Sunday, September 16, 2012

அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமதித்து வெளியிடப்பட்டுள்ள அந்த திரைப்படம் தொடர்பில் "அமெரிக்க அரசு குற்றவாளியல்ல "எனக்கூறும் எகிப்திய அரசு ஒரு பார்வை ..


  எப்போதும் எதிரியின் பலத்தையும் எமது பலவீனத்தையும் வைத்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எம்மவரின் நிலைப்பாடு . இதன் பெயர் போராட்டமல்ல அரசியல் சாணாக்கியமுமல்ல ,மாறாக இதன் பெயர்தான் அரசியல் சரணடைவு .எப்போதும் கைதிகளாகி விட்டபின் சிறைக்கூட அதிகாரிகளின் பேச்சை தட்டவோ தவிக்கவோ முடியாது . இங்கு உண்மையில் நடந்திருப்பது அதுதான் .  எகிப்திய அரசு ஒரு சூழ்நிலைக்கைதி !




                                                                                         இங்கு முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இன்றைய உலகின் ஆதிக்கமும் அதன் எதிர்பார்ப்பும் பற்றியதே . முதலாளித்துவ ஏகாதி பத்தியத்தின்விஸ்தரிக்கப்பட்ட அரசியல் ,இராணுவ ,பொருளாதார இராஜ தந்திர எல்லைகளில் நவீன பொம்மை அரசுகளாக நியமிக்கப்பட்டவர்களின் தரம் மற்றும் தமது நியமனம் பற்றி அடிக்கடி பரிசோதிக்கவேண்டிய கடப்பாடு ஏகாதிபத்திய தலைமைப்பீடமான அமெரிக்காவிற்கும் ,அதன் அதி சக்திவாய்ந்த உளவுப்பிரிவிட்கும் உண்டு. இல்லாவிட்டால் வைட் ஹவுஸ் , பெண்டகன் என்பவற்றின் கட்டளைகள் மத்திய கிழக்கில் ஒலிக்காது .


                                                        இங்கு நான் குறிப்பிட வரும் முக்கியமான விடயம் அமெரிக்க
உளவுப்பிரிவிட்கோ அதன் மூலமாக அமெரிக்க அரசுக்கோ தெரியாமல் ஒரு வெளியீடு
வெளிவர முடியுமா ? என்பதும் இந்த எடுகோளில் சிந்திக்கும் போது இந்த திரைப்படம்
தொடர்பில் அமெரிக்க அரசு குற்றவாளிதான் என்பதில் சிறுபிள்ளைக்கும் சந்தேகம் வராது என்பதே . "சென்சார் போர்ட்", எப் .பி .ஐ  என்பவற்றின் வடிகட்டளில் தப்பிவருவது
என்பது மிகக்கஷ்டமானது. 

                                                    மேலும் அமெரிக்க அரசு உண்மையில் இங்கு செய்ய நினைப்பது
இதனூடாக வேறுபல எதிர்கால  அரசியல்,இராணுவ  நிர்ணயங்களுக்கான பாதை திறப்பு என்பதை எம்மால் ஊகிக்க முடியும் . ஏனென்றால் முஸ்லீம் உலகின் பிரதான நுழை வாயில்களாக பாவித்த சதாம் ,கடாபி பாலம் வெற்றிகரமாக காலாவதியானபின்பு இலகுவான பட்டுப்பாதையின் "சப் வே ஓபனாக" கூட இதை கருத முடியும் . எனவே எகிப்திய ஒலிபெருக்கியில்" வைட் ஹவுஸ் டோனில் "பெண்டகன் பேசுவது இன்னொரு ஆபத்தான ஆக்கிரமிப்பாக கூட அமையலாம் . 


                                                                                                                 மேலும் இப்போது கட்டணம் செலுத்தாத விளம்பரத்தையும் அந்த திரைப்படம் சாதித்து விட்டது . சிலநேரம் இந்த வருட வசூல் சாதனையும்ஒருசில வாரங்களில் தாண்டப்படும் . அத்தோடு அந்த வெளியீட்டின் உப எதிர்பார்ப்பான நிதி விடயமும் சரியானதன் பின் வேண்டுமானால் (எகிப்து , துருக்கி , சவுதி .. ......... போன்ற)அரபுலகின் அநேக "ஜோகர்களின் " வேண்டுகோளுக்கினங்க ஒரு கருணை மனு அடிப்படையில் தடை செய்யப்படலாம் .
                                                                                                 

1 comment:

  1. என்ன நீங்கள் பெஷுஹிரீர்ஹல் ,அப்படி சொன்னால் தான் அவெர்ஹளுக்கு IMF இடம் இருண்டு loan கிடைக்கும்

    ReplyDelete