Sunday, September 23, 2012

கிலாபா ஒரு சாம்ராட்சியக்கனவா ?!!!


       
                 அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமதித்த அந்த அநாகரீகமான திரைப்படத்தின் விளைவாக முஸ்லீம்களின் ஒருமித்த நிலைப்பாட்டின் உணர்ச்சிகரமான போராட்டப்பாதை இந்த உலக ஒழுங்கு எனும்  போலித்தனத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளது . அது முஸ்லீம் உம்மாவின் ஒருமித்த சகோதரத்துவத்தின் வழியில் மீண்டும் ஒரு கிலாபா சாம்ராஜ்யத்தின் நிச்சயப்பாட்டை எதிர்வு கூறுகின்றது.இந்நிலையில்         இன்றைய உலகம் எனும் அப்பட்டமான "ஹோலி வூட்" தனத்தில் சிக்கியிருக்கும் இந்த முஸ்லீம் உம்மாவின் கருவில் உதித்த ஒரு சகோதர இரத்தத்தின் கேள்வியும் அதற்கான பதிலும் காலத்தின் தேவை 
கருதி இங்கு வெளியிடுகின்றேன் .  மிகை இராணுவ,பொருளாதார   தொழில்நுட்ப பூச்சாண்டியும் , GPS  தொழில்நுட்ப கண்காணிப்பு தரமும் இவர்களின் மேட்கத்தேயம் தொடர்பான அதீத கவர்ச்சிக்கு காரணமாகும்.

எனவே இவர்கள் அந்த மேட்கத்தேயத்தின் அரசியல் தரத்தில் இருந்து முஸ்லீம் உம்மாவை சிந்திக்க அழைக்கின்றார்கள் ! ஆனால் இது ஒரு ஆபத்தான  அழைப்பு மட்டுமல்ல குப்ரிய ஏகாதிபத்தியம் முலீம்களிடம் எதிபார்ப்பதும் இதைத்தான் !!! இந்த நரகத்தின் அழைப்பு மதச்சார்பற்ற குப்ரிய கல்வியின் பட்டதாரிகளாக பவணி வந்துகொண்டிருக்கும் அநேகரை அதிகமாக தாக்கியுள்ளது .




எனது பதில் :-

      இங்கு எனது பதில் சற்று வித்தியாசமானது . எனது பதிலில் உள்ள நியாயம் புரியப்படா விட்டால் நான் வெறும் வரலாற்று வாதியாகவோ அல்லது கட்பனாவாதத்தின் உச்சத்தில் நின்று பேசும் ஒருவனாகவும் தான் இனம் காட்டப்படுவேன் . எனக்குப்புரிந்த வரை யதார் த்தவாதம் ,யதார்த்தப்போலி இரண்டின் வித்தியாசமும் எம்மால் உணரப்படும் போது சில உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் .அது ரசூல் (ஸல் )அவர்களின் சீராவை நாம் ஆராயும்போதுஅந்தஉண்மைபுரியும். .
அதாவது ஜாஹிலீயா என்பது நிறுவன மாக்கப்பட்ட கவர்ச்சி கரமான ஒழுங்கு என்றவகையில் இன்று எம்மை கட்டுப்படுத்த நினைக்கும் அதிகாரமாகும் . இங்கு வடிவு ,விளைவு எனும் வகையில் அதே ரசூல் (ஸல் ) அவர்கள் கண்டவைகள்தாம். எந்த வஹி அவர்களுக்கு உதவியதோ அதே வஹி எம்மிடமும் இருக்கின்றது . குப்ர் என்பதன் அர்த்தம் அல்லாஹ் (சுப) வின் ஏவல் விலக்கல் களில் மனோஇச்சைக்கு கட்டுப்படல் என்பதுதான் .இது எல்லா காலத்துக்கும் பொருந்தும். 


அசாதாரணமான சூழ்நிலையும் மிக கடுமையான நிர்ப்பந்தமும் ரசூல் (ஸல் ) அவர்களின் மனோபாவத்தைஅன்றைய சூழ்நிலையில் வாழ்ந்த முஸ்லீம்களின் மனோபாவத்தை சற்று தளர்வடைய செய்யும் போது ;இஸ்லாத்தின் எதிரிகள் நகைப்புக்கிடமாக்கும் முன்னறிவிப்புகளை வஹி செய்தது . 

        அந்த முன்னறிவிப்புகள் வஹியின் வழி காட்டலோடு மட்டும் மிக தீவிரமாக முயற்சிசெய்து அந்த தலை கீழ் புரட்சியை செய்தார்கள் . எமக்கும் இவ்வாறான முன்னறிவிப்புகள் உண்டு ! வஹிவழியிலான. எமது முயற்சிதான் எம்மிடம் மிகச்சரியாக இல்லை . இது சாத்தியமா ?!! எனும் சந்தேகம் கூட எமது பலவீனம்தான்.
நான் ஒரு உண்மையை சொல்லவா அது முஸ்லீம்கள் வாழும் பட்டி தொட்டி எங்கும் இஸ்லாத்தின் தேடல் அதிகரித்துள்ளது . இது ஒரு நல்ல செய்தியாக உங்களுக்கு படவில்லையா காலம் கணிந்து வருகின்றது என்பதற்கு என்னை பொறுத்தவரை இதுசிறந்தஆதாரம் இஸ்லாத்தின் பொது எதிரியான யூத ,கிறிஸ்தவர்களின் அச்சம் கலந்த அரவணைப்பு எம்மை விட கிலாபா தொடர்பில் அவர்களின் எதிர்பார்ப்புடனான அச்சத்தைபிரதிபளிக்கிறது.
நான் இனி குறிப்பிட வரும் விடயங்களை சற்று அவதானமாக கவனியுங்கள் . நேற்றுவரை நாம் வேட்டையாடப்பட்டோம் .பயங்கரவாதம் தீவிரவாதம் ,அடிப்படைவாதம் எனும் சொற்களின் சொந்தக்காரர்களாக இனம் காட்டப்பட்டோம் .இன்று ஓர் திடீர் மாற்றம் .அது உலகின் புதுக்கதை வில்லனை சம்பந்தியாக்கி விருந்து கொடுக்கும் "ஹோலி வூட்டின் " புதிய திரைக்கதை 
. . 

hyper reality 
என்ற சினிமாத் துறையோடு சம்மந்தப்பட்ட விடயம் பற்றி நீங்கள் அறிவீர்களா?அதன் அர்த்தம் அதீதப் படுத்தப் பட்ட பல்வகை யதார்த்தங்களின் தொகுப்பு நிலை என்பதாகும் .அதேபோல similation என்பது நிகழ்வு ,அசல் ,ஆதாரம் என்பவற்றோடு தொடபற்ற நகல் என்பதாக அதைக் குறிப்பிடலாம் . simulacra என்பது படத்தொகுப்பின்போது உருவாக்கப்பட்ட நகலின் மீது சார்ந்திருக்கின்ற நகல் போலி என்பதாகும் .இது போலியின் தன்மையை கூட கொண்டிருப்பதில்லை . 


மொத்தத்தில் இந்த யதார்த்தம் காலம் ,இடம் ,வரலாறு போன்றவை வழங்கும் ஆதாரமான யதார்த்தங்களை முற்றிலும் மறுத்த நிலையாகும் . உங்களுக்கு ஓர் உதாரணம் சொன்னால் "சினா "= திருமணம் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா இங்கு "சினா " எனும் சொல்லாடல் மறைக்கப்பட்டு இரண்டுக்கும் இடையில் உள்ள விளைவுப்பொருள் யதார்த்தமாக இனம் காட்டப்பட ( "சினா "= திருமணம் ) எனும் யதார்த்தப்போலியில் நாம் புதைந்து போய்விடுவோம் . இந்த "ஹோலி வூட் " தனம் குப்பார்களின் சினிமாக்களில் மட்டுமல்ல ;அவர்களின் அரசியல் உறவுகளிலும் பேணப்படும் . இப்போது வெளிப்படையான தன்மையும் விளைவுப்பொருளும் 
  இஸ்லாத்தின் ஒப்பீட்டிற்கு தகுதியானது தானா என்பது பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள். 

 U.N.O, I.M.F , NATO , போன்றவை அவர்களின் அரசியல் "ஹோலி வூட்டின் " கதாநாயகன் வில்லனை எதிர்க்க பயணிக்கும் குதிரைகள் . மத்திய கிழக்கில் அந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய கதாநாயகனை சுமந்த குதிரைகளின் குழம்படிச்சத்தம் தாராளமாகவே கேட்கிறது . இஸ்லாமிய ஜனநாயகம் எனும் அவனின் நவீன ஆயுதம் இன்னும் புரியப்படா விட்டால் அதன் விளைவான பிரித்தாளும் முற்றுகையில் மீண்டும் சிக்கிவிடுவோம் . 

No comments:

Post a Comment