Saturday, September 15, 2012

அல்லாஹ்வின் (வஹி எனும் )கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் !!



 மேலும் ,நீங்கள் யாவரும் அல்லாஹ்வின்  (வஹி எனும் )கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்;(உங்களுக்குள் கருத்து வேறுபட்டு ) நீங்கள் பிரிந்து 

விடவேண்டாம் ;மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப்
பாருங்கள் ;நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் ,அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையில் அன்பை உண்டாக்கினான் ;ஆகவே ,அவனுடைய பேரருளால் 
நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர் )நீங்கள் நரக நெருப்புக்குழியின்
விளிம்பின் மீதிருந்தீர்கள் ;அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான் ;நீங்கள் 
நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.                                                                                                 (TMQ 3:103)

இன்னும் ,உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் ,அவர்கள் (மனிதர்களை ) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும் ,நல்லதைக்கொண்டு எவுகின்றவர்களாகவும்,தீமைகளில்
இருந்து விலக்குகின்றவர்கலாகவும் இருக்கட்டும் ; அவர்கள்தாம் வெற்றிபெற்றோர் 
                                                                                                                                             (TMQ 3:104)

மேலும் தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு , (கருத்து ) வேறுபட்டு போனார்களோ அவர்களைபோல் நீங்களும் 
ஆகிவிட வேண்டாம் அத்தகையோருக்குத்தான் மகத்தான வேதனையுமுண்டு
                                                                                                                                              (TMQ 3:105)




நான் மேலே தந்த அல் குர்ஆன் வசனங்கள் உங்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்தும் .அது இன்றைய முஸ்லீம் சமூகம், இஸ்லாமிய இயக்கங்கள்,குப்ரிய சமூகத்தின் மத்தியில் வாழ்வு  என்பது தொடர்பில் எமது 
அனுகு முறைகள் பற்றிய மீள் பரிசீலனை மிக அவசியமாக செய்யப்பட வேண்டும் என்பதாகும் ;உண்மையில் முஸ்லீம் சமூகமாகிய நாம் ஒரு முஸ் அப் இப்னுஉமைர் (ரலி ) போலவோ , அபூதர் கிபாரி (ரலி ) போலவோ , சல்மானுள் பாரிசி (ரலி ) போலவோ , சுஹைபுல் ரூமி (ரலி ) போலவோ இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் அல்ல .

                                                   
                              மாற்றமாக சில ,பல அடையாளங்களுடன் கூடிய பரம்பரை பிரப்புரிமையில் முஸ்லீமாக இனம் காட்டப்படுகின்றோம் . அதன் விளைவு மத அடையாளங்களுடன் ஒரு இனம் என்பதுதான் எம்மை எமக்கு மத்தியிலும் அடுத்தவர்கள் மத்தியிலும் உருவப்படுத்தியிருக்கின்றது. இந்த உருவத்தின் சமூக அங்கீகாரம் எனும் போராட்டத்தை வெளிரங்கமாகவும் , எமது இஸ்லாமிய  ஓட்டை உடைசல்களை திருத்தும் ,ஒட்டுப்போடும், போராட்டத்தை உள்ரங்கமாகவும் எடுத்து செல்வதுதான் எமது வரலாறாகும் .

                                                             இந்த வரலாற்றுத்தவரோடுதான் இஸ்லாமிய இயக்கங்களின் பணிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.எடுத்தாளப்படுகின்றன . ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தேவைப்பாடு என்பது ஏன்
எதற்கு ?எனும் வினா  எம்மீது தொடுக்கப்பட்டால் ஒவ்வொரு இயக்கமும் தமக்கான ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பதிலை பேசுகின்றது . சமூகத்தின் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பான தேர்வு தெரிவும் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையோடுதான் இருக்கின்றது . என்னைக்கேட்டால் நோய்தொற்றுள்ள
ஒருதொகை நோயாளர்களை (முஸ்லீம்களும் , முஸ்லீமள்ளதவர்களும் ) வைத்துக்கொண்டு வைத்தியர்கள் (இஸ்லாமிய இயக்கங்கள்)
தான் செய்வதுதான் சரியான வைத்தியம் என தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது எனும் மிகத்தவறான பணியை முதலில் நாம் கைவிட்டு ஏற்பட்டுள்ள நோயையும் அதற்கான வைத்தியத்தையும் மிகச்சரியாக 
இனம் கானுவோமனால் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தமுடியும் .

                                                                                    அகீதா தெளிவற்ற பிகிஹ் பேசப்படுவது இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வியாதி ஒருவன் தவ்ஹீத் பற்றி பேசுவான் ஆனால் அவன் சிர்க் தொடர்பில்  முன்வைப்பது வெளிப்படையான (சிலைகளையும் ,கபுருகளையும் போன்ற ) சில விடயங்களை தான்.  அவைகள் இறைவனுக்கு நிகராகும் ,அல்லது இறைவனின் இடைத்தொடர்பாகும் , மனிதனின் விவகாரங்களுக்கு தீர்வு 
தரும் , எனும் பார்வையோடு வணங்கப்படுவதுதான் இஸ்லாத்தில் இந்த தடைக்கான காரணம் என்பது அவனால் புரியப்பட்டாலும் ,புரியப்படாவிட்டாலும் இந்த காரணங்களோடு கூடிய உருவமற்ற அன்றாட வாழ்வோடு தொடர்புடைய  விவகாரங்களில் பொடுபோக்கும் ,அலட்சியமும்
இருக்கும் .உருவ வழிபாடு எனும் மட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தின் விளைவு சிந்தனாரீதியான சிர்க்கின் உண்மைகளை விட்டும் இப்போது அவன் தூரமானவன் அல்லது தெரியாத வியம் !


உண்மையில் இங்கு நடந்திருப்பது மார்க்கம் வேறு உலகியல் வாழ்வு வேறு எனும் மதச்சார்பற்ற மனோ நிலை உருவாகி வெறும் மத அந்தஸ்தோடு இஸ்லாம் சிந்திக்கவைக்கப்பட்டுள்ளது .
இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது .இதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை மாறாக அகீதாவில் தெளிவையும், அந்த அகீதாவில் இருந்து நாம் அடைய வேண்டிய இலக்கையும் அந்த அகீதாவில் இருந்தே அந்த இலக்கிற்கான பாதையையும் வரையருத்துப்போராடாத தவறு இன்று புலப்படுகின்றது . கிலாபா பற்றி பேசி பாரிய இழப்புகளோடும் தியாகங்களோடும் போராடிய இயக்கங்கள் இன்று திசை மாறியதற்கான காரணமும் இந்த தவறுதான் . 


                       ( இலக்கில் அனேகமாக சரியாக சிந்திக்கப்பட்டிருந்தாலும் பாதை அல்லது வழிமுறை எனும் ரீதியில் இஸ்லாத்தின் சித்தாந்த வடிவம் மிகச்சரியாக வரையறை செய்யப்படவில்லை . ஒரு பிரபல்யமான இஸ்லாமிய அரசியல் பேசிய இயக்கமே வெளிப்படையாக எம்மிடம் இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என ஒப்புக்கொண்டதோடு . இந்த விடயத்தில் தாம் இந்த உம்மத்தின் பொறுப்பாளர்கள் அல்ல என' கழுவும் மீனில் நழுவும் மீனாக ' பேசிய இந்த நூற்றாண்டின் சிறந்த' ஜோக்கையும்;' சுமந்த சமூகம் நாங்கள் !)
முஸ்லீம் உம்மா ஒரே சமூகம் எனும் வகையில் பொதுப்பார்வையையும், தற்போதைய எமது வாழ்விடங்களில் நடக்கும் அசாதாரண சூழ்நிலைகளையும் எமது அகீதா வரையறுக்கும் வழிமுறை தரத்திலிருந்து எவ்வாறு எதிர் கொள்வது ? எனும் போது பின்வரும் காரணிகளை பிரச்சினைகளாக  நாம் முன்வைக்க முடியும் .
1.நாம் வாழ்தல்(இஸ்லாமிய வாழ்வு ) 
2. எமது அடையாளங்கள் ( இஸ்லாமிய நாகரீகம் )
3. நமது அரசியல் ( இறைவனின் சட்டமியற்றும் அதிகாரத்தை மீறாத மறைகர வழிமுறை )
4.பாதுகாப்பு ( உண்மையான எமது உலகியல் பாதுகாப்பை நோக்கிய சிந்தனை )
                            எனும் நான்கு விடயங்கள் மிக ஆழமாக முஸ்லீம் உம்மாவிடம்  பேசப்பட வேண்டும் . 

No comments:

Post a Comment