Tuesday, September 18, 2012

ஓ என் சமூகமே !



ரசூல் (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள் ". நீங்கள் விசுவாசம் கொண்டவைகளாக 

மாட்டீர்கள் ! உங்கள் தந்தையரை விடவும் , உங்கள் குழந்தைகளைவிடவும் ,மற்றெல்லா 
     மனிதர்களை விடவும் என்னை நேசிக்காதவரை"  (புகாரி ,முஸ்லிம் )      

                                     நாம் இன்று எம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமானப்படுத்திய யஹூதி , நசாராக்களின் சதித்தனமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராக எமது நியாயமான எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்  இன்னும் ஒரு நியாயமான உண்மையை உங்களிடம் சொல்லிவிடுவது காலத்தின் தேவையாகும் . 


                 எமது இந்த எதிர்ப்புக்கள் , ஆவேசங்கள் , கோபங்கள் , ஆர்ப்பட்டங்கள், இந்த அல்லாஹ்வின் எதிரிகளை எந்தளவு தூரம் பாதிப்படைய செய்யும் ? அவர்களது இந்த 
கீழ்த்தரமான நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திவிடுமா ? நேற்று" காட்டூன் " போட்டார்கள் !! இன்று படமே காட்டிவிட்டார்கள் !!! நாளை ?!!!!.... ஆவேசப்படுவதும் 
"ஆறிய கஞ்சியாக " சிலகாலத்தில் அடங்கிப்போவதும் மட்டும் தானா முஸ்லீம்களாகிய 
எமது பணி?!!!!! இது சற்று சிந்திக்க வேண்டிய தருணம் .?
                                                                                          உண்மையில் எம்மை சீண்டிவிட்டு எமது 
ஆவேசமான உணர்வலைகளில் குரூர திருப்திகாணுவதுதான் எதிரியின் ஒரே நோக்கம் .
அதற்கு அப்பால் முஸ்லீம்களாகிய எம்மாலும் எதுவும் செய்யமுடியாது என்ற அதிகார 
ஆணவம் . அவர்களது அறிவியல், தொழில் நுட்ப , இராணுவ வல்லமைக்கு முன்னாள் 
எமது இந்த போராட்டங்கள் அவர்களின் பார்வையில் சுவையான கேலிக்கூத்து .
                                                                           உண்மையில் இங்கு நிகழ்ந்திருப்பது தீமையின் 
ஆணிவேராய் ஒரு பலமான அதிகாரம் அரசியல், இராஜதந்திர ரீதியில் அவர்களை பாதுகாக்கின்றது . அதுவே  குப்ரிய முதலாளித்துவ ஏகாதிபத்தியம் . எம்மிடம் இதற்கு 
பதில் சொல்லும் அளவில் எந்தவொரு காத்திரமான வழிமுறையும்  இல்லை !!

          இப்போது இந்த விடயம் இவர்கள் பார்வையில்  கருத்துச்சுதந்திரம் எனும் சிறு விடயம் !! ஆனால் பல கோடிக்கணக்கான மனித உணர்வுகளை மதிக்காத தனி மனித சுதந்திரம் இங்கு மீறப்பட்டுள்ளது !!உண்மையில் நாம் சந்தித்திருப்பது மிக ,மிக மோசமான  எதிரிகள் . அபு ஜாஹல் ,உத்பா ,ஷைபா, அபூலஹாப் ,  ஹெர்குலீஸ் ,கிர்சா .... 
.போன்றோர் கூட இந்தளவு கீழ்த்தரமாக அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) விமர்சிக்கவில்லை .

                                                                          தாங்களே நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக மார் தட்டிக் கொள்ளும் இந்த குப்ரிய  யூத ,நசாரா கூட்டங்கள் இன்றும்  முஸ்லீம்களாகிய 
எம்மையே இது விடயத்திலும் விமர்சிப்பது ஆச்சரியமானது . கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர்கள் ! ஊடக சுதந்திரத்தை மறுப்பவர்கள் ! அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் !என தந்திரமாக குற்றவாளிக்கூண்டில் எம்மையே நிறுத்தி கேள்வி 
வேறு கேட்கின்றனர் ! இந்த கட்டாக்காலிகளுக்கு ஜனநாயகம் எனும் சோடை போன
(அரசியல்) பாதுகாப்பு வேறு கொடுக்கின்றதாம் .(சல்மான் ருஸ்டி , தஸ்லிமா நஸ்ரின் 
போன்ற சாக்கடைகளுக்கும் பூமாலை போட்டு புகழிடம் கொடுத்த மகான்களும் இவர்கள் 
தான் )
                                   இஸ்லாத்தையும் , முஸ்லீம்களையும் கொச்சைப்படுத்தும் போதும் , கொன்றொழிக்கும் போதும் நாம் மௌனம் காக்க வேண்டும் ! அது இவர்கள் பாசையில் 
நாகரீகம் . கொதித்து எழுந்தால் அது அநாகரீகம் ! இந்த சிந்தனாவாதத்தின் வழிகாட்டலில் 
இருந்துதான் நவ இஸ்லாமிய எழுச்சிஎனும் இன்னொரு வரலாற்றுத்தவரும் எடுத்துச்செல்லப்படுகின்றது. மீள முடியாத நாசத்தை நோக்கி நேசக்கரம் நீட்டும் இந்தப்பார்வை தொடர்பிலும் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும் .
                                                                                    இந்த தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க மிக சரியான வழிமுறை என்ன இதோ ஒரு வரலாற்றுச்சம்பவம் சில நூற்றாண்டுகளுக்குள் நடந்தது . 1889இல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு நாடக ஆசிரியன்'முஹம்மத்எனும் கேவலமான நாடகத்தை அரங்கேற்றியபோது உஸ்மானியா கிலாபத்தின் கலீபாவான அப்துல் ஹமீது ஒரு பெரிய இஸ்லாமிய இராணுவத்தை அனுப்புவேன் என்று  எச்சரிக்கின்றார் .அதற்குப் பயந்த  பிரான்ஸ் அரசு உடனடியாக அந்த நாடகத்தை தடை செய்தது .


                                                   எனவே நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் .எமது அவசியத்
தேவை என்ன ? காலத்தின் தேவை என்ன ? நிச்சயமாக அது ஒரு குழு நிலையோ ,இயக்க 
நிலையோ அல்லாத தேச ,தேசிய எல்லைகளை உணர்வு ரீதியிலும் ,நடைமுறையிலும் 
உடைத்தெறிந்து அல்லாஹ் (சுப) அருளிய ,அல்லாஹ்வின் தூதர் (ஸல் )வழிகாட்டிய ,
சஹாபாக்கள் தொடர்ந்து வந்த இஸ்லாத்தின் அரசியலான கிலாபா அரசின் கீழ் ஓன்று 
படுவதே . அது அல்லாது விடின் அதை உருவாக்க பாடுபடுவதே .
                                                                       சகல பேதங்களையும் நாம் மறப்போம் வஹி வழி வந்த (அந்த இஸ்லாமிய அரசு எனும் ) அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போம் .அல்லாஹ்விற்கு (சுப )மட்டுமே அஞ்சுவோம் ,அடிபணிவோம் என தூய விடுதலை 
கீதமிசைப்போம் .

                            “ அவனே தன்னுடைய தூதரை நேர்வழியை கொண்டும் சத்திய மார்கத்துடனும் அனுப்பி வைத்தான் அனைத்து மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக .இதற்கு சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன் (அல் குர் ஆன் 48: 28)
                       “ இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள் . அவர் மூலமாகவே பாதுகாப்பும் தேடிக்கொள்வார்கள் .
                                                                                              அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி )
                                                                                                          ஆதாரம் :- முஸ்லிம் 
                                                                          

No comments:

Post a Comment