Monday, September 30, 2013

'தாக்கூத்' பேயே ! அரசியல் பிச்சை போடு !!!


  சாத்தானிய பஞ்சு மெத்தையில் புரண்டெழுந்து 'தாக்கூதிய' திருப்தியோடுதான் முஸ்லீம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என நினைப்பவர்கள் இஸ்லாத்தின் யதார்த்தம் புரியாதவர்கள் . இந்த 'ஹுப்புத் துன்யா ' இஷம்  ஒரு 'பேஷனாகி ' முஸ்லீம் உம்மத்தை ஆட்டுவிக்கின்றது .

          நேர்வழி என்பது அல்லாஹ் (சுப ) அவனது தூதர் (ஸல் ) காட்டித் தந்தவை மட்டுமே ஆகும் . அந்தப் பாதையில் ஒரு நூல் சறுக்கினாலும் அடையும் இலக்கு தப்பாகிவிடும் . அதேபோல காலத்தின் தேவையை அந்த இறை வஹி காட்டித் தரவில்லை என்று கருதினாலும் அதுவும் இஸ்லாத்தின் பூரணத் தன்மை மீது நம்பிக்கை இல்லை என்றே ஆகிவிடும் .


          முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் (சுப ) இறுதித் தூதர், புர்கான் அவர் மூலமாக அருளிய முழு மனித சமூகத்துக்குமான இறுதி வழிகாட்டல் என்பதில் ஒரு சிறு அளவேனும் சந்தேகம் இல்லாதவனே முஸ்லீம் ஆவான் .

          அந்த அடிப்படையில் காலம் 'வஹியின் ' முக்கியத்துவத்தை காலாவதி ஆக்கி விட்டது ; எனக் கூறுவதும் ஒன்றுதான் . 'வஹி 'வழிமுறை அல்லாத ஒன்றை எம் வாழ்வியலாக எடுத்து நடப்பதும் ஒன்றுதான் . எமது பிரச்சினைகளுக்கு 'வஹியின் 'தீர்வற்ற ஒரு இடைக்காலம் உண்டென நம்புவதும் ஒன்றுதான் .

        அதாவது சிந்தனையால் ,சொல்லால் ,செயலால் வஹியை மறுத்தல் என்ற பயங்கர பாவத்தின் கீழேயே விடயங்கள் வந்து விடும் . அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் . 

         # ஆன்மீகத்துக்கு இஸ்லாமும் அரசியலுக்கு ஜனநாயக கூட்டுச் சர்வாதிகாரம் ,அல்லது தனிநபர் இராணுவ சர்வாதிகாரம் , அல்லது முடியாட்சி , குடியரசு இப்படி இஸ்லாம் அல்லாத ஏதாவது ஒன்றை முஸ்லீம் ஏற்றுக்கொள்ள முடியுமா ?

                    # அல்லாஹ்வுக்கு மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் உண்டென அகீதாவழி பூரணமாக நம்பிக்கை கொண்ட முஸ்லீம் ,மனிதன் மனிதனுக்கு சட்டமியற்றலாம் என்ற அடிப்படைக்கு எவ்வாறு கட்டுப்பட முடியும் ? அதன் வழி நின்று முஸ்லீம் உம்மத்தை எவ்வாறு வழிநடாத்த முடியும் ?

                      #" இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது " என்ற வஹியின் வார்த்தைகள் குப்பார்களுக்கான தேடல் சுதந்திரத்தை வரைவிலக்கணப் படுத்துகின்றது .தவிர முஸ்லீம்களை குறித்து நிற்கவில்லை என்பது எனது ஆணித்தரமான வாதம் . இதற்கு வஹியின் அடிப்படையில் ஏதாவது மாற்று கருத்துகள் இருக்கின்றதா ?

                  # முஸ்லீம் பெரும்பான்மையை நிரூபித்தே முஸ்லீம் உம்மத் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என 'ஜனநாயகம் ' சொல்லும் வரைவிலக்கணமே முஸ்லிமை பொறுத்தவரை மிகத் தவறானதும் இஸ்லாத்தை அவமதிப்பதுமாகும் என்பது எனது வாதம் . சுற்றி வளைக்காமல் சுன்னாவின் அடிப்படையில் இதற்கு மாற்றுக் கருத்து உண்டா ?

                      மொத்தமாக நான் கூற வருவது (இஸ்லாம அல்லாத ) ஜனநாயகமோ (வேறு எதுவோ )ஒரு கடவுள் கொள்கையாகவே இருக்கின்றது .இப்போது அதற்கு கட்டுப்படும் ஒவ்வொருவனும் சிர்க்கையே செய்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

                  அதாவது இங்கு வழிகேடு தான் வணங்கப் படுவதற்கு சிலைகள் போல , கபுருகள் போல வெளித் தெரியாது ! மாறாக சிந்தனைகளாக மறைந்து நிற்கும் .கவலையான விடயம் என்னவென்றால் நேற்று இதுபற்றி வார்த்தைகளை பீரங்கிகளாக முழங்கியவர்கள் ,குப்ரிய அரசியலில் தாகூத்தின் திருப்தி வேண்டி கூடிக் கூத்தடிக்க தொடங்கி விட்டார்கள். 

                    கேட்டால் உம்மத்துக்காக இருக்கும் ஒரே வழி ,காலத்தின் தேவை என புதிதாக வஹி வந்துள்ளது போல் கூறியும் விடுகிறார்கள் ! அதாவது நேற்று ஆழமாக 'ஹாக்கீமியத் ' பேசிய தாயிகள் எல்லாம் இன்று தாக்கூத் பேயே அரசியல் பிச்சை போடு ' என்ற கேவல வாழ்வியலை சரிகாண்பது வெட்கக் கேடானது .

                     கட்டார் 'ஹொட்டில் ' A /C  கூளிள் இருக்கும் உலமாவும் இதைத் தான் சொல்கிறார் . JAFFNA  வெயிலில் தேசியப் பட்டியலில் இருக்கும் அஷ் ஷெய்' கும் இதைத்தான் சொல்கிறார் .முஸ்லீம் சமூகம் தெளிவாகவே ஏமாற்றப் படுகின்றது .

No comments:

Post a Comment