Saturday, August 31, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் !(பகுதி 03)




              ஆப்கான் சோவியத் யுத்தம் சூடு பிடித்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில் அமெரிக்கா தனது அசிங்கம் மிக்க சுயநலக் கரம் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு சார்பாக நேரடியாகவே பங்களிப்பு செய்திருந்தது போலக்  காட்ட தனது மீடியாக்களை பல்வேறு வழிகளில் பாவிக்கத் தொடங்கியது .

                        ஆப்கன் யுத்தத்துக்கு நிதி சேர்க்கும் சாட்டில் மாபியாத் தனமாக ஹெராயின் ,கொகாயின் வியாபாரத்தை வேறு ஆப்கான் போடர்களில் படர விட்டிருந்த அமெரிக்கா    , தான் எப்படியான ஆயுத உதவி செய்தேன் என்பதைக் காட்ட 'ஹோலிவூட் ' பாணியில் சொன்ன கதைதான் FIRST BLOOD (PART 3) அல்லது RAMBO  (PART 3) திரைப்படம் ஆகும் .
               'சில்வஸ்டர் ஸ்டலோன் ' என்ற பிரபல்யத்தைப் ஹீரோவாக  போட்டு 1988 களில் இந்தத் திரைப்படம் வெளிவந்த போது ஆப்கான் முஜாஹிதீன்கள் தலைநகரான காபூலை நெருங்கி இருந்தார்கள் . அப்போது ஆப்கான் ஜனாதிபதியாக இருந்த 'நஜீபுல்லா ' தன் மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்திருந்தார் . ஆப்கான் இராணுவத்தின் தளபதியாக இருந்த 'அப்துர் ரசீத் தோஸ்தம் ' மதில் மேல் உள்ள பூனை போல இருந்தார் .

                            எப்போதும் அமெரிக்கா தனது 'இமேஜை' தக்க வைக்கவும் ,தோல்விகளை மறைக்கவும் , தனது எதிரிகளை கிண்டல் அடிக்கவும் தனது அச்சங்களை வெளிப்படுத்தவும் 'ஹோலி  வூட் ' எனும் மீடியா நாசகாரியை பாவிப்பது வழமை . அந்த வகையில் வியட்நாம் தோல்வி தொடர்பில் 'TOUR OF DUTY' போன்ற திரைப் படங்களின் வரிசையில்   RAMBO  (PART 3) ஆப்கானில் தனது பிரசன்னத்தை காட்டி முஜாஹிதீன்களின் தியாகத்தை பக்குவமாக கொச்சைப் படுத்தியது .

              அமெரிக்க சார்பாக ஒரு ஆயுத விநியோக நடவடிக்கையில் சோவியத் படையிடம் கைதான ஒரு அதிகாரியை மீட்கும் 'வன் மேன் ' ஆர்மியாக   'சில்வஸ்டர் ஸ்டலோன் ' ஆப்கான் நுழைந்து இக்கட்டில் மாட்டியிருக்கும் ஆப்கான் மக்களை காக்கும் மனிதாபிமான சப் மிசனிலும் சிறப்பாக பணியாற்றி சோவியத் பட்டளியன்களை துவம்சம் செய்வது தான் கதை . 

                       இதில் நிஜத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கும் முஜாஹிதீன்களை எதோ நவீன யுத்த மரபு தெரியாத காட்டன் தரத்தில் காட்டி 10 வருட தியாகத்தை 2 மணிநேரத்தில் சிதைத்து விட்டுப் போனது .
அத்தோடு தனது இரட்சிப்பு இல்லாமல் சோவியத் ரஷ்யர்களை தோற்கடித்து இருக்கவும் முடியாது என்ற செய்தியையும் சொல்லிப் போனது . இன்னும் சில பதிவுகளோடு இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திக்கிறேன் . 

No comments:

Post a Comment