Friday, August 9, 2013

ஈராக்கில் பிறந்த குழந்தையிது - “ஒப்பரேஷன் பலூஜா” தெரியுமா சகோதரா ? ”




யுத்தம் தன் வங்கிக்கணக்கில் வரவு வைத்த இன்னொரு உயிர் இது. ஈராக்கின் பலுஜாவில் ஜுலை 25, 2013-ல் பிறந்த குழந்தை இது. இந்த குழந்தையின் சகோதரன் 2004-ல் பிறந்து 13 நாடகள் மட்டும் வாழ்ந்து மரணித்தது. இவர்களது குடும்த்திலோ அல்லது பரம்பரையிலோ இவ்வாறான குழந்தைகள் இதற்கு முன்னர் அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னர் பிறந்ததேயில்லை.


“ஒப்பரேஷன் பலூஜா” நாம் மறந்து போன நிகழ்வுகளில் ஒன்று. அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவம் ஈராக்கில் பெருமெடுப்பில் அப்பாவி ஈராக்கியர்களை கொன்றொழித்த கொலைக்களம். அமெரிக்காவின் ஆதரவுடன் காஸாவில் இஸ்ரேலும் ஈாக்கில் அமெரிக்காவும் செய்த நவீன ஆயுத பிரயோகங்களின் விளைவுகள் இவை.

இரசாயன, உயிரியல், அனு என புதிய கண்டுபிடிப்புக்களை உலக முஸ்லிம்களின் மண்டையோடுகளில் எழுதி வைக்க துடிக்கும் நவ சிலுவை யுத்த போராளிகளின் பக்கங்களில் ஒன்றே இது. செறிவு குறைந்த யூரேனிய (depleted uranium) பயன்பாட்டினால் இராக்கில் பல குழந்தைகளும் மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பாஷையில் ABCA12 gene எனும் மரபணு பாதிப்பிது. 

முஸ்லிம் உம்மாவோ லப்டொப்களை தோள்களில் சுமக்கவும், அப்பிள் போன்களை கைகளில் ஏந்தவும், பிஸ்ஸா பண்களை வாயினில் அடையவுமே இன்னும் துடிக்கிறது.

No comments:

Post a Comment