Thursday, September 5, 2013

சிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல் டாங்கி படையை உருவாக்கியதுடன் அதற்கான பயிற்ச்சி பாடசாலையையும் ஆரம்பித்தது !!



     சிரியாவின் டமஸ்கஸ் மகாணத்தில் உள்ள Ghautah East-ன் மீதே சிரிய படைகள் (?) இரசாயன வாயுத்தாக்குதலை மேற்கொண்டனர். இப்போது டமஸ்கஸ் மாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் போராளிகளின் வசம் வீழ்ந்து விட்டன. இப்போது ‘றோட் டு டமஸ்கஸ்‘ எனும் பாதையில் தலை நகர் நோக்கிய தாக்குதல்களை மேற்கொள்ள போராளிகள் தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. டமஸ்கஸ் மாகாண சமர்களில் பிரதானமாக இரண்டு அணிகள் பங்கெடுத்துள்ளன. Liwa 'al-Islam மற்றும் Harakat Ahrar al-Sham al-Islam என்பனதே பிராந்திய இராணுவ ஆதிக்கம் உள்ளவையாக மாறியுள்ளன. இவ்வணிகள் இரண்டும் "submission only to God alone" எனும் பெயரிலேயே தங்கள் ஒப்பரேசன்களை செயற்படுத்தி வருகின்றனர். Qolamoun நகர் மீதான வெற்றிகரமான தாக்குதலை இவ்வணிகள் இரண்டும் இணைந்தே நடாத்தியிருந்தன. 



      Sheikh Zahran bin Abdullah al-Alusy யினது தலைமையில்  Liwa 'al-Islam அணிகள் அண்மையில் சிரிய இராணுவத்தின் 81-வது பிரிகேட் டாங்கிய அணியின் தலைமையகத்தை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் மூலம் சிரியாவில் போராடும் முஜாஜிதா அணிகளுல் இவர்களிடமே டாங்கிகள் அதிகம் உள்ளன. இதன் மறு கட்டமாக இவர்கள் தங்களது அணிகளில்  டேங் அன்ட் ஆமரி கொப் எனும் படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். 

   இந்த படைப்பிரிவிற்கான பயிற்ச்சி பாடசாலையையும் அவர்கள் ஆரம்பித்து 154 போராளிகளிற்கு டாங்கிகள், கவசவாகனங்கள் தொடர்பான முழு பயிற்ச்சியையும் அழித்து அவர்களை முதல் அணியாக பட்டமளித்து வெளியேற்றியுள்ளனர். எல்லாமே ஒரு கனவு போல நடந்து வருகிறது சிரியாவில். 

   ரஸ்ய தயாரிப்பான T 72 ரக டாங்கிகளை ஓட்டி செல்வது. அவற்றின் மூலம் தாக்குதல்களை நடாத்துவது, Shilka BMP ரக தாக்குதல் கவச வாகனங்களை ஓட்டுவது,தாக்குதல்களை மேற்கொள்வது, டாங்கிகளை எதிர்கொண்டு டாங்கிகள் மூலம் தாக்குவது, எதிரி டாங்கிகளை டாங்கிகள் இல்லாமல் தாக்குவது போன்ற சிறப்பு பயிற்ச்சிகளை இதில் வழங்கி வருகின்றனர். 

  Liwa 'al-Islam Tank Combat School-ல் டாங்கிகள் கவசவாகனங்களை திருத்துவது பற்றியும் கற்று கொடுக்கின்றனர். ஏனைய சிரியாவில் போராடும் ஜபாஃ அல் நுஸ்ரா போன்ற அமைப்பின் உறுப்பினர்களையும் வந்து இதில் பயிலுமாறு வேண்டியுமுள்ளனர். 

No comments:

Post a Comment