Saturday, August 17, 2013

நாங்கள் யார்? எமக்கு ஏன் இந்த நிலை?


                குப்ரிய ஆதிக்கப் பேய்களின் வெறியாட்டம் அரசியல் ,இராணுவ பொருளாதார வடிவங்களில் இந்த முஸ்லீம் உம்மாவின் இயல்பு வாழ்க்கையோடு உலகெங்கும் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருக்கின்றது .நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  இந்த அதிகார மமதை மிக்க கசாப்புத் தத்துவத்தில் முஸ்லீம் உம்மாவின் உயிர் ,உடமை ,உரிமை , எல்லாவற்றிலும் 'தாகூத்திய ' அடங்காப் பிடாரிகள் தம் கைவரிசையை தாராளமாக காட்டி நிற்கின்றனர் .

                முஸ்லீம்களாகிய நாம் என்ன செய்வது ? இதற்கெல்லாம் தீர்வென்ன ? சமரசம் மூலம் சரணடைவா ? அந்த சரணடைவின் மூலம் தொடர்ந்தும் மனித அடிமை வாழ்வா ? அதைத்தானே நீண்ட காலம் செய்கிறோம் ! இனியும் வாழ்வதற்காக 'இஸ்லாமிய வாழ்வியலை  ' கோமா நிலைக்கு ஆக்கி நடைபிணங்களாக இருந்து விட்டுப் போவோமா ? இதுவும் சிலரது வாதம் .

                     தாயின் மார்பகங்கள் அறுக்கப்படுவது கண்டு வெருண்டோடிய குழந்தை தந்தையின் மண்டையோட்டில் தடுக்கி விழுந்தாலும் ! அவனாவது தப்பினானே 'அல்ஹம்துலில்லாஹ் ' என்று கூறி விட்டு 'அநாதை 'லிஸ்டில்'(list ) ஆள் சேர்த்து நிவாரணம் கொடுப்பதோடு திருப்தி காண்பார் இன்னும் சிலர் ! சிந்திக்க வேண்டிய விடயம் தான் .

               இந்த முஸ்லீம் உம்மாவின் மீது 'காஸா முதல் காஸ்மீர் ' வரை தொடரும் கண்ணீர் கதை 'LIVE STORY' ஆக பக்கங்களை இந்த உம்மத்தின் சிதைந்த சதைகளால் அலங்கரித்து அதன் இரத்தத்தால் வர்ணம் கொடுக்கப் பட்ட மீடியா செய்திகளாக தொடர்கின்றதே !? செறிவு குறைந்த யூரேனிய குண்டுகளால் பரீட்சிக்கப் பட்ட முஸ்லீம் நிலங்களில் கதிர்வீச்சின் உதவியுடன் அவலப் பிறப்புகள் சகிக்க முடிகின்றதா ? இப்படி ஈராக்கில் ,பர்மாவில் , எகிப்தில் ,சிரியாவில் குளமாய் ,நதியாய் ,கடலாய் குப்பாரிய மேலாதிக்கமும் அதன் கைக்கூலிகளும் குடித்துக் ,குளித்து மகிழ இழக்கப் படுவதும் நம் சகோதர இரத்தம் தான் .

               இப்போது நம்முன் பல கேள்விகள் ! எப்படி போராடுவது ? ஒரு இனமாக போராடுவதா ? மார்க்கத்தை மதமாக்கி 'செகியூலரிசத்தில்' பெரும்பான்மை பவர் கொடுத்து அதற்காக போராடுவதா ? இழந்ததற்காக போராடுவதா ?   ஏதோ ஒரு எதிர்காலத்துக்காக போராடுவதா? தட்காப்புக்காக போராடுவதா? தக்கன பிழைத்தளாக போராடுவதா? கடைபோடுமளவுக்கு கேள்விகள் விடை தேடும்போது ! அது ஏதோ 
சந்தை போலாகி கூவி அழைக்கிறார்கள் பல விடை வியாபாரிகள்!!

         இந்த விடைச்சந்தையில் இஸ்லாம் மட்டும் புரிந்தும் புரியாமல் இரண்டாம் பட்சமாகி , காலத்தின் தேவை என்ற கருப்பொரு ளுக்கு தான் இன்று அமோக DEMAND !  'இகாமததுத் தீனை விட சமத்துவம் சக வாழ்வின் பெயரில் 'தாகூத்தை' சமாளிக்க கொடுக்கும் இடியப்ப புரியாணி மோஸ்ட் பெடர் ஆகிப்போக 'ஹாக்கீமியத் அல்லாஹவுக்கே 'என்பது முஸ்லீம் உம்மாவுக்கே வேகாத பருப்பாக ஆகி விட்டது ! தவறு இந்த இடத்தில் இருந்து தான் தொடங்குகின்றது.

                                                                                                           ( தொடரும்...)   

No comments:

Post a Comment