Sunday, March 30, 2014

இலங்கையில் முடிந்தது 'திமோகிரசி டிராமா' !

 
  கண்றாவி அரசியலின் கண்துடைப்பு முடிவுகள் சர்வாதிகாரத்தை சவக்குழி அனுப்பியதா !? இந்த பித்தலாட்டத்தை நம்பி போலிகளால் முஸ்லீம் உம்மத்துக்கு வேலியிடத் துடிக்கும் புத்தி ஜீவிகள் ! சிந்திக்க வேண்டும்.

   இனி அதே நீல சொக்குப்பொடி போட்ட பச்சை யானையின் பல்லாக்கு பயணங்கள் பட்டமரத்தை ஏற்றித் தொடர ! சிகப்பு மணியின் 'வேஸ்டான' எச்சரிக்கை குசும்பாக ஒலிக்க! பச்சைத்தண்ணி தீப்பந்தம் தணலாக சுடர்விட நடந்தது 'திமோகிரசி டிராமா' ! கிளைமாக்சில் மீண்டும் அதே 'உஜாலாவுக்கு ' மாறியது மாகாண சபை !!!

     விகிதா சாரத்தால் விளைவுகள் கிட்டாது ! இனி சனாதிபதி தேர்தலில் சரித்துக் காட்டுவோம் என சவால் விடுவார்கள் நம்ம பெரிசுகள் !!! வாக்குப் போட்டு அடிமையாகும் பரிதாப வரலாற்றை தவிர மக்களுக்கு மட்டும் எந்த உத்தரவாதமும் இல்லை. இதுதான் ஜனநாயகமா !?  

       ஆபிரஹாம் லிங்கன் பேசிய 'திமோகிரசி' உலகைப்போலவே இந்த சிங்கத் தீவிலும் அது முதலாளித்துவத்தின் சுவிங்கமாய் போனது புரியாமால முஸ்லிமே நீயும் பங்காளி ஆவதா!? பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் ஏமாளி பொலிடிக்சில் முஸ்லீம் உம்மாவே நீயுமா !? 'வஹி'  வழியில் தீர்விருக்க வழிகேட்டில் நம்பிக்கையா!?

           ஓட்டை போட்டுவிட்டு வீட்டைக் காப்பாற்றும் குருட்டு அரசியலில் அதன் அத்திவாரமான குப்ரிய அகீதா புரிவதே இல்லை ! கோளாறே அங்குதான் . இடித்துக் கட்டுவது தவிர இனி உலகுக்கே தீர்வில்லை.இங்கு எல்லாம் போலி எதிலும் ஏமாற்று என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் மீண்டும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம் . தமது தோல்வியை நெற்றியில் எழுதியவர்களாக !!!

              வாழ்க ஜனநாயகம் !என்ற  தேடலில் ,வீழ்க நியாயம் அதனால் அழிக நீதி என்ற முரண் சமன்பாட்டை தவிர வேறு ஒன்றை தீர்வாக பெறவே முடியாது .

             நாளை இன்றையை பேயை விரட்ட ஒரு பிசாசு வரும் .அந்த பக்கா சுயநலத்துக்கு பின்னாலும் ஏமாந்து அணி திரள அடிமாட்டு சமூகம் ஆவலோடு காத்திருப்பது அகிலத்துக்கும் ,ஐ. நா வுக்கும் நன்றாகவே தெரியும் .செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் நக்கும் ஜாதிக்கு இந்த ஜனநாயகத்திலும் சொர்க்கம் தெரியும் . முஸ்லிமுக்கு அல்ல .

1 comment:

  1. .செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் நக்கும் ஜாதிக்கு இந்த ஜனநாயகத்திலும் சொர்க்கம் தெரியும் . முஸ்லிமுக்கு அல்ல .

    ReplyDelete