Wednesday, July 31, 2013

'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 2


               அதிகார ஆணவம் ,மண்ணாகிப்போன நேற்றைய தாகூத்கள் வரைந்த மக்கிப்போன யாப்புகள் , சட்டங்கள் ! கச்சைக் கலாச்சாரத்தை கண்ணியமாக கருதும் ஒரு வாழ்வுச் சூழல், இதை கட்டிக் காத்து ஆண்டார்கள் எகிப்தில் (மட்டுமல்ல உலகெங்கும் ) நவீன தகூத்கள்.  அங்கு  காட்சிப் பிணமாக இருக்கும் பிர் அவ்ன் சிலவேளை உயிரோடிருந்தால் !? அவனின் வாரிசுகளை எகிப்திய அதிகார மேடையில் பார்த்து மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட்டிருப்பான் !



                                                                       ஜமால் அப்துல் நாசரின் பின் அந்த 'தாகூத்திய' நாசகாரம் அன்வர் சதாத் எனும் வடிவில் தொடர்கதை ஆகியது . இந்த பிணம் திண்ணும் சாத்திரத்தை முடிக்கும் நோக்கோடு பிழையான பாதையில்  சரியான இலக்கை நாடி ஒரு குழு களம் இறங்கியது .இவர்கள்  இந்த தாகூத்திய ஆட்சியாளர்களை கொலை செய்வதன் ஊடாக எகிப்தில் ஒரு இஸ்லாமிய எதிர்காலத்தை கனவு கண்டார்கள் . ஆனால் ஆழப்பதிந்து விட்ட ஒரு சுயநல ஆதிக்க  சித்தாந்தம் சிறுபிள்ளைத் தனமாக எதிர்கொள்ளப் பட்டது தான் இங்கு நடந்தது .



                                     திட்டமிட்டது போலவே நிகழ்ந்தது அந்த கொலை ! ஆனால் சாகடிக்கப் பட்ட அந்த' தாக்கூத்' இஸ்லாத்தை கொச்சைப் படுத்த ஒரு நியாயம் ஆனான் .எப்படி !? அந்தக் கொலை வழக்கு ஒரு நாடகமாகவே எகிப்திய இராணுவ நீதி மன்றத்தால் அரங்கேற்றப் பட்டது . உண்மையில் இங்கு அந்த கொலைக்கு தண்டனை என்பதை விட இஸ்லாம் தொடர்பில் அதன் நடைமுறை சாத்தியம் இன்று இல்லை என்பது  பற்றியே அந்த விசாரணையின் குறி இருந்தது . 




                  "நாங்கள் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சியை நிருபவே இதை செய்தோம்" என்ற சம்பந்தப் பட்டவர்களின் (state mend) வாக்குமூலம் ஒன்றை வைத்தே நவீன 'தாகூத்கள் 'உலகத்திற்கு காட்ட இஸ்லாமிய எதிர்ப்பு காட்சிகளை தயார் படுத்தினார்கள் . 1982 களில் இருந்த சகல ஒலி , ஒளி மீடியாக்களும் புடை சூழ அந்த விசாரணை நிகழ்ந்தது . கேட்கப்பட்ட கேள்வி இதுதான் "இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் எவ்வாறு அமுல் நடத்தப் போகிறீர்கள் " அதாவது அதன் நடைமுறை வடிவம் எது? என்பதே அந்த வினாவாகும் .



                       1970 களில் செய்யத் குத்புக்கோ , அப்துல் காதர் அவ்தாவுக்கோ இத்தகு சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லை . ஆம் ,இல்லை என்ற ஒற்றை பதில் தவிர வேறு வார்த்தை பேச அனுமதி மறுக்கப் பட்டிருந்தது . ஆனால் 1982 இல் அன்வர் சதாத் கொலைவழக்கு முற்றிலும் மாற்றமானது ! இங்கு அந்த உணர்ச்சிப் போராளிகளிடம் சித்தாந்தம் பேசுவதற்கான பூரண அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது . இந்த 'சிம்பிள் டெக்னிக் ' (simple Technic) மூலம் 'தாகூத்திய ' அரசியலுக்கு கொள்ளை இலாபம் ஆகியது . இஸ்லாம் என்றால் வெறும்  வன்முறை , முஸ்லீம் என்றால் வெறும் வன்முறையாளன் !? என்ற அநியாயத்தை நியாய தரிசனம் கொடுத்தது 'தாகூத்திய 'மீடியாக்கள் .





                                           இன்று வரை இந்தக் கேள்வி தொடர்பில் ஒற்றை வரி பதில்கள் முஸ்லீம்களிடம் நிறையவே இருக்கின்றது . தீர்வு குர் ஆன் , ஹதீஸ் !!? அதைத்தான் அந்த உணர்ச்சிப் போராளிகளும் சொன்னார்கள் . 'கிளஸ் நிகோ' ரக ரைபிளைப் (rifle ) பற்றியோ , அதன் சுடு தூரம் , கொலை தூரம் பற்றியோ கேட்டிருந்தால் ,விளக்கம் பக்கம் பக்கமாக கொடுத்து விடுவார்கள் அந்தப் போராளிகள் ஆனால் இஸ்லாத்தின் ஆட்சிக் கோட்பாடு பற்றி இந்த தாகூத்கள் கேள்வி கேட்டதால் துப்பாக்கி சேம்பரில் இறுகிய தோட்டாவைப் போல் வார்த்தைகள் தொண்டைக் குழியில் இறுகிக் கொண்டன .



     
                            யாரிடம் எந்தக் கேள்வியை கேட்பதன் ஊடாக இஸ்லாத்தை ,அல்லாஹ்வின் மார்க்கத்தை கொச்சைப் படுத்தலாம் எனும் சூத்திரத்தை பக்குவமாக இந்த நவீன  தாகூத்கள் புரிந்தவர்கள் . இன்னும் சில பதிவுகளோடு  இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திக்கிறேன் .

                                   

No comments:

Post a Comment