Saturday, December 21, 2013

சிரிய சமர்களில் சவுதி அரேபியாவின் அரசியல் இராணுவ பிரயோகங்கள் - “ஜெய்ஸ் அல்-இஸ்லாம்” ஒரு சாம்பிள்!!







   “இவர்களின் உதடுகளில் சிகரெட்டின் புகைகள் கிளம்பும் நேரங்களில் அவர்களின் வாய்களில் இருந்து சுன்னாவின் வார்த்தைகள் கிளம்பின. டமஸ்கஸ் புறநகர் பகுதி மக்கள் சுன்னாவின் வாசத்தையே விரும்பினர். மல்பரோ சிகரட்டின் நெடியையல்ல. இந்த அரசியல் பந்தர் பின் சுல்த்தானிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.”


     அராஜகத்திற்கும் கொடுங்கோண்மைக்கும் எதிரான மக்கள் கிளற்ச்சி எனும் தலைப்பிலேயே சிரிய போராட்டம் முதலில் அறிமுகமானது. இன்றைய திகதியில் அது ஏகாதிபத்தியங்களின் கரங்களால் நடாத்தப்படும் பொம்மலாட்டம் என்பதும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. பழைய ஏகாதிபத்தியம் என்றால் பிரித்தானியா என்றும், புதிய ஏகாதிபத்தியம் என்றால் அமெரிக்கா என்பதுமே எமது உள்ளங்களில் படிந்து போன உண்மைகள். ஆனால் மத்தியகிழக்கில் சவுதி அரேபியா மேற்கொள்ளும் ஏகாதிபத்திய நகர்வுகள் பற்றி நாம் கவனம் செலுத்துவதில்லை. அரேபியாவை விழுங்க காத்திருக்கும் துருக்கியினதும், ஈரானினதும் ஏகாதிபத்திய திட்டங்கள் பற்றி அறிய அக்கறைப்படுவதுமில்லை. 



   ஜெய்ஸ் அல்-இஸ்லாம் எனும் ஆயுத பிரிவே சிரிய சண்டைகளில் சவுதி அரேபிய அரசால் இறக்கிவிடப்பட்டுள்ள பிரதான அமைப்பாகும். இந்த அமைப்பை லிவா அல்-இஸ்லாம் என்று முன்னர் நாம் அறிந்திருப்போம். அல்லது இஸ்லாமிக் பிரிகேட் என்று அறிந்திருப்போம். இஸ்லாத்தின் இராணுவம் எனும் பொருட்படும் இந்த அமைப்பு 2011-ல் சவுதி அரேபியாவின் உளவமைப்பால் தயார் செய்யப்பட்டு அமெரிக்க மற்றும் மேற்கின் கட்டுப்பாடுகளிற்கும் அப்பால் இயங்கும் தனித்துவமான அமைப்பாக சிரியாவில் களமிறக்கி விடப்பட்டது. 

      அலிபோ, டையர், ஹோம்ஸ் போன்ற பிரதேசங்களின் கட்டுப்பாடுகளை தன்வசப்படுத்தும் தாக்குதல்களை விடுத்து டமஸ்கஸ்ஸை குறிவைத்து தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டு வருவதன் இராணுவ அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். Ghouta -வில் தங்கள் பிரான தளங்களை அமைத்து இவர்கள் டமஸ்கஸ்லை நோக்கிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 1930-களில் பிரான்ஸிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து இந்த பிராந்தியமே சண்டையிட்டது என்பதும் வரலாறாகும். 

       Sheikh Zahran Alloush - ஸலபி மதகுரு. சவுதி அரேபியாவில் தனது மார்க்க கற்கைகளை பூர்த்தி செய்து விட்டு சிரியா திரும்பியவர். இவரின் தந்தை ஒரு பிரபலமான ஸலபி பிரச்சாரகர். சவுதி அரேபியாவின் அரசியல் மற்றும் இராணுவ நலன்களின் அடிப்படையில் டமஸ்கஸ் சண்டைகளை கட்டுப்படுத்தும் தலைவராக இவர் உருவாகியுள்ளார். சுமார் 20 இற்கும் அதிகமான இராணுவ பிரிக்கேட்களை ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தன்வசம் கொண்டுள்ளது. இந்த பிரிகேட்களிற்கான ஆயுததளவாட, நிதி வசதிகளை இவர்களே வழங்கி வருகின்றனர். புனித போரிற்கு வந்து குவியும் நிதிகள் இவர்கள் கரங்களையே வந்தடைகின்றன. அது போல அராபிய தேசங்களில் சிரிய விவகாரங்கள் தொடர்பான மீடியா ரிப்போட்களை இவர்களே கொன்ரோல் செய்கின்றனர். 

       சவுதி உளவுத்துறை ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பை இயக்கினாலும் மிக கவனமாக அதன் உட்கட்டமைப்புக்களை வடிவமைத்துள்ளது. ஜபாஃ அல்-நுஸ்ரா போன்று நாளை தங்கள் மன்னராட்சிக்கு சவாலான ஒரு அமைப்பாக இது இயங்க கூடாது எனும் காரணத்தினால் பிராந்தியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பிரிக்கேட் வசம் இருக்குமாறு மிக கவனமாக திட்டமிட்டு சிரியாவில் தளங்களையும் களங்களையும் உருவாக்கியுள்ளது. ஒரு அணி மோதும் உக்கிரக சமரில் மறு அணியின் உதவியில்லாமல் எதனையும் செய்ய முடியாத கள நிலைகளை பேணி வருகிறது சவுதி உளவுத்துறை. 

       அபூபக்கர் பக்தாதியின் I.S.I.S. எனும் மிகப்பெரும் ஆயுத அணியான “இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் அன்ட் அஷ்-ஷாம்” கூட Ghouta -வில் தனது செயற்பாடுகள் பற்றியோ, அதன் நிலைகள் பற்றியோ எதையுமே தெரிவிப்பதில்லை. அது போலவே ஜபாஃ அல் நுஸ்ராவும் இங்கு திறக்கப்படும் சண்டைக்களங்களில் இருந்து பின்வாங்கும் பாங்கயே கொண்டிருக்கிறது. இதில் பலிக்கடாவாக்கப்பட்டவர்கள் பாவம் F.S.A.-யினர். அது எப்படி நடந்தது?.

        Ghouta ஒரு அமைதியான நிலம். தச்சர்களின் பூமி என்று சிரியாவில் அதனை சொல்வார்கள். மரத்தளபாடங்களிற்கு பெயர் போனது. துருக்கியின் மரத்தளவாடங்கள், கைவினை பொருட்களை கூட இங்கே வாங்கலாம். ஆளும் அரசின் எதேச்சாரங்களிற்கு எதிரான மக்கள் புரட்ச்சி எனும் அரசியல் வலையில் இந்த மக்களும் உள்ளீர்க்கப்பட்டனர். தசப்தங்கள் பலவற்றிற்கு ஒரு குடும்பம் ஏகபோகமாக அதிகாரத்தில் இருப்பதும் அவர்களது மக்கள் விரோத இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளும் இவர்களையும் கிளற்ச்சி நோக்கி செயற்பட வைத்தது. பிரதேசத்தின் போராளிகள் தமக்கான இராணுவ குழுக்களை உருவாக்கி அஸாத்திய இராணுவத்திற்கு எதிராக போராடினார்கள். கலஷ்னிகோவ்களும் ஆர்.பி.ஜி.களும் தான் அவர்களின் கரங்களில் இருந்தன. 

         அரச படைகளின் படுகொலை தாக்குதல்கள் அதிகரித்த போது அவர்களை தடுக்க முடியாமல் தடுமாறிய இவர்களிற்கு உதவ F.S.A. களமிறக்கப்பட்டது. களமிறக்கியது அமெரிக்கா. அதன் குறியும் டமஸ்கஸ்லை குறுகிய சமர்களின் மூலம் விழ்த்துவதன் ஊடாக முழு சிரியாவையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது. லிபியாவின் திரிப்போலி நோக்கிய மேஷனரி யுத்த பாணியை இங்கே F.S.A.-யை வைத்து செய்யப்பார்த்தது செவ்விந்திய தேசம். 

           F.S.A. போராளிகள் நவீன அமெரிக்க ஆயுதங்களுடன் புயலென உட்புகுந்து சண்டையிட்டார்கள். களம் மாறியது Ghouta -வின் விடுதலை பயணம் இப்போது F.S.A.-யால் ஹைஜார்க் செய்யப்பட்டது. அதன் ஆரம்ப விடுதலை போராளிகள் காணாமல் போயினர். வீதிகளின் சுவர்களின் எப்.எஸ்.ஏ.யின் இலட்சணைகள் பொறித்த விளம்பரங்கள் மாத்திரம் சிரிய விடுதலை பற்றி பேசின. 

         வெறும் நவீனரக ஆயுதங்கள் சிரியாவின் விடுதலையை பெற்றுத்தராது என்ற உண்மையும், மக்களை உள்வாங்க வேண்டுமென்றால் இஸ்லாம் எனும் பெனரில் செயற்பட வேண்டும் என்ற உண்மையும் F.S.A.-யிற்கு சற்று லேட்டாகவே புரிந்தது. தவிர்க்க முடிாயமல் லிவா அல்-இஸ்லாத்தின் தலைமையில் F.S.A. இயங்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் உருவாயிற்று. இதற்கு பின்புலத்தில் “பந்தர் பின் சுல்தானிய” அரசியல் இருந்தமை பின்னர் நிரூபணமாயிற்று. இப்போது F.S.A.-யினை ஜெய்ஸ் அல்-இஸ்லாம் ஹைஜார்க் செய்து விட்டது. அதுவும் சும்மாவல்ல முழு மிலிட்டரிக்கல் ஹைஜார்க். களத்தில் F.S.A.-யின் இராணுவம் சண்டையிட்டு நிலைகளை தக்க வைக்க வேண்டுமானால் அதற்கு ஜெய்ஸ் அல்-இஸ்லாத்தின் இராணுவ ஒத்துழைப்பில்லாமல் எதுவுமே முடியாத நிலை. அதன் உப குழுக்களில் ஏதாவதொன்றின் உதவியுடன் தனது இராணுவ இருப்புக்களை பேண வேண்டிய கையறு நிலை F.S.A.-யிற்கு. 

      காரணம் இவர்களின் உதடுகளின் சிகரெட்டின் புகைகள் கிளம்பும் நேரங்களில் அவர்களின் வாய்களில் இருந்து சுன்னாவின் வார்த்தைகள் கிளம்பின. டமஸ்கஸ் புறநகர் பகுதி மக்கள் சுன்னாவின் வாசத்தையே விரும்பினர். மல்பரோ சிகரட்டின் நெடியையல்ல. இந்த அரசியல் பந்தர் பின் சுல்த்தானிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 

    சிரிய சமர்களங்களில் சவுதியின் இராஜதந்திர நகர்வுகளிற்கு இது ஒரு சாம்பிள் மாத்திரமே. ஜித்தாவில் நடக்கும் பென்ஸ் வருடாந்த ஒக்சனில் உயிராயுத தாக்குதல்களிற்கு முஜாஹிதீன்கள் விற்கப்பட்ட கதையை இன்னொரு பதிவில் சொல்கிறேன் இன்ஷாஅல்லாஹ். கீழே ஆர்மி ஒப் இஸ்லாத்தின் பெனரின் கீழ் கட்டுப்படுத்தப்டும் சவுதி அரேபிய ஆதரவு அணிகளின் விவரம் உள்ளது...

Islam Brigades
Islamic Army Brigades
The Army of Muslims Brigades
Sword of Truth Brigades
Sham Falcons Brigades
Signs of Victory Brigades
Conquest of Sham Brigades
Ghouta Shield Brigades
Siddiq Brigades
Tawheed Al-Islam Brigades
South of the Capital Brigades
Badr Brigades
Omar bin Abdulaziz Brigades
Tawheed Soldiers Brigades
Sword of Islam Brigades
Omar bin Khattab Brigades
Muath bin Jabal Brigades
Zubayir bin Al-Awam Brigades
Dhul Nurayin Brigades
Ansar Brigades
Hamzeh Brigades
Air Defense Brigades
Missile Defense Brigades
Tank Brigades
Military Direction Brigades
Dahir Bebers Brigades
Sword of Truth 2 Brigades
Gamloon Warriors Brigades
Slaves of the Merciful Brigades
Murabiteen Brigades
Bedouin Brigades
Sunnah Supporters Brigades
Ahul ul Bayt Brigades
Martyrs of Atarib Brigades
Coastal Defense Brigades
Ain Jalout Brigades
Tawheed Supporters Platoons
Mujahideen Platoons
Abu Dujana Falcons Platoons
Sunnah Platoons
Ansar Platoons
Bara’a bin Azab Platoons

தகவல்கள் : - கைபர் தளம் 

No comments:

Post a Comment