Saturday, March 8, 2014

உண்மை பேசும் அமைச்சர்கள் !

    இலங்கையின் மேல் மாகாணத்தில் மாகாண சபை தேர்தலுக்கான களம் இப்போது சூடு பிடித்துள்ளது . துப்புக் கெட்ட சித்தாந்தத்தின் கீழ் இருந்து தூய்மை கெட்ட அரசியல் புரியும் சுயநலமிகளை நம்பி ஏமாறும் மக்களும் எதிர்வரும் 29 ம் திகதியை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள் .தமது வாக்குகளை பாவித்து இருக்கும் சுமை போதாமல் இன்னும் பரிதாபத்தை எதிர்காலத்தில் தலையில் சுமக்க தயாரான நிலையில் இருக்கிறார்கள் .
   பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! என்பதை உணர்ந்தவர்களும் ,இருக்கின்ற பேயில் கொஞ்சம் நல்ல பேய் எது !? எனத் தேடும் முஸ்லீம் புத்தி ஜீவிகளும் ! தமது பங்கிற்கு இப்படி இவருக்கு ,அப்படி அவருக்கு என வாக்கை பாவிக்கும் தந்திர வித்தைகளையும் சொல்லிக் கொடுக்கிறார்கள் . இதற்கு மத்தியில் அண்மையில் இந்த குப்ரிய கூத்து அரசியலின் ஒரு பிரச்சாரக் கூட்டம் எமது பகுதியில் இடம்பெற்றது . அதில் ஒரு பேச்சாளர் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார் . அது இந்த சீர்கெட்ட சித்தாந்தத்தின் உண்மை உருவத்தை காட்டி நின்றது .அவர் குறிப்பிட்ட விடயம் இதுதான் .

     நீதி அமைச்சராக இருந்த ஒருவர் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட பகுதி ஒன்றுக்கு விஜயம் செய்துள்ளார் .அந்த ஊர் இன்னொரு முக்கிய அமைச்சர் ஒருவரின் சொந்த ஊராம் .அந்த அமைச்சர் கடல் தொழில் அபிவிருத்தி அமைச்சர் . "கடலும் கடல் சார்ந்த பகுதிக்கும் சம்பந்தம் இல்லாத இந்த ஊரில் இருந்தா நீங்கள் கடல் தொழில் அபிவிருத்தி அமைச்சராக இருக்கிறீர்கள் !? என ஒரு போடு போட்டாராம் நீதி அமைச்சர் .

    பதிலுக்கு கடல் தொழில் அபிவிருத்தி அமைச்சர் செம 'ரிட்டர்ன் பஞ்ச்' ஒன்றை இவ்வாறு கொடுத்தாராம் . " நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும் போது , கடலே இல்லாத ஊரில் இருந்து நான் கடல் தொழில் அமைச்சராக ஏன் இருக்கக் கூடாது !? என ஒரு போடு போட்டாராம் . நகைச்சுவை ஆகவேனும் இவ்வாறு குப்ரியத்தின் கொடுமுகம் வெளிவருகிறது . மக்களுக்கு புரிந்தால் சரி .

No comments:

Post a Comment