
.............." எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் " (சூரா அல் பகரா வசனம் 249)
ரமழான் வந்தவுடன் விசேடமாக அல்பத்ர் சமர்க்களம் அனேகமாக எல்லா முஸ்லீம்களாலும் நினைவு கூறப்படும் .இந்த சமரைப் பற்றி பேசப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் "அதில் ஒரு களப் போராளியாய் நானும் இருந்திருக்கக் கூடாதா என்ன கைசேதமே" என அதில் கலந்து கொள்ளாத ஒவ்வொரு முஸ்லிமும் கவலைப்படும் அளவுக்கு அந்தப் போரின் இஸ்லாமிய தரப்பு பங்காளிகளுக்கு அல்லாஹ் (சுப ) ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் ; அது சுவனம் நிச்சயிக்கப் பட்ட நன்மாராயமே ஆகும் .

