னொரு பெருநாள் !

                 'வைட் ஹவுஸ்  ' அராஜக தாகூத் முதல் 'கோலி வூட்' கோமாளித்' தாகூத்' வரை 'விஸ்வரூபமெடுத்து' இஸ்லாத்தை இடித்துடைக்க முயலும் போதும் . போதாக் குறைக்கு காவி அணிந்த கழுதைகளும் பெரும்பான்மை 'பொலிடிக்ஸ்' சாட்டில் எட்டி உதைத்து மஸ்ஜித் சுவர்களை குட்டிச் சுவராக்க துடிக்கும் நிலையிலும் நாமும் கொண்டாடுவோம் இதோ இன்னொரு பெருநாள் !   ஈத் முபாரக்....


  


No comments:

Post a Comment