Monday, March 3, 2014

சிரியா சில உண்மைகள்....

         'பேஸ் புக்' தொடர்பாடலில் ஈடு பட்டார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் ,சிரியாவில் ஒரு பெண் ஷரீஆ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்க பட்ட நிலையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டார் ! எனும் தகவல் ஒன்று ஊடகங்கள் மூலம் பரப்பப் படுவதாக ஒரு சகோதரர் எம்மிடம் விளக்கம் கேட்டு இருந்தார் . சிரியப் போராட்டத்தையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் இந்த தகவல் தொடர்பில் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம் .

                 மருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேய் ; என்பது போல வேண்டாப் பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரியாவின் நடப்பு நிலவரம் சூழ்நிலை புரியாமல் அந்த போராட்ட அரசியலை விளங்கும் விளக்கும் மீடியா பார்வைகளுக்கு குறைவில்லை . சுற்றி வளைத்து இஸ்லாத்தின் மீது கரிபூசுவது இஸ்லாத்தின் எதிரிகளின் சராசரி பொழுது போக்கு. இபோது அச்சமும் கலந்த பார்வை காரணமாக தமக்கு தாமே முரண்பட்ட நிலையில் சிரியா விவகாரத்தில் மீடியா புரளிகள் அவிழ்த்து விடப்படுகிறது .

           ஒரு தெளிவான உண்மையை எல்லோரும் புரிய வேண்டும் . சிரியா விவகாரத்தின் அணைத்து தகவல்களும் மேற்கின் மீடியாக்களால் இருட்டடிப்பு மற்றும் ,திரிபு படுத்தப்பட்ட நிலையிலேயே வெளியிடப்படுகின்றன , சிரியப்போராளிகளைடம் இருந்து வரக்கூடிய இலத்திரனியல் தகவல்களும் கண்காணிப்பு மற்றும் சேதப்படுத்தல் போன்ற ஊடக தர்மம் மீறிய காட்டுமிராண்டி அரசியலில் சிக்கியே உள்ளது .இந்த நிலையில் இத்தகு கபடித்தனமான மீடியாக்களில் இருந்து பொறுக்கிய செய்திகளை வைத்து இஸ்லாத்தின் மீது கரிபூச நினைப்பது
மகா அயோக்கியத்தனம்.

          சிரியாவில்  நடப்பது தெளிவாகவே இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம் . இதன் வெற்றி தோல்வியில் இருந்து தான் எதிர்கால உலக அரசியல் தீர்மானிக்கப் படப்போகிறது .இந்த நிலை உணரப்பட்டதால் தான் அமெரிக்கா ,ரஷ்யா, ஈரான் ,சவூதி ,கட்டார் போன்ற முரண் சக்திகளை ஓரணி நின்று இன்று இஸ்லாமிய போராளிகளை எதிர்க்கின்றன. இந்த அரசியலை புரிந்து கொண்டவர்களாக சிரியப்போராட்டத்தை கணிப்பதே நேர்மையான பார்வையாகும்.

          இன்னும் சதி நாச வேலைகள், மற்றும் உளவுத் தகவல்களை பரிமாறுதல் தொடர்பில் பலர் அங்கு இஸ்லாமிய போராளிகளால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள். அதில் பெண்கள், மற்றும் மத போதகர்களும் உள்ளடக்கம் . இன்னும் போராளிகளின் பாதுகாப்பு நோக்கம் கருதிய அவசரகால அறிவிப்புகளை மீறிய பலரும் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். சூழ்நிலை புரியாதவர்கள் இதை எந்த கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். பிறவிக் குருடனுக்கு கொக்கை உருவப்படுத்தும் அவசியம் எமக்கில்லை.

No comments:

Post a Comment