Thursday, September 12, 2013

ஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்! சிந்திக்க வேண்டிய பகுதிகள்.


          72 மணி நேரம் 50 இலக்குகள் ! மட்டுப்படுத்தப் பட்ட இந்த இராணுவ விளையாட்டுதான் சிரிய விவகாரத்தில் NATO கூட்டு ஆடப் போகிறதாம் ! கேட்பவன் மடையனாக  இருந்தால் சொல்பவன் எதை வேண்டுமானாலும் சொல்லிப் போவானாம் . (ஏறத்தாள ஒரு இலட்சத்து பத்தாயிரம் சிவிலியன்கள் கொல்லப்படும் வரை வாய் வேட்டுகளை தீர்த்து விட்டு இப்போது மட்டும் அதி அக்கரை ஏன்?)


                                                                         கிடைத்த தகவலின் படி பசர் அல் அசாத் 
தன் வசமுள்ள இரசாயன ஆயுதங்களை NATO விடம் ஒப்படைக்க தயார் என்று கூறியுள்ளார். இந்த புதிய திருப்பம் எமது முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டது போல பசர் அல் அசாதின் இயலாமையை வெளிப்படுத்தி சர்வதேசத்தை தலையிட  வேண்டும்  தாக்குதலே அந்த இரசாயனத் தாக்குதல் எனும் கணிப்பை உறுதிப் படுத்துகின்றது .

           சரி விடயம் இப்படியிருக்க சிரிய விவகாரத்தில் NATO வின் LATE MOVE விற்கான காரணத்தை கணிப்பது பிரதானமானது .ஈராக் மற்றும் ஆப்கான் விவகாரத்தில் காட்டிய அதி வேகம் இந்த சிரிய விவகாரத்தில் இருக்கவில்லை . பசர் அல் அசாத் தரப்பு பௌதீக மற்றும் உளவியல் ரீதியாக பலத்த பின்னடைவில் தான் உள்ளது என்பதையும் சிரியப் போராளிகள் மரபுச் சமரணியாக 50 இற்கு 50 எனற அளவையும் தாண்டி நின்ற நிலையிலேயே NATO வின் தலையீடு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது .

             மேலும் தரைப்படை அனுப்பப் போவதில்லை என்பதையும் எட்ட நின்று இலக்குகளை தாக்கவே நேடோ தரப்பு முடிவு செய்திருப்பது நிலமையை இன்னும் சற்று சந்தேகிக்க தூண்டுகின்றது . விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் தெளிவான இலக்கு பசர் அல் அசாத் அல்ல மாறாக கட்டுக்கடங்காமல் முன்னேறிச் செல்லும் இஸ்லாமிய போராளிகளே ! 

* தனது முதலாளித்துவ சித்தாந்த மேலாதிக்கத்தை பிராந்தியத்தில்  தக்க வைத்தல்.


* இஸ்ரேலை தனக்காகவும் இஸ்ரேலுக்காக தானும் என்ற ஆத்மார்த்த உறவின் அடிப்படையில் இஸ்ரேலின் அரசியல் ,பொருளாதார , இராணுவ ரீதியான பாதுகாப்பை உறுதிப் படுத்தல் .

* தனது நிழலில் அடைக்கலம் தேடியுள்ள அரபு மேட்டுக் குடிகளின் குறுநில அதிகார அபிலாஷைகளை பாதுகாத்தல் .

* இயந்திரவியல் கீ பாய்ண்ட் ஆன பெட்ரோலிய ஆதிக்கத்தை தனது (தனிக்காட்டு ராஜா) ஆதிக்கத்தில் வைத்திருத்தல் .       

    இந்த விடயங்களுக்கு எல்லாம் தடையாக வரப்போவது பசர் அல் அசாத் அல்ல என்பது முதலாளித்துவம் அறிந்த உண்மை . நிச்சயமாக மத்திய கிழக்கில் இஸ்லாம்  அதிகாரத்தில் வரும் பட்சத்தில் மேட்குறிப்பிட்ட நான்கு காரணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக 'செக்' வைக்கப் படும் நிலமை கட்டாயமாக வரும் .

       எனவே எப்படியாவது மூக்கை நுழைத்து ஏதாவது ஒரு மாற்று வழியை செய்ய வேண்டும் .பசர் அல் அசாத் விவகாரம் இங்கு ஒரு காரணப் போலியே ஆகும் . அதுவும் அவர் ஏறத்தாள  'நேடோ' வின் சொல்லுக்கு கட்டுப்படும் நல்ல எதிரியாக சரணடையும் நிலையில் யார்  அடுத்த   எதிரி !? இதுதான் முக்கியமான கேள்வியாகும் . அத்தோடு சிரியாவின் அரசியல் அதிகாரம் தொடர்பாக நேடோ என்ன முடிவெடுக்கும் !?சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகள் பிரதானமானவை . அதை விட்டுவிட்டு இது மனித நேயம் மிக்க நடவடிக்கையாக யாரும் கருதினால் அவர்களுக்கு உலக அரசியல் தெரியாது என்றே அர்த்தம் .

    

No comments:

Post a Comment