Tuesday, September 24, 2013

சிந்திக்க ஒரு சில உண்மைகள்.


         கடந்த கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிகழ் காலத்தின் சில சம்பவங்கள் பற்றிய சரியான கோணத்தை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் .

            விடுதலைப் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு தொடர்பில் இப்போது பேசி என்ன பயன் ? என்பது சிலர் என்முன் வைக்கும் கேள்வியாகும் .நான் இங்கு பேச வருவது ஒரு அடிப்படையான பொதுக் குணகம் பற்றியதே  . அதன் ஆதார  வடிவமாக விடுதலைப் புலிகள் வருகிறார்கள் .ஆனால் விடயம் அவர்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டதல்ல .


                  முஸ்லீம் எதிர்ப்பு என்பது முழு உலகின் பொது விதி ஆக வடிக்கப்பட்டு விட்டது . அவன் தன் சுய வடிவம் சுயநிலை மறந்து உலகின் போக்கில் தன்னை இணைத்துக் கொள்ள நினைத்தாலும் ஒரு பிரிகோட்டு அடையாளம் அவனை எப்படியாவது வேறுபடுத்துகிறது ! அது ஏன் ? என்ற கேள்வியை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கேட்கவேண்டும் .

                  தனக்கான வாழ்வியலை தான் விரும்பியவாறு தானே தீர்மானிக்கும் உரிமையை முஸ்லீம் முற்றாகவே இழந்தவன் . அவனின் நடத்தைகளை 100% இறை வஹியே அமைத்துத் தரவேண்டும். என்ற பிரதான நிபந்தனையின் பேரிலேயே அவன் முஸ்லிம் ஆகிறான் . இந்த உண்மை முஸ்லீம்களால் உணரப்படாத வரை மனித அடிமை ஆதிக்க அரசியலை விட்டும் அவனுக்கு விடுதலை இல்லை . தாகூத்களின் கெடுபுடிகளும் ஓயப்போவதில்லை .

                 இனவாதம் ,மதவாதம் ,நிறவாதம் ,வர்க்க வாதம் ...இப்படி தான்தோன்றித் தனமான வழியிலேயே  அதிகாரங்கள் சுயநலமிக்க இழிவான அரசியலை உலகில் செய்துகொண்டிருக்கிறார்கள் .அந்த வகையில் மனித நடத்தைக்கான இயங்கு விதி என்பது மனித ரூபத்தில் ஒரு கொடூரமான பேசும் விலங்குகளின் கையில் ஒப்படைக்க்கப் பட்டுள்ளது . அவை தீர்வு தரும் என்ற தவறான பார்வை முஸ்லிமையும் விட்டுவைக்கவில்லை .

                        குப்ர் தனது சுய நலத்திற்காகவே சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் வரையறுத்துள்ளது .சுதந்திரம் என்ற போலி நாடகத்தின் பெயரில் ஏகாதிபத்தியங்ளின்  நவ காலணிகளை, தேசியம் என்ற கௌரவ  சிறைச்சாலை  வடிவில் திறந்து விட்டபோது, அதன் பொது இயல்பான பிரித்தாளும் கொள்கையின் கீழான இன, மத , குல ,கோத்திர ரீதியான மோதல்களும் அதில் உள்ளடக்கப் பட்டு விட்டது .

                     ஏகாதிபத்தியங்களின் இந்த பிரித்தாளும் விதிக்குள் இருந்து மனித சமூகம் தனது தீர்வுகளை தேடுவது நிச்சயமாக ஒரு தெளிவான  தற்கொலை  அரசியலே ஆகும் .அனேகமாக இங்கு அவர்களின் உச்ச பயன்பாட்டு அடிப்படையில் இயங்க விடப்படல் என்ற பிடி கயிறு சிலபோது சிலரை தனிப்பெரும் 'சண்டியர்களாக' காட்டி நிற்கும் .

                           அழித்தல் ,ஒடுக்குதல் , வரம்பு மீறுதல் , என்ற கோரமான ஒரு தற்காளிக பாத்திரத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் சில காலம் விட்டு  வைக்கப் படலாம் .விடுதலைப் புலிகளுக்கும் நடந்தது இதுதான் .இன்னும் சிலருக்கு நடக்கப் போவதும் இதுதான் .

                 பிராந்திய ஆதிக்கத்திற்கான வளம் மிக்க ஒரு தேசிய சிறைச்சாலை இலங்கை . பாத்திரங்களையும் ,சூழ்நிலைகளையும் காலத்துக்கு காலம் மாற்றுவதன் ஊடாக முதலாளித்துவ மேலாதிக்கங்கள் ஒரு போட்டிச் சந்தையாக இலங்கையை பயன் படுத்திப் போகிறார்கள் . இதை குறிப்பாக முஸ்லீம்கள் உணர வேண்டும் .

                      

No comments:

Post a Comment