Klos C என்ற கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த வேளையில் செங்கடலில் (Red Sea), சூடான் நாட்டுக்கும் எரித்ரியாவுக்கும் இடையே வைத்து இஸ்ரேலிய
ரோந்து சுப்பர் டோரா பீரங்கி படகுகள் தடுத்து நிறுத்தி அதனை இஸ்ரேலிய
துறைமுகம் நோக்கி பலவந்தமாக திசை திருப்பியுள்ளன. இந்த கப்பலினுள் நுழைந்த
13 இஸ்ரேலிய மரைன் கொமாண்டோ வீரர்கள் மேற்கொண்ட தேடுதலில் அங்கு பல வகையான
ஏவுகணைகள் சிப்பம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “இந்த
ஏவுகணைகள், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்காக ஈரானால்
அனுப்பப்பட்டவை” என்கிறார், இஸ்ரேலிய கடற்படை செய்தித் தொடர்பாளர், லெப்.
கர்னல் பீட்டர் லெர்னர். இவை “சிரியா
தயாரிப்பு, தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ரொக்கெட்டுகள்
(Syrian-manufactured surface-to-surface rockets) . அதி தொழில்நுட்பம்
கொண்ட ஆயுதங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச
கடற்பரப்பில் அதுவும் இஸ்ரேலிய கடற்பகுதிக்கு எந்த தொடர்பும் இல்லாத
இடத்தில் வைத்து இதனை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளமை சர்வதேச கடற்பரப்பு சட்ட
விதிகளை முழுமையாக மீறும் ஒரு நடவடிக்கையாகும். இந்த இடம், இஸ்ரேலிய துறைமுகம் எய்லாட்டில் இருந்து, சுமார் 100 கடல் மைல்கள் தள்ளி, சர்வதேச கடல் பகுதியில் உள்ளது. அதாவது,
இஸ்ரேலிய கடல் பகுதிக்குள் கப்பல் வரவில்லை. இஸ்ரேலிய கடல்பகுதிக்கு
வெளியே சர்வதேச கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே, பனாமா கப்பல்
மடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டுவதாக பென்டகன் அறிவித்துள்ளதால், விவகாரம் கொஞ்சம் பெரியதுதான்.
இது
தொடர்பாக ஈரானிய வெளிவிகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில் “இது ஒரு
நாடகம். ஈரான் மீதும் ஹமாஸ் மீதும் வீண் பழி சுமத்தும் நடவடிக்கை. எமக்கு
ஹமாஸிற்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்று இருந்தால் அதற்கு பனாமாவின்
கப்பலும் செங்கடற்பாதையும் ஒரு போதும் தேவையில்லை. அவற்றை எமக்கு
மிகப்பாதுகாப்பாக லெபனான் ஊடாகவே அனுப்பி வைக்க முடியும். இந்த இஸ்ரேலிய
அறிவிப்பை நாம் முற்றாக மறுக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
உலகம்
உக்ரேய்ன் மீது கவனம் செலுத்தும் வேளையில் காஸாவை மீண்டும் சூறையாட
தயாராகும் யூத நயவஞ்சக திட்டம் இது என ஹிஸ்புல்லாவும் இது தொடர்பில்
அல்-மனாரில் அறிவித்துள்ளது.
இந்த கடற்கலத்தில் 30 M302
நடுத்தர தரையில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.
அல்-பஜ்ர் ஏவுகணையை விடவும் இவை சக்தி மிக்கவை. 150 முதல் 200 கிலோ மீட்டர்
தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தவை. கடந்த முறை ஹமாஸுடன்
இஸ்ரேல் மோதிய போது அல்-பஜ்ர் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால்
அந்நாட்டு யூத குடியேற்றவாசிகள் கதிகலங்கிப் போயினர். கைப்பற்றப்பட்ட M302
ஏவுகணைகள் டெல்-அவிவை குறிவைத்து இயங்கும் திறன் வாய்ந்தவை என்பது முக்கிய
விடயமாகும். இந்த ஒப்பரேஷனை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Moshe Ya'alon மற்றும் இஸ்ரேலிய பிரதம படைத்தளபதி Moshe Gantz, ஆகியோன் நேரடியாக கையாண்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



No comments:
Post a Comment