Monday, September 2, 2013

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?


       ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .


1. தமது இஸ்லாமிய  சித்தாந்தத்தை சுமந்தவர்களாக வாழ்ந்திடும்
 உரிமை.

2.தமது  இஸ்லாமிய  சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் அடையாளங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் .

3. தமது இஸ்லாமிய சித்தாந்த கட்டளைகளையும் , வழிமுறைகளையும் பின்பற்றும் ,பிரயோகிக்கும் உரிமை ,மற்றும் பிரச்சாரப் படுத்தும் உரிமை.  
4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை  ,(இஸ்லாத்தை ஏற்காதோர்  விரும்பியோ விரும்பாத நிலையிலோ)   ஏற்படுத்தல் .

                               பெரு நிலங்கள் முதல் , சிதறிவாழும் நிலங்கள் வரை முஸ்லீம் உம்மா எதிர் நோக்கும் பிரச்சினைகள் மேலே தந்த நான்கு காரணிகளுடனும் சம்பந்தப் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .மேலும் இந்த நான்கு காரணிகளும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத ஆத்மார்த்தப் பிணைப்பைக் கொண்டிருபதையும் நிதானமாக அவதானித்தால் உணர முடியும் .

                                  இஸ்லாத்தின் எதிரிகளின் துல்லியமான திட்டமிடல் இந்தக் காரணிகளில் நான்காவதை அதாவது அரசியல் இராஜதந்திரக் கேடயத்தை உடைத்தல் என்பதில் இருந்துதான் தமது வெற்றிகரமான மேலாதிக்கத்தை முஸ்லீம் உம்ம்மத்தின் மீது பதித்தனர் .

                       இதன் விளைவு காஸா முதல் காஷ்மீர் வரை ,எகிப்து முதல் எரிட்ரியா வரை , சிரியா முதல் சிறீலங்கா வரை , அமெரிக்கா முதல் அசர்பைஜான் வரை வடிவங்களில் வேறுபட்ட அழுத்தங்கள் , கொடுமைகள் ,நிர்ப்பந்தங்கள் ,அழிப்புகள் மூலம்  முஸ்லீம் உம்மத் மீது தொடர்கின்றது .

                            குப்ரிய மேலாதிக்க எதிரியின் பிரதான நிபந்தனையே இஸ்லாத்தில் இல்லாத ,இஸ்லாம் தடுத்த தீர்வுகளில் ,வாழ்வியலில் இருந்து முஸ்லீம் சிந்திக்க வேண்டும் என்பதே ஆகும் . இதற்கு அரசியல் ,இராணுவ ,பொருளாதார வலிமையை பயன் படுத்துவது என்பதே எதிரியின் முடிவு .

                     இந்தப் போராட்டத்தை பொறுத்த வரை எதிரி முஸ்லீம்களை  பொது நோக்கிலேயே பார்க்கிறான் ! இங்கு அவனுக்கு அரபி ,அஜமி என்பதோ , 'மத்ஹபு களோ' இயக்க வாதங்களோ ஒரு பொருட்டல்ல .அது அமெரிக்காவாக ,இஸ்ரேல்  ,  ரஷ்யா  , பிரான்ஸ்  , சீனா ,ஈரான்  ,அல்லது (தம்மை 'ஹரத்தின்' காவலர்களாக காட்டிக்கொண்டு  தமது பரம்பரை சுல்தான் ,ஷேக் பட்டத்தை தக்கவைக்க 200பில்லியன் டொலர்களை ஜெனரல் சீசி க்கு கொடுத்து எகிப்தில் முஸ்லீம்களை கொல்லும் ஹராத்தை செய்யும் )அரபு மன்னர்களாக இருக்கட்டும் , ஒரே முடிவில் தான் இருக்கிறார்கள் .

                 தாகூத்களின்  அதிகாரம்  முஸ்லீம் உம்மத்தின் உருவத்தை இஸ்லாத்தில் இருந்து பார்க்கும் போதுதான் விடயங்கள் கைமீறிப் போகின்றன . இப்போது முஸ்லீம்கள் தம்மைப்பற்றி சிந்திக்க வேண்டும் .அந்த சிந்தனை சரியாக இருந்தால் . மேலே சொன்ன நான்காவது விடயத்தில் இருந்து அதாவது ....

       4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை  ,(இஸ்லாத்தை ஏற்காதோர்  விரும்பியோ விரும்பாத நிலையிலோ)   ஏற்படுத்தல் . என்பதில் இருந்து தமது போராட்டத்தை தொடங்குவார்கள் . அதுதான் பாதுகாப்பானதும் ஸுன்னா காட்டிய வழிமுறையுமாகும் .

               

                             

No comments:

Post a Comment