
சாத்தானிய பஞ்சு மெத்தையில் புரண்டெழுந்து 'தாக்கூதிய' திருப்தியோடுதான் முஸ்லீம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என நினைப்பவர்கள் இஸ்லாத்தின் யதார்த்தம் புரியாதவர்கள் . இந்த 'ஹுப்புத் துன்யா ' இஷம் ஒரு 'பேஷனாகி ' முஸ்லீம் உம்மத்தை ஆட்டுவிக்கின்றது .
நேர்வழி என்பது அல்லாஹ் (சுப ) அவனது தூதர் (ஸல் ) காட்டித் தந்தவை மட்டுமே ஆகும் . அந்தப் பாதையில் ஒரு நூல் சறுக்கினாலும் அடையும் இலக்கு தப்பாகிவிடும் . அதேபோல காலத்தின் தேவையை அந்த இறை வஹி காட்டித் தரவில்லை என்று கருதினாலும் அதுவும் இஸ்லாத்தின் பூரணத் தன்மை மீது நம்பிக்கை இல்லை என்றே ஆகிவிடும் .