Friday, August 2, 2013

மீண்டும் மீண்டும் தாகூதிய எல்லைக்குள் ஓட்டப் பட்டு விடுகிறோம் ஏன் ? ('தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 3 )

"(இஸ்லாம் எனும் இந்த )தீனில் எந்த கட்டாயமோ நிர்ப்பந்தமோ (அதைப் பின்பற்றாதோர்க்கு )இல்லை .வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது .இனி எவர் 'தாகூத்தை ' நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக ,மிகப் பலமான பிடிமானத்தை பற்றிக் கொண்டார் . அது என்றுமே அறுந்து விடாது .(அவர் தன்னுடைய ஆதரவாளனாக தேர்ந்து கொண்ட ) அல்லாஹ் (யாவற்றையும் ) செவியுறுவோனும் ,நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் . "

               "  இறை நம்பிக்கை கொண்டோர்க்கு பாதுகாப்பளித்து உதபுபவன் அல்லாஹ்தான் !அவன் அவர்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான் . மேலும் இறை நிராகரிப்பை மேட்கொண்டோர்க்கு உதவுவோர் 'தாகூத்களேயாவர்', அவர்கள் இவர்களை ஒளியில் இருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர் .அத்தகையவர்கள் நரக வாசிகளே ஆவர் ; அவர்கள் அந்த நரக நெருப்பில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள் ."

                                                    (TMQ சூரா அல் பகறா : வசனம் 256,257)

                                 மனித சமூகம் அவனின் உண்மையான எஜமானன் தொடர்பான தேடலின் போது சந்திக்கும் மிகப் பயங்கரமான எதிரியே இந்த 'தாகூத்' ஆவான் என்பதையே மேலே தந்த அல் குர் ஆன் வசனம் விளக்கி நிற்கின்றது . வஹியுடைய அழைப்பு அதை வாழ்வியலாக ஏற்ற சமூகத்தின் நிலையான சவால் இந்த 'தாகூத்' தானென்றால் அது மிகையான கருத்தல்ல .
                                      

                                 இறைவனோடு சவால் விடத்தக்க ஒரு அதிகார எல்லையையும் அதற்கே உரிய நாகரீகத்தையும் , வாழ்வியலையும் ,இராணுவ ,பொருளாதார வலிமையையும் இந்த 'தாகூத்கள் ' கொண்டிருப்பார்கள் . காரண காரிய விதிக்கு உட்பட்ட இந்த சக்தியை 
மட்டும் நம்பி அவர்களின் பின்னே செல்லும் மனித சமூகத்தை விடுவிப்பதே ஒவ்வொரு நபிமார்களின் போராட்டமாக இருந்தது . அந்த நபிமார்களின் பின்னால் அணிவகுத்து நின்ற இறை விசுவாசிகளும் இந்த சத்தியப் போரில் பங்காளிகள் . 


                                                   இந்த மகத்தான பணி இறுதித் தூதர் (ஸல் ) அவர்களின் பின் இஸ்லாத்தின் அதிகார அரசியலான கிலாபா ஆட்சி மீது சுமத்தப் பட்டது . அங்கு முழு முஸ்லீம் உம்மாவின் ஒரே தலைவரான  அமீரில் மூமினீனின் (கலீபா ) பின்னால் அணி திரண்டு இந்த பணியை அதாவது , இறைவழிகாட்டளை மனித சமூகம் புரிந்து கொள்ள விடாமல் தடையாக சவால் விட்டு நிற்கும் 'தாகூத்களை' அகற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகி விட்டது .

                                                     "பனூ இஸ்ரவேலர்களை நபிமார்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார்கள்  ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்கு பதிலாக பொறுப்பு வகிப்பார் .எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது . கலீபாக்கள் உருவாகுவார்கள் .ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் .என அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியதும் , அல்லாஹ்வின் தூதரே ! இது விடயத்தில் எங்களுக்கு என்ன கட்டளை இடப் போகிறீர்கள் ? எனக் கேட்டனர் .அதற்கு நபி (ஸல் ) அவர்கள் , முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை (பையத் ) கொடுத்தீர்களோ அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள்.
அவர்களுக்குரிய கடமையை அவர்களுக்கு செலுத்தி விடுங்கள் , நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் கண்காணித்ததை பற்றி அவர்களிடமே விசாரணை செய்வான் என்று பதில் சொன்னார்கள் ." ( அறிவிப்பு :- அபூ ஹுரைரா (ரலி ) ஆதாரம் :- புஹாரி ,முஸ்லிம் )

                                   என்ற நபிமொழிப் பிரகாரம் இந்த 'தாகூத்துக்கு' எதிரான தொடர்பணியின் அதிகார கட்டமைப்பு வடிவம் இஸ்லாத்தின் அடிப்படையில் வரையறுக்கப் பட்டு விட்டது .கிலாபா , கலீபா ,பையத் என்ற இந்த சுன்னாவின் வழிமுறை 1924 ம்  ஆண்டு வரை பலவீனமாகவேனும் உலகில் இருந்தது . அதன் பின் அது மன்னர் முடி அதிகார  பேராசை கொண்ட சில அரேபிய 'தாகூத்' களால் அரபி ,அஜமி என்ற ஜாஹிலீய நியாய அழைப்பின்  கீழ் துண்டாடப் பட்டது . இதற்கு யகூதிய , நசாரா தாகூத்கள் பக்க பலமாக இருந்தன . 


                              இந்தப் பலவீனத்தோடு தேசியம் , மதச் சார்பின்மை எனும் ஜாஹிலீயத்தை நியாயம் காட்டி முஸ்தபா கமால் அதாதூர்க் எனும் 'தாகூத்'  யகூதிய , நசாரா தாகூத்களின் சீரிய வழிகாட்டலின் 
கீழ் இந்த கிலாபா வழிமுறை எனும்  இஸ்லாமிய அரசியலை  முஸ்லீம்களின் மத்தியில் இருந்து முற்றாகவே துடைத்து எறிந்தான் ! முஸ்லீம் உம்மாவும் தனது வாழ்வை 'தாகூத்' காட்டிய (ROOT ) ரூட்டில் விரும்பியோ ,விரும்பாமலோ செல்ல பணிக்கப் பட்டார்கள் .

                          
                                               இஸ்லாமிய கிலாபாவின் மீள் நிர்மாணம் ,அதற்கான போராட்டம் என்பன அது வீழ்த்தப் பட்ட மறு நிமிடமே தொடங்கப் பட்டாலும் . கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கியும் இன்னும் நிலைநாட்டப்பட முடியவில்லை  ஏன் ? பல இஸ்லாமிய இயக்கங்கள் , முடுக்கி விடப்பட்ட பரவலான இஸ்லாமிய பணிகள் என களம் திறக்கப் பட்டாலும் 'திருப்ப திருப்ப சுப்பனின் கொள்ளை ' என்பது போல் ' தாகூதிய எல்லைக்குள் ஓட்டப் பட்டு விடுகிறோம் ஏன் ? முஸ்லீம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய கேள்விதான் .     

                                




                                             

No comments:

Post a Comment