Monday, August 26, 2013

இன்றைய தேவை வெறும் போர்க்குணமா ? அல்லது போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமா ?



         ஒரு தாய் அவளின் குழந்தையிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டபின் அது பசி கொண்டு அழுகின்றது . இப்போது அதற்கு ஏதாவது ஒரு பால் புகட்டப்படும் போது அழுகையை நிறுத்தி ,அதை பருகி ஜீரணித்து வாழ தொடங்கினால் அது சராசரிப் போர்க்குணம் . இது அணைத்து விலங்குகளுக்கும் பொதுவானது .ஆனால் தனது சொந்தத் தாயே தனக்கே உரிய தாய்ப்பாலை தரும்வரை ஒரு குழந்தை  வீரிட்டு கதறி அழுவது சற்று வித்தியாசமானது இதுதான் போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமாகும்  . ஒரு சராசரி மனிதனுக்கும் தெளிவான  இஸ்லாமிய வாதிக்கும்  இடையிலான வித்தியாசம் இதுதான் .


                           ஒரு தெளிவான  இஸ்லாமிய வாதி சூழ்நிலையின் பசப்பான நியாயங்களில் எப்போதும் சரிகாணவே மாட்டான் . அவற்றை முற்றாகவே புறந்தள்ளி தன்னையே அர்ப்பணித்து இஸ்லாத்தை தனிப்பெரும் சூழ்நிலையாக மாற்ற போராடிக்கொண்டே இருப்பான் .

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கின்றான் .(ஆனால் ) யார் ஈமான் கொண்டு (அந்த அல்லாஹ் அருளிய வாழ்வியலின் பிரகாரம் அணைத்து ) நல்லமல்களையும் செய்து (அந்த உயர்ந்த இலட்சிய வாதம் நிலைபெற தன்னையே அர்ப்பணித்து அந்த )சத்திய (மார்க்க)த்தை கொண்டு ஏவி (அந்தப்பணியில் சத்திய மறுப்பாளர்கள் கொடுக்கும் மிகப் பலமான சோதனைகளின் போதும் பொறுமையாக (போராட்டத்தை  குப்ரின் பேரம் பேசல்களுக்கு விலை போகாமல்) மேட்கொள்கிறார்களோ அவர்களைத் தவிர .
                            
                                                                                   (அல்குர் ஆன் சூரா அல் அஸ்ர் )

       அது அல்லாமல் குப்ரிய அரசியல் குட்டையில் ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு முஸ்லீம் சமூகத்தையும் திசை திருப்பி சுயநலமும் போலித்தனமும் மிக்க குப்ரிய அதிகாரக்  கூட்டத்துக்கு ஒருபக்கம் 'கோவிந்தா 'போட்டு விட்டு மறுபக்கம் அல்லாஹு அக்பர் சொல்வது சுன்னா வழியல்ல என்பதை முஸ்லீம் உம்மா புரிந்து கொள்ள வேண்டும் .

              பௌதீக ,வரலாற்று, ஆன்மீக ரீதியான முஸ்லீம் உம்மாவின் ஒன்றிணைவு தேசிய வாதத்தால் கட்டுப்படுத்தப் பட்டபோது அதையும் ஜீரணிக்கக் கற்றுக் கொண்டோம் !ஜனநாயகம் எனும் பசப்பு அரசியலை விடுதலையாக வர்ணித்து மதச் சார்பின்மையில் காலந்தள்ள எதிரி அல்லாஹ்வின் எதிரி அழைத்தபோது மதில் மேல் பூனையாக வாழவும் துணிந்தோம் ! கேட்டால் நிர்ப்பந்தம் என்ற நியாயத்தையும் 'பிக்ஹ் ' ஆக்கி வேறு வெளியிட்டோம் . 

                     இஸ்லாத்தை எதோ பண்டைய இதிகாசமாய் இரசித்து விட்டு குப்ரின் நியாயங்களோடு ஒன்றிய வாழ்வா காலத்தின் தேவை ?நாங்கள் கழுத்தே சீவப்பட்டாலும் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் அதன் வழிமுறையில் இருந்து மட்டுமே போராடியவர்கள் இந்த முஸ்லீம் உம்மா . 

          அந்த 1924 ற்கு முன் பிரித்தானிய காலனித்துவத்தின் இறுதிப் பகுதியில் கூட இந்த முஸ்லீம் உம்மத்தின் உள்ளிருந்து சில அடிவருடிகளை  பொறுக்கி எடுத்து இதோ உங்கள் தலைவர்கள் ! என ஆங்கிலேயன் சொன்னபோது எங்கள் தலைவர் (கலீபா ) துருக்கியில் இருக்கிறார் என மார்தட்டிச் சொன்னோம் .அந்த கிலாபாவின் வீழ்ச்சியோடு ...அவமானமும் ,தலைகுனிவும், கொடூரமான அடக்கு முறைகளும் , திட்டமிட்ட அழிப்புகளும் தொடர்கின்றன . 

                           அரசியல் அனாதைகளாகிவிட்ட நாம் எதிரியின் நிபந்தனைகளில் இருந்து எமது வாழ்வை பிச்சை கேட்கும் தரத்தில் எம்மை ஆக்கிவிட்டது !? 'ஹுப்புத் துன்யாவை' தத்தெடுத்து எம் சொந்தப் பிறவியான போர்க்குணத்தோடு கூடிய போராட்ட உணர்வை விரட்டி அடித்தோம் . அவமானத்தை 'ஹிக்மத் ' என்ற பெயரில் சுமக்கிறோம் . 

            
                 

No comments:

Post a Comment