Friday, September 6, 2013

சிரியாவில் நடப்பது 'அமெரிக்க ஜிஹாதா'!?

ARAB ISRAEL WAR 

         இஸ்லாத்தின் தனித்துவமான 'கிலாபா' அரசின் திசை நோக்கிய தூய அரசியல் உடன்பாட்டில் முஸ்லீம் உம்மத்தின் பார்வையை ஒன்று குவிக்க விடாமல் ,மீண்டும் சற்று வித்தியாசமாக  'அட்டைக் கத்தி ' அரபு  தேசிய அரசியலின் மீள் கட்டுமானம் செய்வதே குப்ரிய ஏகாதிபத்தியங்களின் ஒரே தெரிவாகும் . அந்த அரசியலுக்காகவே இன்றைய நடவடிக்கைகள் ஏகாதிபத்தியங்களால் முடுக்கி விடப்பட்டுள்ளன .
ARAB ISRAEL WAR 

     அது அமெரிக்க சார் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களாக இருந்தாலும் சரி , ரஷ்ய ,சீன சார் (கம்யூனிசப் போலி) முதலாளித்துவமாக இருந்தாலும் சரி , இஸ்லாமியக் குடியரசுப் போலிப் படம் காட்டும் ஈரானாக இருந்தாலும் சரி , ' இஸ்லாமிக் கெபிடலிச பொலிடிகல்  ஹோலி வூட் ஆக ரீல் விட்டுக் கொண்டிருக்கும் துருக்கியாக இருந்தாலும் சரி , முடியாட்சியை தக்கவைக்க முஸ்லீம்கள் படுகொலைக்கு 'பல பில்லியன் டொலர்களை ' அள்ளி வீசும் அரபு 'சேக்குகளாக ' இருந்தாலும் சரி ஒத்த முடிவிலேயே இருக்கின்றனர் .
ARAB ISRAEL WAR 

                 இந்த விரோதக் கூட்டின் பலமான நெருக்கடியிலும்  இஸ்லாத்தை மட்டுமே இலட்சிய வாதமாக கொண்ட தூய அணி சற்றும் தளர்வில்ல்லாமல் தனது நகர்வுகளை தெளிவாகவே தொடர்கிறது . சிரியாவின் அரச படைக்கெதிரான போர்,இஸ்ரேலுக்கெதிரான ஒரு  பலம் வாய்ந்த இராணுவத்தை ஒடுக்கும் முயற்சியாக பேசப்படுவதும்! ,சிரியாவின் இராணுவத்தை எதிர்க்கும் முஜாஹிதீன்களின் போராட்டத்தை ஒரு 'அமெரிக்கன் ஜிஹாத்'! ஆக பேச வைப்பதும் சிந்திக்க வேண்டிய விடயமாக  இருக்கின்றது .
ARAB ISRAEL WAR 

                  உண்மையில் மத்திய கிழக்கில் நடந்தது என்ன ? இஸ்ரேலை ஒரு தேசிய அரசாக அங்கீகரித்து ,ஒரு திருடனுக்கு , ஒரு பயங்கரமான கொலைகாரனுக்கு , பயங்கரமான கொள்ளைக்காரனுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கும் தேசிய எதிர்க்கடையாக இந்த சிரிய ,எகிப்திய , ஜோர்தானிய ,லெபனானிய இராணுவங்கள் இதுவரை தெளிவாகவே தொழில் புரிந்துள்ளனர் என்பதுதான் உண்மையாகும் . இந்தப் பணிக்கு இணை அனுசரணையாக அரபு சேக்குகள் ஆட்டம் போட்டதும் தான் மறுக்க முடியாத உண்மையாகும் . 
ARAB ISRAEL WAR 

               அப்பாவித்தனமாக கல்லெடுத்து இஸ்ரேலிய காட்டுமிராண்டியின் 'டாங்கிகளுக்கு' எதிராக  வீசும் ஒரு பலஸ்தீன சகோதரனுக்கு உதவியாக  இன்று வரை முஸ்லீம் தேசியங்களின்   பலம் வாய்ந்த இராணுவங்கள் என்ன செய்தன !? வெறும் தேசிய எல்லைகளை பெயருக்காக காக்கும் 'டம்மி' படைகளாக வலம் வந்ததை தவிர  !? இஸ்லாமிய சகோதரத்துவத்தை விட தலைக்கேறிய தேசிய வாதம் , அரபி அஜமி வேறுபாடு என்பன வேட்டுச் சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் நிரந்தர பங்காளியான இஸ்ரேலியனோடு ஒப்பந்தம் போட்டு கிடைத்ததை வாங்கி வாழவே பணிக்கிறார்கள்! தவிர உருப்படியாக அவர்களின் இராணுவத்தை வைத்து என்ன செய்தார்கள்!?
ARAB ISRAEL WAR 

                    சரி ஒரு ஒப்புக்காக பேசினாலும் தமது தேசிய எல்லைகளை இஸ்ரேல் விரிவு படுத்திய அரபு யுத்தத்தின் பின்னர் இன்றுவரை அவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே இருக்க, இந்த பலம் வாய்ந்த இராணுவங்கள் வெத்து வேட்டுக்களை எதிரியின் வெற்றிக்காக தீர்த்தது தவிர என்ன செய்தது !? இஸ்ரேல் அணுசக்தியை வளர்த்து அணுவாயுத நாடாக பரிணமித்த போதும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது தவிர இந்த பலம் வாய்ந்த இராணுவங்கள் என்ன செய்தது !? சுதந்திர தினத்துக்கும் ,தேசிய தினத்துக்கும் அணிவகுக்கும் இராணுவத்தையும் ,எதரி படம் காட்ட கொடுத்த ஆயுத தளபாடங்களையும் அணிவகுத்துக் காட்டுவதா பலம் வாய்ந்த இராணுவத்தின் பண்பு !?


KHILAFA SOON INSHA ALLAH !

                       இந்த குப்ரிய தேசியப் பிரிகோடுகளை தகர்த்து தூய சகோதரத்துவத்தின் வழியில் இஸ்லாமிய தீர்வை நோக்கி சிரியாவில் நகர்வது 'வெஸ்டனின்' வேண்டுகோள் என்பது முஸ்லீம்களின் பார்வை அல்ல! அது தெளிவாக ரஷ்யாவின் ,சீனாவின் , ஈரானின் அரசியல் ஆய்வாகும் . இதில் அமெரிக்காவின் ,பிரான்சின் , இஸ்ரேலின் பார்வை ஆடு நனையும் போது அழும் ஓநாய்களின் தரத்தை ஒத்தது . இந்த ஏகாதிபத்திய ஆடு புலி ஆட்டத்தில் ஆடாக கருதிய முஸ்லீம் உம்மா சிங்கமாக தனது சுய வடிவத்தை புலப்படுத்த விடாமல் தடுக்கும்  பிரச்சார யுத்தமே சிரியாவில் 'அமெரிக்கன் ஜிஹாத்' என்ற வாதமாகும் . 

No comments:

Post a Comment