Wednesday, December 25, 2013

ஓநாய்களின் பாசறை (பகுதி 4)


       'ஸ்கைஸ் அன் பிகாட் ' எனும் ஒப்பந்தப்பிரகாரம் 1917 டிசம்பர் 9ம் திகதி 'அலேன்பே' தலைமையிலான பிரித்தானிய படை பாலஸ்தீனை ஒருபக்கம் ஆக்கிரமிக்க ,மறுபக்கம் ' கவ்கிராட் ' தலைமையிலான பிரான்சிய படை சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது .ஜெரூசலத்தை கைப்பற்றிய 'அலேன்பே ' அறியாத்தனமாக "இப்போதுதான் சிலுவைப்போர் ஒரு முடிவுக்குள் வந்துள்ளது ."  என்று  சொன்னார். சியோனிச ஓநாய்களுக்காக சிப்பாய் வேலை பார்த்து புரியாமல் ,ஏதோ பண்டைய பிரித்தானிய ரிச்சர்ட் மன்னரின் ஜெனரல் போல் பேசியது கண்டு கிறிஸ்தவ உலகம் வியந்தது . ஆனால் யூத மிருகங்கள் மட்டும் தமக்குள் சிரித்துக் கொண்டு 'ஆர்தர் பால்பர்' எனும் அன்றைய இங்கிலாந்து வெளிவிவகார செயலாளரை ஒரு அதிர்ச்சி கரமான அறிக்கை மூலம் நிகழ்வை விளக்கக் கோரியது . அதுதான் 'பால்பர் பிரகடனம் '.

       அந்த பிரகடனம் தெளிவாக  .' மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மன்னரின் அனுமதியுடனும் ஆதரவுடனும் பாலஸ்தீனில் யூதர்களுக்கான தனி இராஜியம் ஒன்று உருவாக்கியாக வேண்டும்' என்பதாக அந்த அறிக்கை சொன்னது . அந்த அறிக்கையின் இன்னொரு பகுதி  .' இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் பொது உரிமைகளுக்கோ ,மத உரிமைகளுக்கோ பங்கம் வராது '. என சொன்னது . வேடிக்கை என்னவென்றால் அது பாலஸ்தீனில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் அது குறித்து நின்றது .(' ஜோர்ஜ் ஹப்பாஸ்' தலைமையிலான PFLF போன்ற கிறிஸ்தவ இராணுவ இயக்கங்கள் மண் மீட்புக்காக பாலஸ்தீனில்  போராடியதன் அரசியல் நியாயம் இந்த இடத்தில இருந்தே ஆரம்பிக்கின்றது .)

       உண்மை என்னவென்றால் இந்த பால்பர் பிரகடனம்  ஒரு நயவஞ்சகமான , சூழ்ச்சி மிக்க ஒரு ஒப்பந்தத்தை காட்டி நின்றது . ஒரு ஹிட்லரிசப் பாணியை சற்று வித்தியாசமாக நாடக நியாயங்களோடு இங்கிலாந்து செய்து முடித்தது . அரேபியருக்கு துரோகம் செய்தாவது யூத ஓநாய்களுக்கு பாசறை அமைப்பது என்பதே இங்கிலாந்தின் முடிவு .

      ' இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் பொது உரிமைகளுக்கோ ,மத உரிமைகளுக்கோ பங்கம் வராது '. யாரின் நிலத்தில் யார் முடிவெடுப்பது ! சரி இந்த முடிவின் அர்த்தம் தான் என்ன ?  'யூதர் அல்லாதோர் ' என்ற வாசகத்தின் மூலம் அந்த மண்ணின் பூர்வீக உரிமை யூதர் வசம் ஆகிவிடுகின்றது .இப்போது அங்கு வாழும் யூதர் அல்லாதோர் அரசியல் உரிமைகளில் பங்கு கொள்ள முடியாது . எச்சில் இலையில் பொறுக்கித் தின்னும் அம்மா தாயே !! அரசியல் மட்டும்தான் இங்கு உண்டு !அது வேண்டுமானால் வாழு ! இல்லா விட்டால் ஓடு ! இல்லாவிட்டால் ஓட விரட்டப்படுவாய் ! அப்படித்தானே அர்த்தம் ஆகிறது !?(இத்தகு பிரித்தானிய  படுபாவிகள் எமக்கு தந்த சுதந்திரத்தில் கூட சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் சுயநலம் மிக்க ஒரு அடிமை வாசம் வீசுவதை புரிந்து கொள்ள முடியும் . இந்தியாவின் RSS ,PJP இலங்கையின் பொது பல சேனா ,LTTE போன்ற அமைப்புகளின் கடந்தகால நிகழ்கால அரசியலில் இருந்து நிதர்சன ஆதாரமாக நீங்கள் இதை உணர முடியும் .)

        டாக்டர் அலி அப்துல்லாஹ் அல் தாஹ்பா எனும் வரலாற்று ஆசிரியர் ARAB ISRAEL CONFLICT எனும் நூலில் இந்த பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் 'ஆர்தர் பால்பர்' இந்த பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீகமான அரபுகளை பற்றி எப்படியான கரிசனையோடு கருத்து தெரிவித்து உள்ளார் எனப் பாருங்கள் .

         "சியோனிசம் சரியான பாதைதானா என்பது பற்றி கவலையில்லை .ஆனால் அந்த சியோநிசத்தின் அடிப்படையில் ஒரு யூத ராஜ்யம் பாலஸ்தீனில் உருவாக்கித்தான் ஆகவேண்டும் .ஒரு யூத தேசம் உருவகுமானால் ,பாலஸ்தீனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழு இலட்சம் அரபுகளின் நிலை பற்றி எம்மிடம் கேட்கிறார்கள் . அது பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை .!!!" (இத்தகு பிரித்தானியாவுடன் கூடிக்குலாவி தான் சவூதி கிங்க்டோம் தன்னை கட்டமைத்தது !! இத்தகு பிரித்தானியா அரசியல் ,சிவில் ,கிரிமினல் சட்டங்களின் கீழ் தாம் நாம் கூட இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !!! இந்த நாசமருப்பான நாகரீகம் மூல உடலை அடிக்கடி  நவீனம் எனும் ஆடைகளால் தன்னை மாற்றியுள்ளது தவிர அதன் அடிப்படை ஒன்றுதான் !!! )

                              (துரோக அறிமுகங்கள் இன்ஷா அல்லாஹ்  தொடரும் ...)  

No comments:

Post a Comment