Wednesday, September 26, 2012

'வஹியை' ம (மி)தித்து ஜனநாயக பெண்ணுரிமை பேசும் வீர மங்கை 'லம்யா கடோல்'(இஸ்லாமிய அறிஞர் !?




"முக்காடிடுவது காலாவதியான வழக்காகும் .ஜெர்மனியில் வாழும் முஸ்லீம் பெண் 
என்ற வகையில் நான் என்னையே கேட்டுக்கொள்வது என்னவென்றால் ,குர் ஆனில் (அத்தியாயம் 33 வசனம் 59)இல் சொல்லப்பட்டிருப்பது போன்று நான் மேலதிக துண்டு ஒன்றினால் முக்காடிட்டு தலையை மூடிக்கொள்ள வேண்டுமா? முக்காடிடுவது ஆண்களின் இச்சைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு என்ற அதன் மூல நோக்கம் இன்றும் நிறைவேற்றப்படுகின்றதா ? என்பதே . அதற்கு எனது பதில் இல்லை என்பதாகும் . இன்றைய ஜெர்மனியில் அத்தகைய தலையை மறைத்தல் ,அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை” என்று கூறுகின்றார் ஜெர்மனியில் குடியேறியுள்ள சிரியன் வம்சாவளி இஸ்லாமிய பெண் அறிஞரான ? 'லம்யா கடோல் ' மேலும் கூறும்போது "அது கடவுள் எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையே கொண்டு வந்துள்ளது . "  
                            
                                                                     மேலும் தொடர்கிறார் " இன்று கடந்த கால 
சமூக விதிகளை பின்பற்றாமல் , பெண்களுக்கெதிரான தொந்தரவுகளில் இருந்து 
பாதுகாத்துக்கொள்ள நன்கு செயல்படும் சட்ட முறைமை இருக்கின்றது . சட்டவாட்சியை அடிப்படையாக கொண்ட சுதந்திர நாடு ,பெண்களுக்கெதிரான தாக்குதல்களில் இருந்து அவர்களை பாதுகாக்கின்றது . ஒரு சிறிய துண்டுத்துணியின் மூலம் என்னை நான் மறைத்துக்கொள்ள முடியாது ! ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு உரிமைகளை வழங்கி கடமைகளையும் சுமத்துகின்றது . அத்தகைய சூழ்நிலையை முக்காடுடனோ முக்காடின்றியோ நான் நேர்மையாக நடந்து கொள்ள முடியும் " எனக்கூறுகின்றார்.
.
                                                                      இங்கு வஹியின் கட்டளை ஓன்று மிக 
தத்ரூபமாக புறக்கணிக்கப் படுகின்றது !ஆனால் முஸ்லீம் உம்மத்தின் ஒரு தொகை 
மனிதர்கள் நவீனம் காலத்தின் தேவை என்ற நிலைப்பாட்டை வைத்து இவரை சரி
காண்கின்றனர் ! இந்தப்போக்கில் சென்றால் நிறைய விடயங்களை இந்த வரையறைக்குள் கொண்டு வர முடியும் (உதாரணம் தலாக் ,இத்தா,அவுரத் ........)
                                                                                  ஜனநாயகம் இந்த முஸ்லீம் உம்மாவை 
எங்கே இட்டுச்செல்கின்றது ? கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாததால் கெட்டு
'குப்றிய' குட்டிச்சுவரின் கீழ் சொகுசாக வாழ ஒரு வரைவிலக்கணம் வேறு ஒரு கேடா ? தஸ்லீமா நஸ்ரின் போல் இங்கு தவறில் இருந்து தவறு சரிகாணப்படவில்லை ; மாறாக (அத்தியாயம் 33 வசனம் 59 ) காலம், சூழ்நிலை ,(அது சரியா பிழையா என்பது ஆராயப்பட வேண்டிய இன்னொரு தலைப்பு ) ஜாஹிலிய சட்டத்தின் பாதுகாப்பு என்பன காரணம் காட்டப்பட்டு குறித்த அல்குர் ஆன் வசனம்( 'மன்ஸுஹ் ') மாற்றப்படுகின்றது !!! ஏனென்றால் இவர் இஸ்லாமிய அறிஞர் !?

                                                                                உண்மையில் இவர் மேற்குலகின் ஒரு 
சிறந்த தெரிவு அதன் உச்சக்கட்டமாக கிறுக்குடைரெக்டர்  'சாம் பசில்'தனது அடுத்த 
கதாநாயகி தேர்வுக்காக அலைய வேண்டிய அவசியமே இல்லை . அவரது அடுத்த 
திரைப்படமாக ' இது தான்டா இஸ்லாம் ' எனும் 'டைட்டில் 'கூட பொருத்தமாக இருக்கும் . என்ன ஒரு கவலை என்றால் துருக்கி ,எகிப்து ,துனீசியா போன்ற பகுதிகளிலும் கட்டாயம் இது படமாக்கப்பட வேண்டியது .(அங்கும் சிறந்த நடிகர்கள் 'ஒஸ்கார் ' விருதிற்காக தமது தத்ரூபமான தியாகத்தை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிரார்கள் ) ஆனால் 'சாம் பசில் ' தான் அங்கு செல்ல முடியாது ! காரணம் இந்த முஸ்லீம் உம்மாவின் உணர்வு பூர்வமான பார்வை விட்டு வைக்காது . ஆனால் இந்த 'லம்யா கடோல்' போன்றோர் மீதான பார்வை !!!???

No comments:

Post a Comment